Wednesday, December 17, 2014

EPISODE-446 TAMIL



EPISODE-446    TUESDAY 16 / DEC/ 2014
அத்தியாயம் -446

இன்றைய அத்தியாயம்,கட்டை,அன்பு மாமாவுடைய நகைச்சுவையுடன் ஆரம்பமாகி,
கார்த்திக்,கமல் இருவரின் வாக்குவாதத்தில் முடிகிறது.
காட்சி-1
கட்டை,சாப்பாட்டு அறையுள் உள்ள காப்பி,தேயிலை,பால் என்பவைற்றைப பற்றி குறை சொல்லிக்கொண்டு தன பாட்டுக்கு பேசிக் கொண்டு இருக்கிறான்.
அத்துடன் பழைய ,புதிய வேலைத் தளங்களைப் பற்றியும் ஒப்பிட்டு முறைப் படும் போது 
அன்புமாமா வந்து அவனைப் பேசித் தீர்க்கின்றார்.
விஷ்ணுவும் பின்னர் அவர்களுடன் சேர்ந்து கொண்டு புலி ,வேலையை விட்டு நீங்கிய
செய்தியையும்,அத்துடன் எப்படி கார்த்திக்கையும் ராஜியையும் ஒன்று சேர்த்து  பார்க்கும் முயற்சியில்
இறங்குவது பற்றியும் தமக்குள்ள பேசிக் கொள்ளுகிறார்கள்.
அதைப் பற்றி பேசுவதற்கு மீண்டும்  சந்திப்பதைப் பற்றியும் குறிப்பிடுகின்றனர்  .

காட்சி-2

கார்த்திக்கின் அறையில் கார்த்திக் .மாதவி முன்னுக்கு  இருக்க அவளுக்கு ஏதோ வேலை கொடுக்கின்றான்.
அவள், அவன் சொல்வதை எழுதிக் கொள்ளுவதுடன் ஒரு பக்கத்தில் தனது தொலை பேசியிலும்
விரல்களைத் தட்டிக்  கொண்டு இருப்பதைக்  கண்டு அவளுடன் சினக்கிறான்.
பிறகு அவளை தான் சொல்லுவதைக் கவனித்துக் குறித்துக்  கொள்ளச் சொல்லுகிறான்.
அவள் அதற்கு செவி சாய்த்தாலும்  தொடர்ந்து தொலைபேசியில் தட்டிக் கொண்டே இருக்கின்றாள்.
அதை மீண்டும் அவன் கண்டிக்கவே அவள் அவனுக்கு யாரோ நகைச் சுவையாக படங்கள் அனுப்பியிருப்பதாகக் கூறி அவனுக்கும் அதைக் காட்டி பேச்சு வாங்குகிறாள்.
அந்தப் படம் அவனை பற்றி நகைக் சுவையாக  எழுதி இருந்த படமே ஆகும். 
காட்டும் போது அவனருகே நெருங்கி நிற்பதை அவன் கண்டித்தாலும் அவளிடம் அந்தப் படத்தை தனது தொலை பேசிக்கு அனுப்பும் படி சொல்லிவிட்டு அவளை வெளியே அனுப்புகின்றான்.
ஆனால் அந்தப் படத்தை ரசித்து மகிழ்கின்றான்!
அதை மறைந்து இருந்து மாதவி பார்த்து மகிழ்கின்றாள்.கல் நெஞ்சனாகப் படும் கார்த்திக்கு சிரித்து மகிழவும் தெரியும் என்பதை காட்டுவது போல யிருந்தது இந்தக் காட்சி! வேறொன்றுமில்லை! !

காட்சி -3
கமல் ,அலுவலகக் கணக்குகள்,வரவுகள்,செலவுகள் விடயமாகவும்,ஒவ்வொரு பகுதியைச்  சேர்ந்தவர்களுக்கு பண ஒதுக்கும் விடயத்தைப் பற்றி கலந்து ஆலோசிக்க கார்த்திக்,ராஜி,விஷ்ணுவை ஒரு கூட்டத்துக்கு அழைத்திருக்கின்றான்.
ராஜியும்  ,விஷ்ணுவும் முதலிலேயே கூட்டம்   நடக்குமறைக்கு வந்து சேர்கின்றனர்  !
இருவரும் நகைச்சுவையாக கதாநாயகனும்,வில்லனும் சந்திப்பதைப் பற்றி கலகலப்பாகப்
பேட்சிக்கொண்டு இருக்கும் போது கமல் கதவைத் திறந்து கொண்டு வந்து இருவருக்கும் காலை வணக்கம் சொல்கின்றான்.விஷ்ணு பதிலுக்கு சொல்கின்றான்.ராஜி ஒன்றுமே சொல்லாமல்
அவனைப் பார்க்கின்றாள்.கமல் கார்த்திக்கை அறை முழுவதும் தேடுவது போல கண்ணோட்டம் விடுகின்றான்!

