Sunday, November 30, 2014

தொடர்கதை-----சிவராணி நிர்மலன்

இதயம் இருக்கும் வரை .........!

பாகம்-1

மூன்றாம் முறையாக தன்   மணிக்கட்டில் கட்டியிருந்த கடிகாரத்தை நோட்டம் விட்டான் அரசன்.அவன் முகத்திலும் கண்களிலும் ஒரு அவசரம் தெரிந்தது .காலையிலேயே விரைவில் எழுந்து அலுவலகத்துக்கு போவதற்கு ;அவனை விட யாரையுமே உதாரணமாகக்  கூற முடியாது.
அவனும் இப்போதுதான்  ஒரு ஆறு மாத மாகத்தான் புதிய ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறான்,
 பல்கலைக் கழகப் படப்படிப்பு முடிந்த கையோடு கணக் காளராகவே அவனுக்கு நகரத்திலேயே வேலை கிடைத்ததை இட்டு அவனது அம்மா நாயகிக்கு மிக்க மன மகிழ்ச்சி!
அவனுக்கு அவனது அம்மாவும் ,தங்கை சரளாவும் தான் இருந்தார்கள்.
கடந்த இலங்கைப் போரில் பலர் தமது உறவினர்களை இழந்து .அல்லல் பட்டு,கனடாவுக்கு ,அகதிகளாக புலம் பெயர்ந்து இருந்தாகள் .
அவர்களில் ஒரு  குடும்பம் தான் அரசன்,அம்மா நாயகி  ,தங்கை சரளா மூவரும்.

அப்பாவை தனது பதினைந்து வயதிலேயே இலங்கை யின்  அரசியல் அலங்கோலத்துக்கு பறி   கொடுத்து விட்டு அம்மா தங்கையுடன் வந்த கதை தான் அரசனின் கதை.

இங்கு வந்து குடியேறி சாதித்த காரியங்கள் கணக்கில் அடங்காதவை,ஒரு  சகாப்தமே படைத்தனர் என்று சொன்னாலும் மிகையாகாது!பட்ட இம்சைகள் ,பல.வேதனைகள்,துன்பங்கள்,அவமானங்கள்,பலபல!
ஆனாலும் அம்மா நாயகியின் வன்மமும்,உறுதியும் தான் இந்தக் குடும்பத்தின் அவல நிலையை மேலே கொண்டுவந்தது என்று சொன்னால் மிகையாகாது!

வந்த புதுதில்,புதுச் சூழல்,புதுக் கலாச்சாரம்,பண்பாடுகள்,பல மொழிகள் பேசும் சூழல் என்று பல கஷ்ட்டங்களையும் தாண்டித்தான் ஒருமாதிரியாக இவர்களது குடும்பம் நிலைப் பட்டது!
இரண்டு இளம் வயது குழந்தைகளை தன கண்முன்னால் வைத்துக் காப்பாற்றி,உணவு ஊட்டி ,தங்க இடம் தேடி கொண்டு ,பள்ளிக்கு  அனுப்பி,
இன்று தட்டம் தனியாளாய் இருவரையும் நல்ல நிலைக்குக் கொண்டுவந்து  விட்டு இப்போது தனது சொந்தவீட்டில் அவர்களது வாழ்க்கைகளின் அடுத்த படிக்கான ஆயத்தங்களை நாயகி  செய்யத் தொடங்கி இருந்தாள்.
இருவருமே உயர்ந்த உத்தியோகங்களை வகிப்  பவர்களாக இருந்தார்கள்.
மூத்தான் அரசன் கணக்களாராக ஒரு பிரசித்தி பெற்ற வங்கியிலும்,
தங்கை சரளா ஒரு பிரசித்தி பெற்ற தனியார் மருத்துவ மனையில் .நிர்வாக அதிகாரியாகவும் இருககின்றார்கள் .
கைநிறைய சம்பாதிக்கிறார்கள்.அம்மா பட்ட கஷ்ட்டத்துக்கு அவளை ஒரு குறையுமில்லாமல் பார்த்துக் கொள்ளுகிறார்கள்.

