EPISODE-449-TAMIL
அத்தியாயம்
-449 -FRIDAY-19/DEC/2014
இன்றைய
அத்தியாயம் மிகவும் சாதாரணமான
,ஆனால் சுவாரசியமான அத்தியாயமாகத்
தெரிந்தது!
காட்சி-1
குளிர்
என்று ராஜிக்கு பொய் சொல்லிவிட்டுப் பின்னர்
அலுவலகத்துக்கு வந்து வேலை செய்யும்
கார்த்திக்கை ,விஷ்ணு கேலிபண்ணி அவனுக்கு
புத்தியும் புகட்டுகின்ற
காட்சி மிக அருமையாக இருந்தது!
இருவருமே
,முன்னர் போல அன்போடு பழகுவதும்,உண்மையான ,அக்கறை எடுத்துக் கொள்ளுவதுவும்
பார்ப்பதற்கும் கேட்பதற்கும்
மிக சந்தோஷமாக இருந்தது!
நகைச் சுவையும் கலந்து ,ஒரு அன்பான
வாழ்க்கையின் தத்துவத்தை விஷ்ணு ,கார்த்திக்கு , தனக்கே
உரிய பாணியில் சொல்லுவதும்,அதைக் கேட்டு
கார்த்திக் சிந்திப்பதுவும்
,இருவரதும் நடிப்புக்கு மெருகூட்டவது போலிருந்தது!
காட்சி-2
அஷ்வின்
,ஜகுலின் காட்சியும் அவர்களுக்கும்
முறையே பவித்ரா ,மது மேலே உள்ள
அன்பும் அக்கறையும் பற்றியும்,நட்பும் அதையும் மீறி
வருகின்ற பாசத்துக்கும் ,ஈர்ப்புக்கும் வரைவிலக்கணங்களைத தாமே தேடுவதாகவும்
இருந்தது!
காட்சி-3
கமலின்
தமக்கை அவனைத் தேடிக் கொண்டு
அலுவலகம் வந்து அவனைத் திட்டித் தீர்க்கின்றாள் .
இவன் அடம் பிடித்துக் கொண்டு
தனக்கு வரும்,திருமணப் பேச்சுக்களை
தட்டிக்
கழிப்பதால் அவனது குடும்பமே கவலை
அடைந்து இருப்பதையும் அவள் சுட்டிக் காட்டுகின்றாள்.
அத்துடன்
ராஜியும் இவனது இந்த நிலைமைக்கு
காரணம் என்றும் அவள் எங்கே
என்றும் கேட்டு வைக்கின்றாள்!
கமல் அவளைக் கண்டித்து இப்படித்
தான் இருப்பதற்கு ராஜி யில் பிழை
இல்லை என்றும் அதற்க்கு தானே
முழுக் காரணம் என்று சொல்லி
அவளை ஆறுதல் படுத்த
முனைகின்றான்!.ஆனால் அவள் கேட்பதாயில்லை
.
இவர்கள்
இருவரதும் சூடு பிடித்த
வாக்கு வாதத்தை, ராஜி கேட்க வேண்டியதாகின்றது
.அதை கமழும் அவதானித்து விட்டுக்
கவலை அடைகின்றான் .
காட்சி-4
இந்தக்
காட்சியில் கமல் தமக்கை அலுவலகத்தை விட்டு
நீங்கிய பின்னர்
ராஜியைத்
தேடிச் சென்று ,சந்தித்து மன்னிப்புக்
கேட்கின்றான்,
ஆனால் அவளோ இவனிடம் ,அவனது
மனதை மாற்றிக் கொண்டு
வேறு யாரையாவது ,திருமணம் செய்து கொள்ளும்படி பணிக்கின்றாள்.
அதற்கு
அவன் வாழ்ந்தால் வேறு ஒரு பெண்ணோடும் தனக்கு வாழ்கை இல்லை
என்று அடம் பிடிப்பதுடன்,அவன்
அவளது நினைப்புடனேயே தனது வாழ்வைக் கழித்துவிடுவேன்
என்றும் சூளுரைக்கின்றான்.!
கமலின்
பிடிவாதமும்,திடமும்.அவன் தன்னில்
வைத்திருக்கும் அளவுகடந்த
காதலின் தன்மையும் அவளைக் கலங்கச் செய்கிறது..
அவள் கண்கலங்கி ,ஒரு குற்ற உணர்ச்சியுடன்
நிற்க ,காட்சியும் பாகமும்
நிறைவடைகிறது!
கமல் அவளில்காட்டும் இந்தக் காதல்,புனிதமானதா
அல்லது,இவளை அடைய வேண்டும்
என்ற வெறியின் பிரதிபலிப்பா
என்பது வரவிருக்கும் அத்தியாயங்களில் நடக்க
இருக்கும் நிகழ்சிகளைக் கொண்டே அறியலாம்
அதுவரை
காத்திருப்போம்!
ராஜி என்னதான் கமல் காதலை உருக்கி
வடித்து மொழிந்தாலும் ,அவளது .காதலும் ,இதயமும்
,கர்த்த்திகின் பக்கம் என்பதும்,தனது
கார்த்திக்குக்கு
தன் மேல் உள்ள பாசமும்
காதலும் மீண்டும் திரும்பும் சாத்தியக் கூறுகளையும்
அவள் உணர்வதால் அவளது இதயம் சரியான
முடிவை எடுக்கும் என்று நாம் நம்ப
வேண்டியதுதான்!
மீண்டும்
ஆசிகளுடன்!

No comments:
Post a Comment