காட்சி-4
கடைசிக் காட்சி.கமல்.ராஜி,விஷ்ணு மூவரும் கார்த்திக்காக  காத்திருந்து விட்டு ,நேரம் ஆகிறது என்று சொல்லிக் கொண்டு,விஷ்ணு வை தொலை பேசியில் அழைக்கும் படி கமல் கேட்டுக் கொள்ளுகின்றான்.
அதற்கு முதலே .கார்த்திக் முகத்தில் ஒரு முறைப்பின்  சுவடு தெரிய உள்ளே நுழைந்து கொண்டே கமலப் பார்த்து முறைக் கின்றான்.பின்னர் ராஜியையும்,விஷ்ணுவையும் அளப்பது போலப் பார்க்கின்றான்.
அவர்களும் ஒன்றும் பேசாமலேயே அவனை ஏறெடுத்துப் பார்க்கின்றார்கள்.
தொடக்கத்திலேயே கமலின் செய்கைகளையோ அவனது கணக்கு வழக்குகளைப் பற்றி திருப்தி இல்லாதவன் போலவே அவனை முறைத்தபடியே கார்த்திக் அவனுக்கு சரி  எதிராக அமர்கின்றான்.
கமல் கூட்டத்தை ஆரம்பித்து இவர்களது பங்களிப்பு தனக்கு கிடைக்க வில்லை என்று குற்றம் சாட்டுகின்றான்.அத்துடன் கார்த்திக் கூட்டத்துக்கு நேரம் சென்று வந்ததையும் சுட்டிக் காட்டுவது போல பேசுகின்றான்.அதைக் காஎட்டு கார்த்திக்  அவனை முறைக்கின்றான்.முறைப்பு   தொடர்கின்றது.
கடைசியில் கமல் ,இவர்களின் வேலைத் தொகுதிகளுக்கு  என்று ஒதுக்கிய பணம் பற்றிக் குறிப்பிடுகையில் இவர்கள் வெளிநாடு செல்லும் சலுகைப் பணம் அரைவாசியாகக் குறைக்கப் பட்டு உள்ளதாகவும்,அதனால் ஒருமுறையிலேயே  வெளிநாடு செல்லும் பயணங்களை வைத்து செலவைக் குறைக்குமாறும் கேட்பதோடு, அதைப்பற்றி தான் விசுவநாதனிடம் சமர்ப்பித்த தனது பணத்திட்ட பத்திரத்தில்  உள்ளடக்கி இருப்பதாகவும் அறிவிக்கின்றான்.
இதைக் கேட்டதும் மூவருமே அதிருப்தியுடன் முகத்தைச் சுழிக்கின்றனர்.
கார்த்திக் மூவரையும் மாறி,மாறிப் பார்த்துவிட்டு கமலுக்கு முகத்தில்  அடித்தது மாதிரி
நன்றாகத் திட்டித் தீர்க்கின்றான்.
அதற்க்கு தன்னை மீறி பணம் ஒன்றும் இவர்களுக்கு ஒதுக்குப் படாது என்பதையும் ,கமல் பெருமையாகப்  பேசுகின்றான்.
கார்த்திக்கோ ,அவனது பணத்திட்டம் ஒன்றுக்கும் உதவாது என்று அடித்துச்  சொல்வதுடன் விசுவநாதன் கமலின் திட்டத்தை தூக்கியவனது முகத்திலேயே வீசப் போகின்றார் என்றும்  கமலுக்கு சொல்லி அவனை வெறுப் பேற்றுகிறான்.கமல் ஆத்திரப் பட்டு எழுந்து அறையை விட்டு விலகுகிறான்'
போகும் போது கார்த்திக்கை பற்றி அவரிடம் முறை இடப் போவதாகவும் கூறிச் செல்கின்றான்!
இருவரும் அலுவலக கணக்கு வழக்குக்கு சண்டை போட்டதை விட ராஜி விடயத்தை மனதில் வைத்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கடித்துக் குதறுவது போலத்தான்  இருந்தது.
விஷ்ணுவும் ராஜியும் இருவரையும் பார்த்து திகைத்துப் போய் நிற்கிறார்கள்.
கார்த்திக்கோ கமலை யாரிடம் நீ போய்ச் சொன்னாலும் எனக்குப் பயமில்லை என்று சொல்லிவிட்டு அவனும் அறையை விட்டு நீங்குகின்றான்
இருவரும் அறையை விட்டு வெளியே வந்து கார்த்திக் அவனை முறைக்கும் முகத்துடன்
அத்தியாயம் நிறைவு பெறுகின்றது!

மீண்டும் ஆசிகளுடன்!! 



No comments:

Post a Comment