EPISODE-450 TAMIL VERSION
EPISODE-450
அத்தியாயம்- 450 MONDAY 22/DEC/2014
இன்றைய அத்தியாயம் மிகவும் அழகான, அமைதியான பாகமாக
அமைந்தது!
காட்சி-1
விஷ்ணு ,மணிமேகலை விடயத்தில் ஒரு குழப்பத்தில் இருக்கிறான்!
மணிமேகலை தன்னை மனப் பூர்வமாகக் காதலிப்பது தெரிந்தாலும்
தனது மனம் இன்னும் லக்ஷ்மியை மறக்க முடியாமல் இருப்பதை
எண்ணி குழப்பம் அடைகின்றான்.
கார்த்திக் அவனது குழப்ப நிலையைக் கண்டு அவனை ஆறுதல் படுத்தி
அவனுக்கு ,மணிமேகலை மீது உள்ள அன்பை பற்றி விசாரிக்கின்றான்.
விஷ்ணுவும் குழப்பத்துடன் அவளைத் தனக்குபிடித்துக்கொண்டிருப்பதாகவே சொல்கின்றான்
அதைக் கேட்டு கார்த்திக் ,அவனிடம்,போய் மணிமேகலையிடம் இவனது மனதைத் திறந்து பேசச் சொல்லுகின்றான்.
காட்சி-2
விஷ்ணு மணிமேகலையை வரச் செய்து மிகவும் நகைச் சுவை கலந்த வசனங்களுடன் அவளைப் பேசவைக்கின்றான்!.
மணிமேகலைக்கு விஷ்ணுவின் உள்ளத்தைப் புரிந்து கொண்டவள் போல
அவளும் ,பிடி கொடுக்காமல் தனது மனக் கிடக்கையை வெளிப்படுத்து கின்றாள்
அதன் பின்னரே விஷ்ணு மணிமேகலையிடம் சென்று அவளோடு வெளியே போக முடிவெடுத்து அதையும் அவளிடம் சொல்லுகின்றான்.
கார்த்திக்.விஷ்ணு .மணிமேகலை மூவரும் இந்தக் காட்சியில் மிகவும் உணர்வு பூர்வமாக நடித்திருக்கின்றார்கள் !
காட்சி -3
பவித்ராவும் மாதவியும் சாப்பாட்டு அறையில் சந்தித்துப் பேசும் காட்சி இது.
கார்த்திக்கை,அலுவலகம் முழுதும் ,தேடி காணாமல் அங்கே அரும் மாதவியை பவித்திரா ,வரவேற்று தன் முன்னே உட்கார வைக்கின்றாள்!
யாரைத் தேடுகின்றாய் என்று கேட்டதற்கு மாதவியும் கார்த்திகைத் தேடுவதாகக் கவலையுடன் பதில் சொல்லுகின்றாள்.
அதைக் கேட்டு ,அவளது உள்நோக்கத்தை நன்றாகவே அறிந்து வைத்திருக்கும் பவித்திரா கார்த்திக் ஏதாவது கூட்டத்திலோ ,ராஜியோடோ இருப்பார் என்று கூறி அவளைக் கேலி செய்கின்றாள்.
அதனால் ஆத்திரமும் அங்கலாய்ப்பும் கொள்ளும் மாதவி ,கார்த்திக் ,ராஜிக்கு இடையே பிரிவினை ,கமல் மூலமாகக் கூடிக்கொண்டு இருப்பதாக பவித்திராவுக்கு ,எரிச்சல் மூட்டும் விதமாக தகவல் கூறுகின்றாள் .
அதை மறுத்து பவித்திரா கார்த்திக் ராஜி இப்போது இன்னும் நெருங்கிக் கொண்டுவருவதாகவும் அவர்களது காதல் இன்னும் உயிரோடு இருப்பதாகவும் பொருள் பட மாதவிக்கு விளக்கம் கொடுக்கின்றாள்!
அதைத்தொடர்ந்து கார்த்திக் அறைக்குள் நுழைவதையும் பவித்திரா,மாதவிக்கு சொல்லிவைப்பதோடு..அவனைத் தொடர்ந்து ராஜியும் அங்கு வருவாள் என்று சொல்கின்றாள்!
அவள் சொன்னது போலவே ராஜியும் அங்கு வந்து சேருகின்றாள்!
காட்சி-4
கார்த்திக்கும்,ராஜியும் அறைக்குள் வந்ததைக் கண்டும்,பவித்திரா அவர்களைப் பற்றி சொன்ன கதைகளையும் கேட்டு மாதவியின் முகம் ஏமாற்றத்தில் வாடுகின்றது.
அதை விட பவித்திரா அவளுக்கு மேன் மேலும் புத்தி புகட்டுவது போல ,அவர்கள் இருவரும் ,ஒருவரை ஒருவர் பார்ப்பதையும்,கண்கள் பேசுவதையும்,கார்த்திக்,ராஜிக்கு சக்கரை கொடுப்பதையும் ராஜி சந்தோஷமாக ,அதை ஏற்றுக் கொண்டு முறுவலிப்பதையும்,கார்த்திக் அவளைப் பார்த்து ,மகிழ்வுடன் புன்னகை செய்வதையும் அப்படியே ஒரு தத்ரூபமான நேர்முக வர்ணனையாகவே கொடுத்து மாதவியை அப்படியே திகைப்பில் ஆழ்த்தி வேதனையும் படச் செய்கின்றாள்!
கார்த்திக்கும்,ராஜியும் இந்தக் காட்சியில் ஒரு சொல்லுத்தானும் பேசவேயில்லை.,முகபாவனைகளும், செய்கைகளுமே அவர்களின் அமைதியான போக்கையும்,இருவருக்கும் அடிமனதில் இருக்கின்ற உணர்வுகளின் வெளிப்பாட்டையும் மாதவிக்கு சந்தேகமில்லாமல் எடுத்துக் காட்டுவதாக இருந்தன..
பவித்திரா அவர்களைப் பற்றி மாதவிக்கு வருணிப்பதோடு, மாதவியின் முக மாற்றங்களையும் பார்த்து ,திருப்தி கொண்டது போலிருந்தது!
கடைசியில் மாதவியைஎச்சரித்து இனிமேல் ,அவர்களது வாழ்க்கையில் தலையைப் போடுவதை விட்டு,விட்டு இவளை தன் வேலையில் கவனமாக ,இருந்து முன்னேறுகின்ற வழியைப் பார்க்கும்படிக் கூறிச் செல்லுகின்றாள்
கார்த்திக்கும் ராஜியும் கண்களால் பேசிக்கொண்டே மேசையில் இருந்து காப்பி குடித்துக் கொண்டு இருக்க ,எரிச்சலும்,அவர்களைப் பார்த்து புகைக் சலும் கொண்ட மாதவி அவர்கள் இருவரையும் மாறி ,மாறிப் பார்த்தபடி இருப்பதுடன் காட்சி முடிகின்றது!
கார்த்திக் ராஜி வழமை போல அருமையான நடிப்பு!
மாதவியாக நடித்த அனுவும்,பவித்திராவும் மிக நன்றாகவே நடித்திருந்தனர்!
ஒட்டு மொத்தமாக ஆறுதலான உணர்வு பூர்வமான அத்தியாயம்!
மீண்டும் ஆசிகளுடன்!

No comments:
Post a Comment