EPISODE-448 THURSDAY 18/DEC/2014
EPISODE-448
அத்தியாயம்
-448 THURSDAY-18/DEC/2014
அருமையான
அத்தியாயம்! ரசிகர்கள் எல்லோரும்
ஆவலுடன்
எதி பார்த்துக் காத்திருந்த கார்த்திக் ராஜி யின்,
சந்தோஷமான
வார்த்தைப் பரிமாற்றங்களுக்கு ஒரு வெள்ளைக் கொடி காட்டியது போன்ற ஒரு பாகம்
என்றும் சொல்லலாம்!
காட்சி-1
விஷ்ணு
மணி மேகலையின் உறவுக்கு ஒரு அர்த்தம் கற்ப்பிப்பது போன்ற
அத்தியாயம்
இது.
மணிமேகலை
இடம் இருந்து அவளது உள்ளக்
கிடைக்கையயை அறிந்து
கொள்ளும்
முயற்சியில் விஷ்ணு
முழுதாக வெற்றியடைவதை
மிகவும்
நகைச் சுவையாகவும்,அழகாக ,மறைமுகமான விதத்தில்
தந்தது
மிகவும்
அற்புதமான முயற்சி!
இருவரும்
மிக நன்றாகவும் நடித்திருந்தார்கள்!
கார்த்திக்
,ராஜிக்காக வீட்டில் காத்திருக்கும் காட்சி!
காட்சி-2
ராஜி வீட்டுக்குள் நுழையும்போது அவளுக்காக காத்திருந்தவன் போலிருந்த
கார்த்திக்,அவளையே வைத்த கண்
வாங்காமல் பார்க்கிறான்.அவளும் அதைக் கவனித்தும்
கவனிக்காதவள் போல கையில் ஒரு
கடித உறையுடன்
உள்ளே வருகின்றாள்.
அவள் கடிதத்தை உடைத்துப்
பார்த்துக் கொண்டு இருக்கும் போதே
அவளிக்கு
அவளது சிநேகிதி வக்கீலிடமிருந்து வெள்ளிக் கிழமை திரும்பவும் விவாகரத்து
விடயமாக இடண்டாவது சந்திப்புக்கு வரச் சொல்லி அழைப்பு
வருகிறது!
கார்த்திக்
அதையும் கேட்டுக் கொண்டு வேண்டுமென்றே அவளுக்கு
வீம்பு செய்வது போல சில
பாட்டுக்களை தனது கணனியில் பாடச
செய்கின்றான்.
ராஜி அதைக் கேட்டு ,கடுப்பாகி
பாட்டை நிறுத்தச் சொல்லி விட்டு ,அவன்
முன்னால் அமர்கிறான்!
ராஜி விடயத்தைக் கூறியாதும் ,அதை விரும்பாதவனாக,நாளைத்
தள்ளிப் போடமுடியுமா என்று வினாவுகின்றான்!பல
நொண்டிச் சாட்டுகளும் சொல்லுகின்றான்!
ராஜிக்கு
அவனது உள்மனம் சரியாகப் புரிந்தாலும்
,பிடி கொடுக்காது ,அவள் அவனுடன் பேசிக்கொண்டே
இருக்கின்றாள்.
அவனோ தான் வக்கீலைச் சந்திக்க
முன்னர் ஆயத்தமாகப் போக வேண்டு மென்றும்
அதற்க்கு தான் ஆயத்தம் இல்லை
என்றும் கூறுகின்றான்.
பின்னர்
ராஜி ஆலோசனை சொன்னபடியே ,அங்கே
வந்து தனது உள்ளத்தில் உள்ளதைக்
கூறுகின்றேன் என்று அவளுக்குச் சொல்லுகின்றான்.
அவளும்
அவனை கூட்டத்திற்கு போவதற்கு ஆயத்தமாக இருக்கும் படி சொல்லிவிட்டு
நீங்குகின்றாள்!.அவனும் அவள் போவதையே பார்த்துக்
கொண்டு இருக்கின்றான் !
காட்சி
-4
காலையில்
கார்த்திக் ராஜி
வீட்டில் ஒரே காய்ச்சல் களேபரமாக
இருக்கின்ற காட்சி!
வேலைக்கும்
போவதற்கு கள்ளம் போட்டுக் கொண்டு
இன்னும் கம்பளியால் மூடிக் கொண்டு தூங்குவது போலவும்.கடும் ஜூரத்தால் கஷ்ட்டப்
படும் கார்த்திக்கை காண.அவனது அறைக்குள் வந்த
ராஜிக்கு சிரிப்பு சிரிப்பாக வருகிறது!
விவாகரத்து
ஆலோசகரிடம் போகாமல் கடத்துவதற்க்காக அவன்
பண்ணும்
கூத்தை
நனறாகவே அறிந்து கொண்டு ராஜி
அவனிடம் நன்றாகவே
கேள்விகள்
கேட்டு மடக்குகின்றாள் ,அருமையான காட்சி!
கடைசியில்
அவன் வெல்லுகின்ரான் என்பது போல
காட்சி
முடிகிறது! இருவரும் ஒருவரை நன்றாகப் புரிந்து
வைத்திருந்தும்,ஒருவருக்கு ஒருவர்விட்டுக் கொடுக்காது
தமது ,பிடியிலிருந்தும் விலகாது,ரசிகர்களை ,சந்தோஷப் படுத்தும்
விதமாக
,அருமையாக,படைத்த காட்சியாக அது அமைந்ததென்றே சொல்ல
வேண்டும்!
இயக்குனருக்கு
பாராட்டுக்கள்!
இருவரதும்
நடிப்புக்கும் பாராட்டுக்கள்!
மீண்டும்
ஆசிகளுடன்!

No comments:
Post a Comment