திங்கள்தொடங்கி வெள்ளிவரை காலையில் எட்டுமணிக்குப் புறப்பட்டால்
மாலை ஆறு மணியளவில் தான்   வீடு வந்து சேர்வார்கள்.
இருவரும் வேறு ,வேறாகப் போய் தமது தமது வண்டிகளில் வீடு வந்து சேர்வதுதான் வழக்கமான அவர்களின் ஒழுங்கு .
அம்மாவைக் காக்க வைப்பதும் இல்லை.
ஏதாவது பிரச்சனை என்றால் முன்கூட்டியே அம்மாவுக்கு தொலை பேசி மூலம் அறிவித்து ஆறுதல் படுத்தியும் விடுவார்கள்.
ஒருவருக்கு ஒருவர் உலக விடயங்கள்,வேலை விடயங்கள் எல்லாமே பகிர்ந்து கொள்ளுவார்கள் என்றே சொல்லலாம் .
ஒட்டு மொத்தமாக ஒரு அற்புதமான ,ஏன் யாருமே  பார்த்துப் பொறாமைப்
படக் கூடிய குடும்பம் என்றே சொல்லவேண்டும்.
வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அப்படித் தோன்றினாலும்,
நாயகியைப் பொறுத்த வரையில் இவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள்
இன்னும் இருந்தன.
நாயகிக்கு கனடாவுக்கு  வந்த இந்தப் பத்து வருடங்களில் உறவினர் என்று சொல்லக் கூடியதாகவும்,சிநேகிதிகள்  என்று சொல்லக் கூடியதாகவும் ஒரு சிலரே இருந்தனர்.
அவர்களில் முக்கியமாக அவளோடு வேலை செய்தபோது பழக்கப் பட்ட ஒரு இந்திய தமிழ் பெண் மாலாவும் மிகவும் தூரச் சொந்தம் என்று கொண்டாடி வரும் கமலாவின் குடும்பமுமே முதல் இடம் வகித்தார்கள்.
நாயகியும் கணவன் இல்லாத  காரணத்தால் தானும்,தனது குடும்பமும் என்று மிகவும் அமைதியாகவும்,ஆடம்பரம் இல்லாமலும் வாழ்ந்து காலம் போயிற்று.
கமலா வுக்கும் நாயகியின் வயதுதான் இருக்கும். ஆனால் அவளது கணவர் இன்னும் இலங்கையில் இருப்பதாகத்தான் கமலா அவளுக்கு சொல்லியிருந்தாள் .அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்ளுவதையும் கேட்டிருக்கின்றாள் .
கமலாவுக்கும் அரசனின் வயதிலும்,சரளாவின் வயதிலும் இரண்டு பெண்குழந்தைகள் இருந்தன.
இலங்கையிலிருந்து வந்த காலம் தொடக்கத்திலேயே ஒரே கட்டிடத்தில் வசித்ததால் நால்வருக்கும் நல்ல பழக்கமும் நட்பும் வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது!
அடிக்கடி நால்வரும் சந்ததிக்கும் சந்தர்ப்பங்களும் கிடைத்தன.
கமலாவின்  பெண்களுக்கு உமா ,உஷா என்பன  பெயர்கள். மிகவும் அழகான ,அடக்க மான பெண்கள்.உமாவை விட உஷா கொஞ்சம் துடிப்பு கூடியவள்.
சரளாவின் உயிர்த் தோழி என்றும் சொல்லலாம்.
உமா அம்மாவுக்கு ஒத்தாசையாக இருப்பவள்.எப்போதும் அம்மாவுக்குப் பின்னாலேயே பெரியவளான பின்பும் திரிவாள் .பிறகு படித்து முடித்து
பட்டதாரிகளாகி தமக்குத் தமக்கு என்று வேலைகளையும் அலுவலகங்களில் எடுத்துக் கொண்டு தமக்கு என,மோட்டர் வண்டிகளையும் வாங்கிக் கொண்டு
அவர்களின் காலமும் போய்க் கொண்டிருக்கிறது!
இவர்களை விட நாயகிக்கு தனது உயிர்த் தோழி என்று சொன்னால் அவளுடன் வேலை செய்து நட்புக் கொண்டமாலா  என்றே சொல்ல வேண்டும் .
மாலாவும் அவளது கணவரும் மதுரையை சொந்த ஊராகக் கொண்டவர்கள் ,ஆனால் மாலாவின் கணவர் வெளியூரில் வேலை கிடைத்து தமது குடும்பத்துடன் பத்துவருடங்களுக்கு முன்னர் கனடா வந்து சேர்ந்திருந்தார்கள்
அவர்களுக்கு கண்ணே கண்ணு ஒண்ணே .ஒண்ணு என்று சக்தி என்ற மகள் இருக்கின்றாள். அழகோ  அவள்! ,ஆனால் வாயோ வாயும்தான்.
அவள் இந்த நாலு பேரையும்  விட வயதிலும் சின்னவள் ஆனால் பேசும் போது  எல்லோரையும் விடவயது மூத்தவள் போல பேசும்  பாவம் உண்டு.
இந்த ஐந்து இளம் வட்டங்களும் ஒருவர் ஒருவர் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தார்கள் .
பத்து வருடங்களாக அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்துப்  பழகி வரும் இந்த மூன்று குடும்பத்தில் நடக்கும் வாழ்க்கைப் பிரச்சனைகள்,உணர்வுகள்,போட்டிகள்,தான் இந்தத் தொடர்கதையின் மையப் புள்ளிகளாகும் .
இப்போது ,மணிக் கடிகாரத்தை நான்காம் முறையாகப் பார்த்த அரசனை நோட்டம் விட்ட அம்மா நாயகி "என்னப்பா யாரைப் பார்த்துக் கொண்டு இருக்கிறாய் " என்று கேட்டாள்.
அப்போது காலை எட்டுமணி ,அரசன் வேலைக்கு புறப்படும்  நேரம் என்றும் அவளுக்கு தெரியும் .
இதுவே முதல் முறையாக அவன் ஏதோ ஆதங்கப் படுவது போன்ற உணர்வு
அவளுக்குத் தெரிந்தது!
அவள் கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்ல முன்னரே,மாடியில் இருந்து
வேலைக்கு ஆயத்தமாகிக்  கொண்டே கீழே வந்த சரண்யா "அம்மா உங்களுக்கு அண்ணா இன்னும் சொல்லவில்லையா ?என்று கேட்டாள் .
"இல்லையேம்மா என்ன விஷயம்"? என்று மகளை ஆர்வத்துடன் கேட்டவளை
பார்த்து  குறும்புடன் அழகாகச் சிரித்த சரளா "அம்மா அது ஒரு பெரிய ரகசியம்  .ஆனால் உங்களுக்கு பிடிக்கும் "என்று ஒரு ஆசையைக் காட்டி விட்டு"அண்ணா  நீ சொல்லப் போறீங்களோ இல்லை நான் சொல்லவா ?"என்று அண்ணாவைப் பார்த்து அவனைக் கேலி செய்வது போல சிரித்தாள் .
அண்ணன் அரசனோ தங்கையைக் கெஞ்சுவது போல முகத்தை சைகை செய்தான்.
அம்மாவோ இவர்கள் இருவரதும் இந்தப் புதுவிதமான சம்பாஷணையில் ,குழம்பி நின்றாள்

