Tuesday, December 23, 2014





இவள் ஒருத்தி நுழைகின்றாள் ஏன்தான் இங்கு?


                                    இதயங்களில் நிரம்பி நிற்கும் எம் காதலுக்கு
                                     விதம் விதமாய் பிரச்சனைகள் வருவித்து

                                    அகம் முழுதும் வேதனைகள் அனுபவித்து
                                     மனம் வெறுத்து ,முகம் கடுத்து அங்கலாய்த்து

                                   சகவாசம் வேண்டாமென்று தள்ளி நின்று
                                    சுகங்கள் அனைத்தையும் வெறுத்து,மறுத்து

                                   இகமதனில்,தனியே வாழ முடிவு செய்து
                                    பகை வளர்க்காமல் பக்குவமாய் வாழ நினைத்து

                               வெகு விரைவில் விவாகரத்துக்கு வழி கோலும் போது

  இவள் ஒருத்தி நுழைகின்றாள் ஏன்தான் இங்கு?

No comments:

Post a Comment