EPISODE-451 TAMIL VERSION
EPISODE-451 தமிழ் விமர்சனம் -23/DEC/2014
அத்தியாயம் -451
இன்றைய அத்தியாயம் ஒரு வித்தியாசமான ஓட்டத்தைக் கொண்டதாக இருந்தது .ஆனாலும் நல்ல ஒரு அத்தியாயமாகவே கருதப் படக்கூடியது!
காட்சி-1
கார்த்திக் விஷ்ணு ராஜியின் சந்திப்பு பற்றியதும் பவித்திரா,மது தமக்குள் பேசிக்கொள்ளுவது பற்றியதுமாகும்.
மலேசியாவில் உள்ள ஒரு தொழிலகத்தின் மூலம் கிடைத்த வேலையை ஒப்புக் கொண்டு ,அங்கு வருவதற்காக வந்த வாய்ப்பைப் பற்றி பேசுவதற்கு
விஷ்ணு ,கார்த்திக் ராஜியிடம் பேசுவதற்காக மூவரும் கூட்டம் நடக்கும் அறைக்கு வரவேண்டி இருக்கிறது.
முதலில் அங்கே கார்த்திக் முதலிலேயே காத்திருக்க விஷ்ணு அவனுக்கு முனனால் வந்து அமர்ந்து மலேசியா பயணம் பற்றிக் குறிப்பிடுகின்றான்.
விஷ்ணு தனக்கு சொந்த விடயங்களின் காரணமாகதான் வர முடியாது என்றும் கார்த்திக்கும்,ராஜியும் மட்டுமே விசுவநாதன் சொன்னபடி போக வேண்டி இருக்கும் என்றும் கூறுகின்றான்!
இதைக் கேட்டு கார்த்திக் ,விஷ்ணுவைத திட்டுகின்றான்!
தனக்கும் ,ராஜிக்கும் எப்போதும் வீட்டில் வாக்குவாதமாகவே இருப்பதாலும்,தாமும் மிக விரைவில் பிரிந்து போக இருப்பதாலும் இப்படிச் சேர்ந்து போவதென்பது ஒத்துவரக் கூடிய விடயம் இல்லை என்றும் கூறி மனக் கசப்புடன் விஷ்ணுவிடம் முறையிடுகின்றான்.
அதற்கு விஷ்ணுவோ பிடி கொடுக்காமல், வேலை விடயமும் வீட்டு விடயமும் வேறு ,வேறு அதைப் போட்டுக் குழப்பக் கூடாது என்று புத்தி சொல்கின்றான்! அவர்கள் போயே ஆகவேண்டும் என்றும் வற்புறுத்துகின்றான்.
ராஜி அவர்களுடன் வந்து சேர்ந்ததும் மலேசியப் பயணத்தைப் பற்றி அவளிடம் கூறுகின்றான்!
அவள் அறைக்குள் நுழையும் போதே கார்த்திக்கும் அவளும் ஒருவரை ஒருவர் முதல் நாள்
சண்டை போட்டவர்கள் போலப் பார்த்துக் கொள்ளுவது வேறாகத் தெரிந்தது!
அதில் உள்ள சுவாரஸ்மான விடயம் என்ன வென்றால் இருவரும் ,உள்ளம் நிறைய அன்பை வைத்துக் கொண்டு,வெளியிலே சண்டைக் கோழிகள் போலத் தோற்றமளிப்பது வேடிக்கையாகவும் இருக்கிறது!
அவள் வந்த கையுடன் தான் வரப் போவதில்லை என்பதையும் விஷ்ணு அவளுக்கு சொல்லி வைப்பதுடன் ,இருவரையும் திட்டம் போட்டு ஒன்றாக அனுப்பிவைக்கவில்லை என்பதையும் அவன் குறிப்பிடுகின்றான்!
அவன் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டு செல்ல,கார்த்திக் ராஜியிடம் தான் இதை எதிர் பார்க்கவில்லை என்று சொல்கின்றான்!
அத்துடன் ராஜிக்கு தன்னுடன் வர விருப்பமில்லாமல் இருந்தால் விசுவநாதனிடம் சொல்லிவிட்டு
அவள் நிற்கலாம் என்கின்றான்.