தொடரும் ....!


இது வண்டிச் சவாரியில் இருவரின்  வாழ்க்கைச் சவாரி!
பதுமை ஒருவளின் வழியில் இணைந்தான்  இவன்  இளந்தாரி!

புதுமை படைத்த  இருவரின் வாழ்வு இப்படியாகவே  உருண்டோடி!
இளமைகள்  கடந்து வாழ்வு  நிலைக்குமா அதுவே எம் கேள்வி !

அழகனும் அழகியும் இப்படியே மகிழ்வுடன்  மீண்டும் கூடி
அவர்கள் காதல் வாழவேண்டும் வருடங்கள் பல கோடி!

Ithu vandichsaaviriyil oru vaazhkkai savaari!
pathumai oruvalin vazhiyil inainthaan ivan ivan ilanthaati!

puthumai padaiththa iruvarin vaazhvil ippadiyaakavae urundodi
ilamaikal kadanthu aazhvu nilaikkumaa thuvae em kaelvi?

azhakanum,azhakiyum ,ippadiyae makizhvudsn meendum koodi
avarkal kaathal vaazha vaendum varudankal pala kodi!
GOOD EVENING ALL

Reaction to PROMO SCENE!

THE WAY HE  LOOKS AT HER IS HIS BEST TO SHOW THE DEEP ROOTED LOVE FOR HER .THERE IS NO DOUBT ABOUT THAT !

BUT THE BIG QUSTION IS WHAT IS HE GOING TO COMPROMISE TO GET HER RESPECT AND HER LOVE BACK?

