EPISODE -439
அத்தியாயம்-439
இன்றைய அத்தியாயம் இத்தனை காலமும் சோகமும்
கண்ணீரும்,கம்பலையும் ஆகத் தொடர்ந்த பாகங்களுக்கு
ஒரு முற்றுப் புள்ளியை வைக்க முனைந்த பாகம் என்றே சொல்லவேண்டும்
காட்சி-1
மனநிபுணத்துவ ஆலோசகரிடம் செல்லும் கார்த்திக் ,ராஜியின் மன நிலை பற்றிக்காட்டும் மிக முக்கியமான பாகமாகும்!
அங்கே இவர்களை சந்தித்து விசாரிக்கும் அந்த மருத்துவர் அவர்களது
நிறை குறைகளைக் கேட்டு இருவரையும் மிகவும் கூர்மையாக அவதானிப்பதுடன் அவர்களது உளப் பாங்கை மிகவும் எளிதாகக்
கண்டு பிடித்து அவர்கள் மீண்டும் ஒருமுறை தருணம் எடுத்துக் கொண்டு
வாழ்ந்து பார்த்து முடி வெடுப்பதே நல்லது என்று இருவருக்கும் ஆலோசனை கூறி முடிக்கின்றார்.
கார்த்திக்கையும்,ராஜியிடம் உணர்வு பூர்வமாக மன்னிப்புக் கேட்கும் படி
பணித்து அவனும் ராஜியிடம் மன்னிப்புக் கேட்கிறான்!
இருவரும் அவரது ஆலோசனைக் கேற்றபடி நடப்பதற்கு ஒப்புக்கொண்டவர்களாக அறையை விட்டு வெளியே வருகிறார்கள்!
காட்சி -2
இருவரும் வெளியே வந்து தாம் சொன்ன காரணங்கள் விவாகரத்துக்கு
போதிய உறுதியான காரணங்களாக இல்லாததைப்பற்றி பேசிக்கொள்ளுகிறார்கள்!.
அத்துடன் வீட்டுக்கு போனால் என்ன உணவு இருக்கிறது என்பது பற்றியும் பரஸ்பர விசாரணையும் நடக்கிறது!
மிகவும் நகைச் சுவையான சம்பாஷணையாகவும் இருந்தது!
இருவருமே ஒரேவீட்டில் வெவ்வேறாக சாப்பிடுபவர்கள் ஆயிற்றே?
ராஜி இனித்தான் போய் சமைக்க வேண்டும் என்கின்றாள் !
அவனோ தனக்கு பாண் வீட்டில் இருக்கிறது அதை வாட்டி சாப்பிடவேண்டு மென்கின்றான்.
இருவரும் அதைப் பற்றி பேசி விட்டு விடை பெற்றுக் கொள்கின்றார்கள்!
காட்சி -3
ராஜி சாப்பாட்டுக் கடை ஒன்றில் அமர்ந்து இருக்கின்றாள்.
முன்னர் பேசிக் கொண்டமாதிரி அவள் உண்மையாகவே வீட்டுக்கு போகவில்லை!
அவள் எதிர்பார்க்காமலேயே தானும் வீட்டுக்கு போகின்றேன் என்று புறப்பட்ட
கார்த்திக்கும் அதே கடைக்கு வருவதும் அவளை கண்டதும் அவசரமாக விலகுவதையும் கண்டு ராஜி முதலில் திகைத்தாலும் அவனை தொலைபேசியில் அழைத்து தன்னிடம் வரச் சொல்லி அழைக்கின்றாள்.
கார்த்தி முதலில் மறுக்கின்றான்!
பின்னர் அவளது அழைப்பை ஏற்று அவள் முன்னாலேயே அமர்கின்றான்!
அவளைச் சங்கடப் படுத்தக் கூடாது என்பதற்காகவே அவளிடம் வரத் தயங்குவதாகவும் சொல்லுகிறான் .
ஆனால் அதைப் பற்றி பரவாயில்லை என்று அவனிடம் கூறி அவனை அன்புடன் பார்க்கின்றாள்!
இருவருமே ஒருவரிடம் ஒருவர் அகப்பட்ட போதும் முன்னர் போல ஓடி ஒழியாது எதிரும் புதிருமாக நண்பர்கள் போலமர்ந்து அமைதியாகப்
பேசுவது கண் கொள்ளக் காட்சியாக இருந்தது என்றே சொல்லவேண்டும்!
காட்சி -4
இந்தக் காட்சிதான் இந்த அத்தியாயத்திற்கு சிகரம் வைத்தது என்று சொல்லலாம்!
இங்கேதான் ராஜியைப் பார்த்து முதல் முறையாக கார்த்தி அவளதும் தனதும்
கபடமான செய்கையை நினைத்து மனம் விட்டுச் சிரிக்கிறான்!பின்னர் தான் அப்படிச் சிரித்ததற்கு மன்னிப்பும் கேட்கிறான்!
அதைக் கண்டு ராஜி ஆச்சர்யப் பட்டாலும் மகிழ்வடைவது அவள் முகத்தில் தெரிகிறது!
அதை அவள் மறுத்து அவனைத் தொடர்ந்து சிரிக்கும் படி வேண்டுவதோடு
அதவே அவனுக்கு அழகு என்றும் சொல்லி அவனை ஆச்சர்யத்தில்
ஆழ்த்துகின்றாள்.
இருவரும் உணவை பகிர்ந்து உண்கின்றார்கள்!
கார்த்திக் ராஜிக்கு விருப்பமான உணவை வாங்குவதோடு அவளைத் தடுத்து
உணவுக்கான பணத்தையும் கொடுக்கின்றான்!
தற்ச்செயலாகத் தடுக்கும் போது அவனது விரல்கள் அவளுடையவற்றை
தீண்டுகின்றன!
அதக்கும் மன்னிப்புக் கேட்கிறான்! ராஜி திகைத்து நிற்கின்றாள் .
பின்னர் இருவருமே உணவை முடித்துக் கொண்டு அந்தக் கடையின்
வாசலுக்கு வருகின்றனர்!
இருவருமே புறப் படும் போது,கார்த்திக் ராஜியைத் தன்வண்டியில் இறக்கி விடவா என்று கேட்கிறான்
ஆனால் ராஜி தனித்தனியாச் செல்வதே இருவர்க்கும் நல்லது என்று கூறிச செல்கின்றாள்!
கார்த்திக் அதைக் கேட்டு விட்டு மனம் நொந்தவனாக,கண்கள் நனைந்தவனாக நின்று அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு இருக்க காட்சி முடிகிறது!
ஒட்டு மொத்தமாக அருமையான பாகம்!இருவரினதும் உணர்வுபூர்வமான ,மிகவும் யதார்த்தமாக
நெஞ்சையள்ளி பல நாட்களுக்குப் பின்னர் ,ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய பாகம் என்றே சொல்லவேண்டும்!
நாளை நடப் பதை பார்த்திருப்போம்!
மீண்டும் ஆசிகளுடன்....!

No comments:
Post a Comment