Sunday, April 01, 2018

இதயம் இருக்கும் வரை......! பாகம் -2

இதயம் இருக்கும் வரை......! பாகம் -2


சரண்யா, அம்மாவுக்குப் புதிர் போட்டுக் கதைத்ததுமே அவளுக்கு விடயத்தை
அறியும் ஆவல் கூடியது.
"என்னடி அப்படி என்ன நடந்தது அண்ணாவுக்கு?"
அதெல்லாம் ஒண்டும் நடக்கவில்லைமா .இவர் சும்மா நடத்துறார்"
"இவர் நடத்துறாரா? எனக்கு விளங்க இல்லை சரண்யா.கொஞ்சம் தெளிவா சொல்லுறாயா?
அவரே சொன்னாத்தான் நல்லா ருசியா இருக்கும் அம்மா அவரையே கேளுங்க.
அண்ணா அம்மாவுக்கு  சொல்லு அண்ணா"-அரசனை குறும்பாகப்  பார்த்தபடியே  தன் பெரிய அழகான விழிகளை உருட்டி முறுவலித்தாள் சரண்யா.
அரசனுக்கு இப்போது கொஞ்சம் அவள் மீது கோபம் வந்தது போலிருந்தது.
"  ஏய் சரண்யா .நீ உன் பொன் வாயை மூடிக் கொண்டு இருக்க மாட்டியா ?
 " என்ன அரசன் அவளைக் கோபிக்கிறாய். நீயே சொல்லேன்."
"சொல்லுறன் அம்மா .சாப்பிடும் போது சொல்லுறன் "அரசன் தயங்கி இழுத்தான்.
சொல்ல வெட்கப் படுபவன் போலவும் தெரிந்தது   நாயாகிக்கு. அவளுக்கு அவன் சொல்லப் போவது என்ன என்பதில் சந்தேகமும் அதே நேரம் ஏதோ அவனுடைய தனிப்படட விடயம் என்பதிலும் சந்தேகம் இல்லாமலும் இருந்தது.
அவள் மகனை வாஞ்சையோடு பார்த்தாள்.
"தம்பி நீ ஒன்றுக்கும் தயங்கத் தேவையில்லை.உனக்கு என்னிடம் சொல்ல என்ன தயக்கம்"
ஒன்றும் தயக்க மில்லை அம்மா. இவள் சரண்யாதான் இதை ஊதி பெருப்பிக் கின்றாள். "
நாயகி மக்களை பார்த்தாள். சரண்யாவின் குறும்புக் கண்கள் இவளையும் தன் அண்ணனையும்   பார்த்து துரு துரு என்று சிமிட்டின.
"ஓகே ஓகே இரண்டு பேரும் முகத்தை கழுவி  விட்டு சாப்பிட வாங்கோ.அங்கே ஆறுதலாகப்   பேசலாம் "
மூன்று பேரும் வழமை போல சாப்பிட அமர்ந்தார்கள்.அம்மா பரிமாற மகனும் மகளும் அமைதியாக  சாப்பிட ஆரம்பித்தார்கள்.இருவரும் பக்கத்தில் அமர்ந்து சாப்பிடுவதுதான் வழக்கம். அம்மா இருவருக்கும் எதிரில் இருந்து அவர்களது நாளாந்த வேலைக்  கதை கேட்பாள்.
இன்று, கொஞ்சம் வித்தியாசமான அமைதி  நிலவியது. அரசனின் முகத்தில் ஒரு குழப்பம் தெரிந்தது. ஆனால் சரண்யா விடுவதாக இல்லை.
அவள் விளையாட்ட்தாக மௌனத்தைக் குழப்புவதற்காகவே புறப் பட்டவள்   போல ஒரு செருமலைக் கிளப்பினாள்.
இனியும் பொறுத்தால் சரண்யா விடயத்தை தானே போட்டு உடைத்து விடுவாள்
என்ற பயம் அரசனுக்கு தோன்றியது போலும்.
அம்மா அது வந்து ...! என்று இழுத்தான்.
"என்னப்பன் சொல்ல வந்ததை சொல்லு"...மிக்க   கனிவாக  அம்மா அவனை உற்சாகப் படுத்தினாள்.
"அம்மா இன்றைக்கு வேலையில ஒரு விடயம் நடந்திருக்கு."
"அப்படியா? "
"என்ன நடந்தது?உனக்கு 'ப்ரோமோஷன்" ஏதாவது கிடைத்திருக்கா?"
அம்மா நிலைமையை அரசனுக்கு இலகுவாக்குவதற்கு   பேசுவது போல கதை கொடுத்தாள். 
சரண்யா பொக்கென்று விழுந்து விழுந்து சிரித்தாள்.
"ஏய் நீ அவனைப் பேச விடாய் போறியா இல்லையா?" அம்மா செல்லமாக மகளைக் கடித்தாள்.