RAJI IS IN THE MOST  DIFFICULT STIUATION AND HEART WRENCING  SPOT ,TO MAKE AN MOST IMPORTANT DECISION OF HER LIFE TO MAKE SURE WHETHER SHE IS DOING THE RIGHT THING FOR HER HAPPINESS AND TO OBTAIN HER FREEDOM AND SPACE TO MOVE ON WITH LIFE WITHOUT ANY STRESS AND UNDUE TORMENT!

THE DIRECTOR HAVE TO CONVINCE THE VIWERS SPECIALLY THE YOUNGER GENERATION THAT WHAT EVER DECISION SHE MAKES HAVE TO BE A LESSON,WHICH IS WORTH LEARNING AND APPLYING IN THEIR OWN LIVES
THE FORTH COMING EPISODES SHOULD EMPAHASIZE ON HOW TO GO ABOUT UNDERSTANDING EACH OTHER IN A MORE HONEST WAY,
AND LIVE TOGTHER WITH RESPECT AND MUTUAL UNDERSTANDING AND MOST OF ALL UNCONDITIONAL LOVE! 

THE PORTRAYAL OF kARTHIK AND RAJI SHOULD  BECOME YOUNG LOVERS' DREAM AND  ROLE MODELS  TO FOLLOW BY.!

HOPE FULLY OFFICE CREATERS WILL DO THAT !
ALL THE BEST TO ALL OF YOU!



EPISODE-435
அத்தியாயம்-435

இன்றைய அத்தியாயம் முழுக்க முழுக்க விஷ்ணுவின் நகைச்சுவையை
மையப் படுத்தியும் இறுதியில் ,அவனது அசட்டையான    வீரம்,அவனுக்கே தீங்காக முடியும்
நிலைமையையும் காட்டியது!

காட்சி-1
தனது உற்ற நண்பனைப் பற்றி நன்றாகவே அறிந்து வைத்திருக்கும் விஷ்ணு அவனுக்கு ,கமல்
செய்த வேலையைக் கேட்டு கோபப் பட்டு அன்புமாமாவிடம் ஆதங்கப் படுகிறான்!
கார்த்திக் நன்றாக நொந்து போயிருக்காவிட்டால் கமலிடம் மன்னிப்புக் கேட்டிருக்கவே மாட்டான் என்று
சொல்லுவது மிகவும் நன்றாக இருந்தது!
அன்புமாமாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவனது வேலைக் குழுவைச்சேர்ந்த
பிரியாவிடம்  இருந்து தொலைபேசியழைப்பு வருகிறது!
அன்புக்கு குப்பக் காரர்களுக்கும் பிரியா  ,ஜென்னிக்கும் உள்ள பிரச்சனையைச்  சொல்லிவிட்டு விஷ்ணு
அவர்களைக் காப்பாற்ற  செல்கின்றான்!
அன்புமாமாவுக்கு விஷ்ணு தனியாக பிரச்சனையத்   தானே தீர்க்க சென்றது பொருத்தமாக படவில்லை!
காவல் துறையினருக்கு   தொலை பேசியில் உதவிக்கு அழைத்து கேட்டுப் பார்க்கிறார்.
அவர்களது   உதவி கிடைக்கவில்லை!

 
காட்சி -2
கார்த்திக்கிடம் வந்து அன்பு விஷ்ணுவைப் பற்றி சொல்லும் காட்சி!
அன்பு ஆதங்கத்துடன் வந்து கார்த்திக்கை தன்னுடன் வரும்படி அழைக்கிறார்,
கார்த்திக் பல காரணங்கள் சொல்லி வர மறுக்கிறான்!
நண்பனுக்கு ஆபத்தில் உதவாத   நண்பனும் ஒரு நண்பனா என்ற தோரணையில்
கார்த்திக்கை வைது விட்டு விரக்தியுடன் செல்கிறார்.
கார்த்தி ,உண்மை நண்பனாக இருந்தாலும் ,விஷ்ணு விடயத்தில் ,அவன்
மிகவும் தள்ளி இருக்க விரும்புவதும்,வேலை நேரத்தில் .இப்படிப்பட்ட,
அநாவிசியாமான  ,தடுக்கக் கூடிய விடயங்களில் தலையைப் போட்டு
வில்லங்கத்தை   விலைக்கு வாங்குவதும்,அவனுக்கு பிடிக்க வில்லை என்பதை அவருக்கு,
எடுத்துச்  சொல்லுவதுடன்,விஷ்ணு முறைப் படி காவல் அதிகாரிகளிடம்
சொல்லி இதைத் தீர்க்கவேண்டுமே தவிர ,இப்படிப் போய்,தானே இந்த விடயத்தை
தீர்க்க முடிந்தால் வரும் ஆபத்தை,ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும்
அதனால் வரும் விளைவுகளால் படிக்க வேண்டிய வற்றை படிக்கவும் தேவை
 இருக்கிறது என்பதையும் அன்புக்குக் கூறுவதுடன் தனது சொந்த வேலை நேரத்தில்
இதைச செய்யவும் தனக்கு விருப்பம் இல்லை என்பதையும் தெட்டத் தெளிவாகக் கூறுவது
அவனது திடமான,பொறுப்புள்ள தன்மைகளையும் காட்டுவதாக அமைந்தது!

