Thursday, December 18, 2014


EPISODE-447 WEDNESDAY 17/ DEC/ 2014
அத்தியாயம்-447

இன்றைய  அத்தியாயம் மிகவும் உணர்வுபூர்வமானதும் சிறந்த நடிப்புத்திறனை வெளிக்காட்டும் பாகமாகவும் அமைந்தது!

காட்சி-1
விஷ்ணு,மணிமேகலை இருவரும் தமது உள்ளத்தில் இருப்பதைப் புலப் படுத்தும் வகையில் நகைச்சுவையுடன் பேசிக் கொள்ளுகின்றார்கள்
இருவரினதும் நடிப்பும்,மகிழ்ச்சி தருவதாக இருந்தது!

காட்சி-2
மது ,ஜக்குலின்,மது,பவித்ரா,பிறகு பவித்ரா அஷ்வின் -இந்த நால்வரதும்.
மன ஓட்டங்களும்,நட்பும் ,வெறும் நட்புடன் நில்லாது அதை மீறி ஒரு உணர்வுபூரவமான அன்னியோன்னியத்தை கதையில் கொண்டு வருவதாகவும்,சாதாரண,வேலைக்கு வரும் இளம் சமுதாயத்தினரிடையே
உள்ள உணர்வுப்  போராட்டங்களையும் காட்டுவதாக அமைந்தது!

காட்சி-3
ராஜி ,கமல் மீண்டும் தமது கோப தாபங்களை மறந்து மனம் விட்டுச் சிரித்துக்  கதைப் பற்றியது..
இருவரும் சந்தோஷமாக இருப்பதை, கண்டு மனம் கடுக்கும் கார்த்திக்
ஒன்றும் சொல்லாமலேயே அவர்களை கண்டு விட்டு செல்கின்றான்!

காட்சி -4
இதுவே இந்த பாகத்தின் ,முக்கியமான கட்டமாகும்!
வீட்டில் ஒன்றாக வாழ்ந்து கொண்டு வீட்டை உதாசீனப் படுத்தும் ராஜியை
கார்த்திக் கண்டிக்கிறான்.
அவனது நினைப்பில் ,ராஜி .கமலுடன் அதிக நேரம் ,தொலை பேசியில்
கதைத்து ,நேரம் வீணடிப் பதுடன் அவனால் இவளுக்கு  ஏதோ ஆபத்து வரக் காத்திருக்கின்றது
என்ற உள்ளுணர்வும் காரணம் ஆகும்!
கமலுக்கு ராஜி ஊக்குவிப்பது போன்ற  எண்ணமும் கார்த்திக்கு இருப்பதால்.திரும்பத்,திரும்ப அவளை அவன் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கின்றான்.கமலுடன் இவள் பேச்சவார்த்தைகளை நிறுத்திக் கொள்ளும் படியும் கேட்டுக் கொள்ளுகின்றான்.
தாம் இருவரும் விவாகரத்துச் செய்யும் வரை ,தனக்கு அவளது ,பாதுகாப்பில் அக்கறை உண்டு என்பதை
சொல்லாமல் சொனாலும்,ராஜி அவனது உதவி தேவை இல்லை என்பது போல அவனை எடுத்தெறிந்து பேசுகின்றாள்!கமலுடன் கதைப்பதை தான் நிற்ப்பாட்ட போவதில்லை எனவும் சூளுரைக்கின்றாள்  !
வாக்கு வாதம் தொடர்ந்து   இருவரும் சண்டை பிடித்துக் கொண்டே ராஜி தனது அறைக்குச் செல்ல
கார்த்திக்,மனவுடைவுடன் நிற்பதோடு   பாகம் நிறைவு பெறுகின்றது!
கார்த்தி சுதுதி ,சித்தார்த் நன்றாகவே  நடிக்கின்றார்கள்!.
கார்த்தி,சுருதி வழைமை போல அற்புதமாக ,யதார்த்தமாக நடித் திருந்தார்கள்!
மீண்டும் ஆசிகளுடன்!

No comments:

Post a Comment