அரசன் சரண்யாவை ஒரு முறை முறைத்துப் பார்த்தான்.
"பிறகு அதெல்லாம் ஒண்ணு மில்லை அம்மா.நம்ம உமாவுக்கும் என் னுடைய இடத்திலேயே வேலை கிடைத்திருக்கம்மா.இண்டைக்கு வேலைக்கு வந்திருந்தாள்." அதைச் சொல்லும் போதே அவனை அறியாமலேயே அவனது அழகிய முகத்தில் ஒரு சந்தோஷத்தைக் கண்டாள் அம்மா.
சரண்யா அம்மாவின் முகத்தில் வந்த பிரகாசத்தை பார்த்துக் கொன்டே
"என்னம்மா உங்களுக்கு  சந்தோஷம் தானே?." என்று கேட்டு வைத்தாள்..
நாயகிக்கு அது மிகவும் சந்தோஷமான விடயமே தான். உமா அவளது தூரத்து
சொந்தக் காரியும் மிகவும் நெருக்கமான குடும்பத்தவளும் அவளது சிநேகிதி கமலாவின் மூத்தபெண்    என்பதோடு மட்டுமல்லாமல் ,அரசனுக்கு உமாவை மிகவும் பிடிக்கும் என்பதும் தெரியும்.
வெளியில் ஒரு போதும் பேசிக் கொள்ளா விட்டாலும்.அரசனுக்கும் உமாவுக்கும் இடையில் ஒரு நெருங்கிய புரிதல் இருப்பது இரு வீட் டாருக்கும்   பல காலமாகத் தெரியும். ஆனால் இது வரை ஒருவருமே இதை பற்றி பேசியதேயில்லை.
சரண்யா மட்டும் எப்போதும் அண்ணாவை மறை முகமாகச் சீண்டிக் கொண்டு இருக்கிறாள் என்பது நாயகிக்குத் தெரியும்.
பட்டும் படாமல்   தன்னிடம் அவர்களை சேர்த்து விட்டு விடவேண்டும் என்ற ஆசையில் கதை விடப் பார்ப்பதும் அவள் அறிந்திருந்தாலும் நாயகி இதுவரை
ஒன்றுமே தப்பித்த தவறியும் சொன்னதில்லை.
விதியில் நம்பிக்கை அவளுக்கு.
யாருக்கு யார் என்று ஆண்டவன் எப்போதோ எழுதி வைத்து விட் டான் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை. அதனால் அவள் அமைதி காத்து வந்தாள்.
அரசன் அம்மாவின் முகத்தை அளப்பது   போல பார்த்தான்.
நாயகி 'சந்தோஷமான விஷயம் தான் அரசன்.உமாவுக்கு இந்த வேலை கிடைத்ததில் கமலா மாமிக்குத்தான் மிகவும் சந்தோஷமாக இருக்கும் இல்லையா?" என்று சலன மில்லாமல் அரசனைக் கேட் டாள்.
"அப்படித்தான் சொன்னாள் அம்மா" என்றான் அரசன்.
இருவரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்று மனதுக்குள் சந்தோஷப்   பட் டாள் .
அதன் பிறகு மதிய உணவு  முடியும் வரை மூவரும் மற்றைய விடயங்களை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.
முடியும் தருவாயில் வீட்டு டெலிபோன் அடித்தது. நாயகி போனை எடுத்தாள்.
டெலிபோன்  இல்  இலக்கம் விழுந்திருந்தது.அது வேறு யாருமில்லை கமலா தான்
ஹலோ என்றாள்.
இருவரும் நெடு நேரம் ஏதேதோ பேசினர்.உமாவுக்கு வேலை கிடைத்த விபரமும் அடிபட்டது.
அண்ணனை சரண்யா குறும்பாகப் பார்த்தாள்.அவன் "உன்னை என்ன பண்றன் பார்" என்கிறமாதிரி  முகத்தை போலிக் கோபத்துடன் வைத்துக் கொண்டு வெருட்டினான்.
பேசி முடித்த அம்மா ஒன்றுமே நடக்காதவள் மாதிரி "சரி சரி எனக்கு இந்த சட்டி முட்டி எல்லாம் எடுத்து வைக்க உதவி செய்யிறீங்களா" என்று கேட்டுக் கொன்டே
இருவரையும் சாப்பாட்டு மேசையை விட்டு எழும்பினாள்.
தொடரும் .....!