காட்சி-3

விஷ்ணு ,பிரியா,ஜென்னி மூவரும் திரும்பவும் அலுவலகத்துக்கு பத்திரமாக
வருவதும்,குப்பத்தில் நடந்த வற்றை மணிமேகலைக்கும்,அன்புக்கும்
அறிவிக்கும் காட்சி!
மிகவும் நகைச் சுவையாக,  விஷ்ணுவின் தீரச் செயல்களை சொல்லும் காட்சி!
இயற்கையாக,மிகவும் சாந்தமான ,விஷ்ணு தனது வீரத்தைக் காட்டுவதற்காக
பிரச்சனையைத்,தன் தலைக்கு மலே போட்டுக் கொண்டு ஒருமாதிரியாக
பெண்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து ,இன்னல் விளைவித்த
குப்பத்து ஆட்களுக்கு பதிலடி கொடுத்தி விட்டு,அவர்கள்ளிடம் இருந்து
பறிபோன வண்டிச் சாவியையும் திருப்பிப் பெற்றுக் கொண்டு  வந்து
சேர்கிறான்!
எல்லோரும் சந்தித்து,அன்புடன் சேர்ந்து தமது அனுபவங்களையும்
பகிர்ந்து கொள்ளுவதுடன்,விஷ்ணுவைப் புகழ்ந்து பேசுகின்றனர்.
ஆனால் அன்புமாமாவும்,மணிமேகலையும் விஷ்ணுவைப் பற்றியும்,
அவனது,அசட்டையான தையிரியத்தைப்  பற்றியும் கவலை கொள்ளுவதுடன்
அந்தக் குப்பத்து   ஆட்களால் என்ன விபரீதம் எதிர்கொள்ள வேண்டி   வருமோ
என்று காவல் அடைந்தபடியே ,விஷ்ணுவையும் கவனமாக இருக்கும் படி
எச்சரிக்கின்றனர்!

காட்சி-4
மணிமேகலையும் ,அன்புமாமாவும்  கவலைப் பட்ட மாதிரியே,பிரச்ச்சனை ,அலுவலகத்தைத்
தேடி வரும் காட்சி இது!
விஷ்ணுவின் செய்கைகளால் தாக்குப் பட்ட குப்பத்து ஆட்கள் தமது தலையாளுடன்
அலுவலகம் தேடி வருகின்றனர்!
அன்பு அவர்களை மிகவும் எச்சரிக்கையுடன் எதிர்  கொள்ளுகிறார்.
பின்னர் விஷ்ணு வும் வரவேற்பு  அறைக்கு வந்து சேர்கிறான்!
தலையாளி விஷ்ணுவைத் தம்முடன் வரச் சொல்லி மிரட்டுகிறார்கள்!
விஷ்ணு அவர்களுடன் செல்வதற்கு ஒப்புக் கொண்டு புறப்படுகிறான்!
ஆனால் அன்புமாமவுக்கு அது சரியாகவே  படாததால்  விஷ்ணுவை
திரும்பவும் அலுவலகத்துக்குள் போகச் சொல்லித் தள்ளி விடுகிறார்.
ஆனால் விபரீதமாக அவர்கள் இருவரையும் பின்னால் நின்று கட்டிப் பிடிக்கிறார்கள்!
பின்னர் அன்புமாமாவை விட்டு விட்டு விஷ்ணு வை கத்தியால் குத்த
ஆயத்தப் படுத்துகிறார்கள்  !
இறுதியாக முடியும் விறுவிறுப்பான காட்சியாக,ஒருவன் விஷ்ணுவைக் கட்டிப் பிடீக்க
அன்புமாமா அந்த  இடத்தை விட்டு ஓடிப்போக ,குப்பத்து காடையர்களின் தலையாளி
விஷ்ணு வின் வயிற்ரை நோக்கி தனது கூரான கத்தியைக் கொண்டு வந்து அணுகி நெருங்குவதும் .
அதைக் கண்டு விஷ்ணு பயந்து அலறுவதாகவும் முடிந்தது!
அந்தக் காட்சியில் விஷ்ணு கத்துக் குத்து வாங்கியதாகக் காட்டப் படவில்லை!
வாங்கியவன் போல அவன் அலறியதுடன் முடிந்தது!

