Monday, December 15, 2014

EPISODE-444 -FRIDAY-DEC /12/2014

அத்தியாயம்-444

இன்றைய அத்தியாயம், கூடிய பங்கு  கமல்,ராஜி பற்றியதாகவும் விஷ்ணு ,மணிமேகலைக் காட்சியோடு,இடைச்  செருகலாக மது,ஜக்குலின்,பவித்ரா பற்றியுமானதாக இருந்தது!

காட்சி-1
ராஜி யோசனையில் இருக்கும் கமலுடன் வந்து அவனது கவலைக்கு   காரணம் விசாரிக்கின்றாள்!.
கமல் அவளோடு வழமை போல் இல்லாமல் மரியாதையாக  பேசுகின்றான்.
அது ராஜிக்கு சங்கட மாக இருக்கிறது!.
அவன்  இப்படிப் பேசுவது ஏன் என்ற  காரணத்தை  ஓரளவுக்கு ஊகித்தவள் போல அவனிடம் அதைப் பற்றி விசாரிக்கின்றாள்.
அவனும் விட்டுக் கொடுக்காமல், மறைமுகமாக,அவள் தன்னில் அக்கறை இல்லை என்றது போலவும் கார்த்திக்கும் ,ராஜியும்  இன்னும் ஒருவருக்கொருவர் மனதில் இடம் வைத்திருப்பது தனக்குத் தெரியும் என்பது போலவும் கதை  அளக்கிறான்.
தான் திரும்பவும் ஊருக்குப் போக முடிவு செய்திருப்பதாகவும் அவளுக்கு சொல்கின்றான்!
அவனது எண்ணம் அவளைத் தன்பக்கம் இழுப்பதற்கான முயற்ச்சியில் செயல்படுகின்ற   தென்பதை காட்டக் கூடியதாகவே  இருந்தது!
இதை கேட்டு ராஜியும் அவனுக்கு ஆறுதல் சொல்வதோடு ,தான் எதற்க்காக அவனை கார்த்திக்குக்கு

முன்னாள் திட்டவேண்டி வந்ததற்கும் காரணம் சொல்கின்றாள்!
அத்துடன்,தமது விவாகரத்துப் பற்றிய முடிவில் எந்த விதமாற்றமும் இல்லை என்பதையும் சொல்கின்றாள் .!
அதே வேளையில் தனது நிம்மதியும் சந்தோஷமும் தான் கமலுடன் இருக்கும் போது இருப்பதாகவும் சொல்கின்றாள்!
அதைக் கேட்டு அவனும் மகிழ்ந்தது  போலத் தெரிந்தது.
காட்சி-2
விஷ்ணு மணிமேகலை காட்சியில் மணிமேகலை விஷ்ணு விடம் தனது மனக் கிடக்கையை மிகவும் நாசூக்காக எடுத்துச் சொல்லும் காட்சி இது.
தன்னை பெண்  பார்க்க வந்ததையும்,அமெரிக்கா மாப்பிள்ளைக்கு தன்னைப் பிடித்துக்  கொண்டதையும் ஆனால்  தனக்கு    வேறொருவரில் விருப்பம் இருப்பதால் ,அது சரிவராது  என்றும்  சொல்கின்றாள்.
 .
அதைக் கேட்டு முதலில் மனம் சங்கடப் பட்டாலும் விஷ்ணு சுதாகரித்துக் கொண்டு நகைச் சுவையாக அதைச் சமாளித்துக் கொண்டு போகிறான்.
அவனுக்கு,  மணி மேகலைக்குத்   தன்னில் தான் விருப்பம் என்று  தெரிந்தாலும்   தெரியாதவன் மாதிரிநடித்துச்
சிரிக்கின்றான்!
இருவரதும் அந்தக் காட்சி மிகவும் அற்புதமாக இருந்தது!

