EPISODE-445 TAMIL
EPISODE-445
MONDAY-15/DEC/2014
அத்தியாயம்
-445
இன்றைய அத்தியாயம் முழுக்க முழுக்க கமல்
கையை வெட்டியதைத் தொடர்ந்து அதன் தொடர்ச்சியாக
நடக்கும் விளைவுகள் பற்றியதாகவே இருந்தது!
காட்சி
-1
சாப்பாட்டறையில் இருக்கும்
ஊழியர்கள் ,கமல், கையை வெட்டி
கொண்டதைக் கேட்டு அவனது அறையை
நோக்கி ஓடி விடுகிறார்கள்!
அவர்களைத்
தொடர்ந்து தனக்கு காப்பி போட
வந்த கார்த்திக்
ஒருவரையும் காணாமல் முதலில் திகைத்தாலும்,தன்னைச் சுதாகரித்திக்
கொண்டு தன வேலையைப் பார்க்க
முனையும் போது விஷ்ணு அங்கே
வந்து அவனுக்கு நடந்த விடயத்தை
விளக்குகின்றான்!
அதைக் கேட்டு ,கமலைப் பற்றி
தூற்றும் கார்த்திக்கிடம், விஷ்ணு அவனிடம் அவனது
வரும் காலத்தைப்
பற்றியும் விவகாரத்தைப்
பற்றியும் விசாரிக்கின்றான்!.
கமல், விவாகரத்தின் பின் ராஜிக்கு ஒரு
வாழ்க்கை கொடுப்பதற்காக காத்திருப்பதாகவும் கூறி
கார்த்திக்கை
எச்சரிக்கின்றான்!
ஆனாலும்
,கார்த்திக்கு, விவாகரத்து என்பது இருவரும் நன்றாக
யோசித்து எடுத்த முடிவு அதனால்,
ராஜிக்கு,விவாக ரத்தின் பின்
என்ன நடந்தாலும் தனக்கு அக்கறை இல்லை
என்ற தோரணையில்
விஷ்ணு
விடம் பேசி விட்டு செல்கின்றான்!
காட்சி-2
ராஜி தனது அறையில் யோசனையுடன்
அமர்ந்திருக்கின்றாள்.கமல் கையை வெட்டிக்
கொண்ட தில் இருந்து
தன்னை மற்றவர்கள் ஒருமாதிரியாகப் பார்ப்பதும் பேசுவதும் நினைவுக்கு வருகிறது.
அன்புமாமா
கமலுக்கு ஒன்றும் பாரதூரமான காயம்
இல்லை என்று கூறி அவளைப்
பற்றி ஒருவரும் தப்பாக கதைக்க வில்லை
என்றும் ,கமலில் தான் எல்லோருக்கும்
ஆத்திரம் என்று சொல்லுவதும்,பின்னர் அவளைக் கமலைத்
தவிர்த்து நடக்கச் சொன்னதும் நினைவுக்கு
வருகின்றது!
கமலுடன்
பேச வேண்டாம் என்று கூறியதற்கு தானும்
சரியென்று கூறியதும் நினைவுக்கு வருகிறது.!
காட்சி-3
கமல் ,ராஜியின் அறைக்கு வெளியில் நின்று
அவளைப் பார்த்து விட்டு ,பிறகு தானாகவே
நுழைந்து ,அவள் முன்னும் அமர்கின்றான்.
ராஜிக்கு
அவனிடம் இருந்த ஆத்திரத்தில் அவனோடு
பேசாமல் இருக்கின்றாள்.
அவன்,தன்னை மன்னிக்கும் படி
கேட்கின்றான்.
அவள் முதலின் அவனிடம் பேச
மறுக்கின்றாள்.அவன் கையை வெட்டி
தன்னை அவமானப் படுத்த்தி விட்டதாக
அவன் மேல் வெறுப்பைக் கொட்டி பேசுகின்றாள்
அத்துடன்
தன்னைத் திருமணம் செய்து கொள்ளளலாம் என்றுமட்டும்
கனவு காணாதே என்றும் எச்சரிக்கின்றாள்
அவன் அதற்கு பேசாமல் அவள்
சொல்வதைக் கேட்டுக் கொண்டே இருந்து விட்டு
நீ என்னைச் சுட்டுக் கொள்ள சொல்லி
இருந்தாலும் நான் என்னைச் சுட்டுக்
கொண்டிருப்பேன் என்று சொல்கின்றான்.