இனி உண்மையில் நடந்தது என்ன என்ற மர்மமான கேள்வியுடம் முடிந்த பாகத்திற்கு
விடை பார்த்து ரசிகர்கள் நாங்கள்   காத்திருப்போம்!

மீண்டும் ஆசிகளுடன்!

Saturday, November 29, 2014

மஞ்சளில்பொங்கும்அழகு!
மாயச் சிரிப்பினால் கவரும்உறவு!
நெஞ்சத்தைஅள்ளும்மலர்வு!
மிஞ்சும்இருவர்உள்ளப் பொலிவு

manjalil ponkum azhaku!
maayach siripinaal kavarum uravu!
Nenjaththai allum malarvu!
minjum iruvar ullap polivu!

எழில் தவழும்  அவள் முகத்தில் ஆர்வம் ஒளிரும்!



எழில் தவழும்  அவள் முகத்தில் ஆர்வம் ஒளிரும்!
பழகிய அவன் தரும் பரிசினால், அவள் முகம் மலரும் !
அழகிய வதனத்தின் மலர்விலோ  அவன் இதயம் குளிரும்!
அழைத்து அவர்களை,  வாழ்த்த எம் மனம் விழையும்!

ezhil thavazhum aval mukaththil aarvam olirum!
pazhakiya avan tharum parisinaal aval mukam malarum!
azhakiya vathanaththin malarvilo avan ithayam kulirum!
azhaiththu avarkalai vaazhththa   em manam vizhaiyum!

இதயங்களீன்  இணைப்பிலே வரும் இனிமை!
வதனங்களில் அதைக் காட்டும் நடிப்பின் திறமை!

Friday, November 28, 2014

Episode-435 Summary

Good evening all!

It has been a very ordinary episode  and it seemed like  the director wants to bring a  sequence to get a valid reason in which  Karthik and Vishnu can get closer in ther friendship.

It is good to bring thai and  it is about time to do that too!

Vishnu also talking to Anbu mama about the friction between Karthik and Kamal too!
He seemed surprised and was  feeling for Karthik when he found out that Karthik had come down to say sorry .
There seem to be a lot of sighns to suggest that  Karthik and Vishnu are getting closer in spirit but not in person yet!
We will have to wait and see that !

All the scenes were fully  focussed on how Vishnu gets in to trouble  with
street gangs and not really knowing the real danger of dealing with them .
he was not  listening to any one,

Anpu mama was worried about Vishnu and asked Karthik for help !
Karthik was busy in his office and stating that he will not help Vishnu !
He made his valid reasons  to Anpu and told him that Vishnu is capable of
doing things for himself and also he does not want to leave the job in order to deal with personal issues.

Vishnu did manage to fight off the gang and briught his team girls Piriya and Jennifer back in the office with flying colors!

Piriya was praising her manager for his bravery and care for them!
On top of that Vishnu was sayingthat he gave the gang his adress of work place too which shook Anbumama by surprise and he warned Vishnu that they might come back to get Vishnu back for their  revenge.

 Mani was vey worried too about Vishnu and told him to be careful.
Anbu mama and Mani was correct in their judgement.

The gang managed  to come to V-Data compound and came straight to the office reception looking for Vishnu!

Anbu mama saw them at the reception and they asked to get Vishnu!
Then the worst happened!

There was an argument and Vishnu and Anbumama were held by the gang and at the end Vishnu was stabbed with a knife by the gang leader and it ended with that scene.
We have to wait and see what happened afterthat !
Hopefully the gang leader was stopped by someine before he hurt Vishnu ????
We dont know !We will wait for that!

Every one acted  very good as usual!
it seemed that The story line is changing to accomadate some social issues too in the serial!
That is also very welcoming !