காட்சி-3
இதில் மது வும் ஜகுலினும்  சாப்பாட்டு அறையில் பேசிக்  கொண்டு இருக்கின்றனர் !
பவித்ரா வந்து மதுவிடம்  தனியாகப் பேச  வேண்டும் என்று கேட்கின்றாள்!
இது ஜகுலினுக்கு  பிடிக்கவில்லை  அது முடியாது என்று முதலில் பவித்திராவுக்குச்  சொன்னாலும் 
பின்னர் அவள்  ,இவர்கள் இருவரையும் பேசவிட்டு விட்டு மறைந்து நின்று கேட்கின்றாள்!
மதுவை ஒன்றுக்கும் ஒத்துக் கொள்ளாதே என்று எச்சரிக்கையும் விட்டு நீங்குகின்றாள்
அவர்கள் கார்த்திக் ராஜியை எவ்விதம் ஒன்று சேர்க்கலாம் என்று பேசிக் கொள்ளுகின்றார்கள்.
இருவரும் சேந்து அவர்களைச் சேர்ப்பதற்கு    எடுக்கும் முயற்சியில்   ஒன்று சேர்ந்து உழைப்பதாகவும் முடிவு  எடுக்கின்றார்கள்! பவித்ரா சந்தோஷமாக செல்கின்றாள்.
ஜக்குலின்  முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது. மதுவிடமும் முகம் கொடுத்து பேசமால் அவளும்
விலகுகின்றாள்.
காட்சி -4
கடைசிக்  காட்சி.
இதில் ராஜிக்கு கமலின்  அக்காளிடம் இருந்து தொலை பேசி  அழைப்பு வருகிறது.
அக்கா இவளிடம் பேசும் போது ஒட்டு  மொத்தமாக  இவளது கதை முழுபதும் தெரிந்தவள் போலவும்,
பேசியதோடு எப்போது இவளது விவாக ரத்து நடக்கும் என்ற கேள்வியுடன்,கமலின் பெற்றோர்  அவனை  நினைத்து
கவலையடைவதாகவும் தாங்கள் விவாகரத்து முடிந்த கையுடன்,அவளைப் பெண்பார்க்க வர இருப்பதாகவும்
சொல்லி  ஒரு குண்டையே தூக்கிப் போடுகின்றாள்.
ராஜி இதைக் கேட்டு திகைப்பும்,ஆத்திரமும் அடைந்த வளாக கமலது  அறைக்கு வந்து வாதாடுகின்றாள்.
கமலும் அவளை இனிமேல் தனது தமக்கையிடம் இருந்து அழைப்பு வந்தால் பேச வேண்டாம் என்று சொன்னாலும்
விவாக ரத்து முடிந்தபின்னர் ராஜி  என்ன செய்வாள் என்று கேட்கின்றான்!,
ராஜி இதைக்  கேட்டு ஆத்திரம் அடைந்து அவனைவிரைவில் ஒரு திருமணத்தைச்  செய்து கொள்ளும்படி
கேட்கின்றாள்.அவன் மறுக்கின்றான்.அவள் அவனை கண்டபடி திட்டித்  தீர்க்கின்றாள்
அது மட்டுமல்லாமல் இத்தனை காலம் தனக்குக் கல்யாணம் என்று தெரிந்ததும் மற்றவர்கள் செய்வது போல நீயென்ன இறந்தா போவிட்டாய்  என்று கேட்டதுடன் நிற்காமல் .மற்றவன் ஏதேதோ   எல்லாம் செய்து  அன்பை கட்டுகின்றார்கள் என்றும் நீயென்னா கையை தனக்காக வெடடுவாயா  என்றும் கேட்டுக் கொண்டே இவனைக் கவனிக்காமல் மற்ற பக்கம் திரும்பிக்கொண்டு,இவன் தனக்காக இப்படித் தன வாழ்க்கையை வீணடிக்கின்றானே   என்ற  ஆதங்கத்தில் அவள் புலம்பிக்கொண்டே இருக்க கமாலோ உண்மையாகவே தனது கையிலிருந்த கத்தியால் தனது கையை அறுத்துக் கொள்கின்றான்.
அவளிக்கு காட்டுவதற்கு செய்வது போலிருந்தது  அவனது இந்தச் செய்கை..
அசதியாகத் திரும்பிப் பார்த்த ராஜி  அவன் கையை வெட்டிக் கொண்டதைக்கண்டு திகைத்து அவனது பெயரை அழைத்துக் கொண்டே மயங்கி மேசையில் விழுந்த கமலின் தலையைத் தாங்குகின்றாள் .
அவளது சத்தம் கேட்டு அலுவலகத்து மற்றைய சில ஊழியர்களும் ஓடி வருகின்றனர்.
அத்துடன் காட்சி முடிகிறது!

ஒட்டு மொத்தமாக வித்தியாசமான ஒரு முடிவுடன் கூடிய அத்தியாயமாகும்!
கார்த்தி வரவேயில்லை.ஆனால் அவனை பற்றிய கதையே அங்கு நடந்தது.
மீண்டும் ஆசிகளுடன்......!


.



No comments:

Post a Comment