ஆனால் அதற்கு அவள் தனக்கு அதில் ஒரு பிரச்சனை இல்லைஎன்றும் அவனுக்கு விருப்பம் இல்லாவிட்டால் அவன் விசுவநாதனிடம் சொல்லிவிட்டு நிற்கலாம் என்கின்றாள்.
இருவரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஆணவத்தின் உச்சியில் நின்று கொண்டு
தம்மைத் தாமே ஏமாற்றும் காட்சியாகத்தான் அது அமைந்தது.
கடைசியில் கார்த்திக் அங்கே இருவரும் போவதால் வரும் சில விளைவுகளை சுட்டிக் காட்ட முனைந்த போது,அவள் அங்கு சென்று நடக்கும் விதமாக நடந்து கொண்டால் எதையும் சமாளிக்கலாம் என்ற கருத்துப் பட மறுமொழி கூறி அவனை மடக்குகின்றாள்!
அவனும் அதைக் கேட்டு மனதுக்குள் குமைகின்றான் அவளும் பதிலுக்கு அவனது புத்திமதிகளுக்கு
செவி சாய்க்கத் தான் தயாரில்லை என்பது போல மனதுக்குள் முறுகுகின்றாள் !
இருவரையும் பார்க்க நமக்கு வேடிக்கையாகத் தான் இருந்தது!
காட்சி-2
பவித்ராவும் மதுவும் கார்த்திக் ராஜியைச் சேர்த்துவைக்க தமது திட்டத்தை நகைச் சுவையாக செயலாற்ற,அதைப் பற்றி பேசும் காட்சி!
இருவரையும் உரிமை என்ற பேரில் சேர்த்த்வைப்பதா இல்லை ஒருவரில் ஒருவருக்கு இரக்கம் வரச் செய்து ,ஒருவர் ஒருவரைக் கவனிக்கப் பண்ணுவதா என்பதில் அவர்கள் மும்மரமாகத் திட்டம் தீட்டுகின்றார்கள்
காட்சி-3
ஏதோ கப்பல் கவிழ்ந்தது போல யோசனையுடன் நின்று கொண்டு இருந்த விஷ்ணு வைத்தேடி
கார்த்திக்கும் அன்பு மாமாவும் வருகின்றார்கள்.
பலமுறை முயன்றும் அவனிடம் காலையில் இருந்து பதிலொன்று மில்லாததால் கவலையடைந்த இருவரும் அவனை கண்டுபிடித்து அலுவலகத்திலேயே அதை பற்றி விசாரிக்கிறார்கள்!
அவனும் ,பயந்து கொண்டே நடந்த விடயத்தை எடுத்து உரைக்கின்றான்!
தான் ஒரு பெரிய பிழை விட்டு விட்டதாகவும் கூறுகின்றான்.அன்புமாமா நகைச்சுவையாக அவனைச் சீண்டுகின்றார்.
முன்னர் நாம் பார்த்த மாதிரியே அவனது வண்டி ஒரு துவிச்சக்கரம் ஓட்டிவந்தவனோடு மோதிய
சம்பவத்தை விமர்சிக்கின்றான்.
காட்சி-4
விஷ்ணு ,மணிமேகலையை கூட்டிக் கொண்டு வெளியே போவதும் ,உல்லாசமாக அவர்கள்
பேசிக் கொண்டு போனதும் ,விபரீதமாக,விபத்துனடந்ததும் சொல்லப் படுகிறது.
கடைசியில் சம்பவம் நடந்த இரதத்தில் அடிபட்டவன் உயிருக்குத் துடித்துக் கொண்டு இருக்க
விஷ்ணு ,தனது வண்டியை நிறுத்தாமல் போவதுடன் காட்சி முடிகிறது!
ஒட்டுமொத்தமாக ஒரு நல்ல அத்தியாயம் !
நடித்தவர்கள் எல்லோரும் உணர்வு பூர்வமாகவும் நகைச் சுவையாகவும் சிறப்பாக நடித்த பாகம் !
பாராட்டுக்கள்!
மீண்டும் ஆசிகளுடன்!
.

No comments:
Post a Comment