Enjoy the episode your selves friends!

Have a very good night and a wonderful week end!

Thursday, November 27, 2014

EPISODE-434
அத்தியாயம்-434

இன்றைய அத்தியாயம் ஒரு உணர்வு பூர்வமான,திருப்பங்களைக்
கொண்ட ஒரு  நல்ல அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்! 

காட்சி-1
ராஜியின் வேலைக் குழுவைச் சேர்ந்த குமார் ,மது,ஜக்குலின் ஆகிய மூவருக்கும் இடையில் நடக்கும் பேச்சு வார்த்தைகளைப்  பற்றியது!
வயதில் மூத்தவனாய் இருக்கும் குமார் தனது சக வேலையாளிகளுடன்
எவ்விதம் நடந்து கொள்ளுகிறான் என்பதும்,தனது அதிகாரத்தை அவர்களில் செலுத்தி அவர்களை மடக்க முயற்சிபதுவும் அதிலே தோல்வி அடைவதையும்  காட்டுகிறது!
முடிவில் மதுவும் ஜகுலினும் முன்னர் போலல்லாது இப்போது ஒருவர்  புரிந்து நடப்பதையும் தெளிவாகச் சொல்கிறது!

காட்சி-2
ராஜி கமலின் காட்சி! கமல் ராஜியைத் தேடி வந்து தான் வேலையை விட்டு போவதாகவும் அதற்கு முதல் அவளிடம் சொல்லிவிட்டு போக வந்ததாகவும்
கூறுகிறான்!
அவனிடம் ராஜி நடந்தவற்றுக்கெல்லாம் மன்னிப் புக் கேட்டுக் கொள்ளுகின்றாள்.
ராஜியோ,தன்னை விட்டு விட்டு வேலையையும் தன் நிமித்தமாக  விடவேண்டாம்   என்று  அவன் மீது உள்ள உண்மையான அக்கறையுடன் கூறுகின்றாள்.!
கடைசியில்  அவனை ஒருமாதிரியாக மனம் மாற்றுகிறாள்!
அவனும் சந்தோஷமாக அவளது மன்னிப்பை ஏற்றுக் கொண்டு தான் வேலையை  விடுவதில்லை எனத்  தீர்மானிக் கின்றான்!

காட்சி-3
விஷ்ணு மணிமேகலைக்கு இடையில் புதிதாக   உருவாகி வரும் பாசம் இன்னும் கூடிக் கொண்டு வருவது போன்ற ஒரு உணர்வுபூர்வமான காட்சி இது!
விஷ்ணுவில் மணி மேகலைக்கு இருக்கும் காதல் இப்போது யார் அவனுக்கு தொலைபேசியில் பேசினாலும் அவனைச் சந்தேகப்படுவதும் அவனிடம் இருந்து அக்கறை எதிர் பார்ப்பதாகவும் காட்டப் படுகிறது!
விஷ்ணு வழமை போல விளையாட்டாக அவளைச் சீண்டினாலும்,
அவனுக்கும் அவளது போக்குகளில் உள்ள புதான மாற்றம் எதையோ  உணர்த்துவது போன்ற உணர்வை ரசிகர்களுக்கு வர வைக்கிறது!

காட்சி-4
இதுவே இந்த அத்தியாயத்தின் உணர்வு பூர்வமான,உச்சக் கட்டமான   காட்சி என்று சொல்லலாம்!
ராஜியும்,கமலும் சாப்பாட்டறையில் இருக்க கார்த்திக் அவர்களிடம் வந்து
கமலை காணும்போது என்ன நடக் கிறது   என்ற சுவாரசியமான காட்சி!