அவள் பேசிக் கொண்டே இருக்க
,தனது மனதுக்குள் தான் ஒரு
நல்லவன் என்றும் தன்னை பிழையாக
நினைக்க
வேண்டாம் ராஜி என்ரும்கூறிக் கொள்ளுகின்றான்
காட்சி-4
இதுவே கடைசிக் காட்சியாகும்.
இதில் கமலுடன் பேசிவிட்டு கூட்டம்
நடக்கும் அறைக்கு ராஜி செல்கின்றாள்.அங்கு அப்போதுதான் தனது
வேலையை முடித்துக் கொண்டு புறப்பட ஆயத்தம்
செய்யும் கார்த்திக்கைக் காண்கின்றாள்.
புறப்பட்ட
தறுவாயில் இருவரும் ஒருவர் பேசிக் கொள்ளவேயில்லை.
ஆனால் கார்த்திக் அவளிடம் என்ன நடந்தது
என்று விசாரிக்கின்றான்.
அவள் அவனை ஏறெடுத்தும் பார்க்காமல்
அவனை முறைக்கவே அவன் கமல் கத்தி
வெட்டியதைப் பற்றி
அவளிடமே
கேட்கின்றான்!அதற்க்கு அவள் அதைப் பற்றி
கமலிடமே விசாரிக்கச் சொல்கின்றான்.
ஆனால் அவன் விடுவதாய் இல்லை.
இருவரையுமே நடந்த
சம்பவத்திற்கு காரணம் காட்டி அவளை
தாறு மாறாக வைகின்ரான்.
விசுவநாதன்
இல்லாத போது,பொறுப்பில்லாமல் இருவரும்
அலுவலகத்தில் இப்படிக் கூத்து அடிப்பது
சரியில்லை
என்றும் ,அப்படிக் கூத்தடிப்பதென்ரால் ,அலுவலகத்துக்கு வெளியே அதை வைத்துக்
கொள்ளும் படியும் ராஜியின் மனம்
நோகக் கூடியதாகப் பேசித்
தீர்க்கின்றான்.
ராஜிக்கும்
கமலுக்கும் இடையே நடந்த சந்திப்பப்
பற்றி அவனுக்கு ஒன்றுமே தெரியாமல் அவளை
மிகவும்
கேவலாமாகத்
திட்டுகின்றான்.
அவளோ உண்மையைச் சொல்லாமல் அவனது வார்த்தைகளுக்கு பதில்
வார்த்தையாக
தனக்கு
கமலுடன் விருப்பம் என்றும் அவனையே திருமணம்
செய்யும் நிலமைவந்தால்
தான் அவனையே மனம் முடிப்பேன்
என்றும் வீம்பாகப் பதிலளிக்கின்றாள்.
கமலையும்
.கார்த்திக்கையும் ஒப்பிடுவதோடு கமல் இவனை விட
மேலானவன் ,நல்லவன் என்றும் வாதாடி
அவனது மன எரிச்சலைக் கிளப்புகின்றாள்.
இருவரும்
ஒருவர் புரிந்தும் ,,சந்தர்பம் சூழ் நிலைகளால் புரியாதவர்களாக
குத்திக் கிழித்து மனம் புண்படச்
செய்வது,மிகவும் யதார்த்தமாகவும்,உணர்வு
பூர்வமான வேதனையை தத்ரூபமாக
காட்டு
வதாகவும் அமைந்தது!
அதை எதிர்பார்க்காத கார்த்திக் ஆத்திரத்துடன் வெளியே சென்ற ராஜியைப்
பார்த்துக் கொண்டே காட்சி முடிகிறது!
ஒட்டு மொத்தமாக ஒரு சிறந்த அத்தியாயம்.
கார்த்திக்
,ஸ்ருதி ராஜ் இருவரதும் உணர்வுபூவமான நடிப்பின்
எல்லைய மீண்டும் தொட்டு வந்த
அத்தியாயம்
என்று சொல்லலாம்.
விஷ்ணு,அன்பு சித்தார்த் எல்லோருமே
நன்றாக நடித்திருந்தார்கள்.
மீண்டும்
ஆசிகளுடன்!

No comments:
Post a Comment