ராஜிக்கு அனாமதேயமாக தொலைபேசியில் உண்மையாகவே   இம்சை கொடுத்தவன் யார் என்பதை கண்டு பிடித்ததை தொடர்ந்து இருவரும்
சாப்பட்டறையில் அமர்ந்து அளவளாவிக் கொண்டு இருக்கும் போது,ராஜி தன்னை அறியாமலேயே கார்த்திக் வந்து கமலிடம்   நடந்த தப்புக்கு    மன்னிப்புக் கேட்டானா என்று அறிய முனையும் போது கமல் அதைப் பற்றி அசட்டையாக எடுத்து விட்டு இருக்கிறான்.
உனக்கு கர்த்திக்கில் கோபாம் வரவில்லையா என்றும் கேட்கிறாள்!
ஆனால் ராஜி திரும்பவும் அவனிடம்,கார்த்திகைப் பற்றி யும் அவனின் ஆணவத்தைப் பற்றியும் புகார் கூறுகிறாள்!
அவன் ஒருபோதும் இறங்கிவந்து கமலிடம் மன்னிப்புக்  கேட்கப் போவதில்லை என்று அங்கலாய்க்கவும்   செய்கிறாள்!
அவனைத் திட்டுவதுடன் யாராவது அவனது முகத்தில் தண்ணீரை விட்டெரிந்தால்தான்  அவனுக்கும் அவமானம் என்றால் என்ன என்று தெரியும் என்றும் சொல்லி வைக்கின்றாள்!
அதே வேளையில் கார்த்திக் சாப்பாட்டறைக்குள் நுழைகிறான்!
இருவரையும் ஒன்றாகப் பார்த்ஹ்டு விட்டு முறைத்த படி தனக்கு
காப்பி எடுக்க போகிறான் ,
கமல் அவனது முறைப்பைக் கவனித்து விட்டு தன் முனனால்   இருக்கும் கண்ணாடிக் கலசத்தில் தண்ணீரை நிறைக்கின்றான்!
ராஜி இதைக் கண்டு பதட்டம் அடைந்து என்ன செய்யப் போகின்றாய் என்று கேட்கிறாள் .
அதற்க்கு கமல் ,கார்த்திக் என்னுடன் சீண்டுவானாய் இருந்தால் நானும்
தண்ணீரை  அவன் முகத்தில் விட்டெறிவேன்  என்று  சூளுரைக்கின்றான்!
இதைக் கேட்டு ராஜி அவனை அப்படிசெய்ய வேண்டாம் என்றும் தான்
அதைகே கிண்டலாகத்தான் சொன்னதாகவும் கூறி அவனைத் தடுக்க முயல்கிறாள்.
அத்துடன் அப்படிக் கமல் செய்தால் அது மிகவும் கீழ்த்தரமான செயல் என்றும்,அதன் பின்பு கார்த்திக்கும் அவனுக்கும் ஒருவிதமான வித்தியாசம் இருக்காது என்றும் கூறிப் பார்க்கிறாள்!
அதேவேளை காப்பியைக் கையில் எடுத்துக் கொண்டு கார்த்திக்  நேராக
அவர்களது மேசைக்கு வந்து அவர்களுடன் அமர்கிறான்.
அதை இருவருமே எதிர்பார்க்கவேயில்லை!
ஆனால் இருவரையும் மாறி,மாறி ஏறெடுத்துப் பார்க்கிறான்!
ஆனால் மறு நொடியில் .கமல் தண்ணீரை அவன் முகத்தில் விட்டெறிகிறான்!

ராஜி இதை கண்டு ஸ்தம்பித்து நிற்கிறாள்.
கார்த்திக்கும் முதலில் இதை எதிர்பார்க்காவிட்டாலும்  தன்னை சுதாகரித்துக் கொண்டு இருவரிடமும் மாறி மாறி நடந்த எல்லாவற்றுக்கும் மன்னிப்புக் கேட்கிறான்!
அவனது அமைதியான ,தயவான பாணி ,இருவடையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்துகிறது!
தான் எடுத்த காப்பியையும் அவன் மேசையில் விட்டு விட்டு எழுந்து செல்கின்றான்!
ராஜி ,கமலை கோபத்துடனும் கண் கலக்கத்துடனும் பார்த்து விட்டு" இந்த ஆண்களுக்கு ஆணவம் தான் எதையும் விடப் பெரிது " என்று விரக்தியுடன் கூறி விட்டு செல்கின்றாள்!
கமலில் உள்ள ஏமாற்றமும்,கார்த்திக்கின் குரலில் இருந்த உண்மையும் ,நேர்மையும் அவளது மனச்சாட்சியை உறுத்தியது போலும்!
கண்கலங்க அவள் போவதைப் பார்த்துக் கொண்டு சிந்தனையில் கமல் ஆழ்வதுடன் அத்தியாயம் முடிகிறது!

அருமையான கடைசிக் காட்சி!
சுருதி கார்த்திக்கின் நடிப்பு அற்புதம்!
சித்தார்த்தும் மிகவும் உணர்வுபூர்வமாக நடித்திருந்தார்.

மீண்டும் ஆசிகளுடன்