Thursday, January 29, 2015





EPISODE--474 தமிழ்

அத்தியாயம்-474
THURSDAY.-29/JAN/2015
இன்றைய  அத்தியாயம் புதுவிதமான திருப்பத்தை  கொண்டதாக அமைந்தது என்றே சொல்லலாம்.
மாதவியின் பெரிய திட்டம் பல ஏமாற்றங்களைக் கொண்டு முடிவதும்,கமலின் பெரிய ஆசை நிறைவேறாமல் போவதும்,இதனால் மாதவி ஆத்திரமும் கமல் பெரிய வேதனையும்  அடைவதாக அத்தியாயம் காட்டுகிறது.
 காட்சி-1
மாதவி மீண்டும் மீண்டும் கார்த்திக்கின் அறைக்கு வந்து தொடர்ந்து அவனுக்கு  ராஜியைப் பற்றிக் கோள்மூட்டிக் குழப்ப நினைக்கின்றாள்.
ஆனால் கார்த்திக்கோ அவள் தனது அறைக்கு வந்து செய்யும் அட்டூளியங்களை பொறுத்துக் கொள்ளமுடியாதவனாக அவள் மீது எரிந்து விழுகின்றான்.
ராஜியைப் பற்றி தனக்குத் தெரியும் என்றும் அவள் கடைசிவரை கமலின் அழைப்புக்குச் செவிசாய்த்து அவனுடன் சாப்பிடப் போக மாட்டாள் என்றும்
தான் மாதவியை  நம்ப மறுத்து ,ராஜியை தான் முழுதாச்க நம்புவதாகவும் சொல்லி வைக்கின்றான்.அவளை அறையை விட்டுத் துரத்துவதும்  மிகவும் சரியாகவே இருந்தது.ஆனால் அவனால் அவமதிக்கப் பட்ட மாதவியோ புது விதமாக கமலையும் ராசியையும் சேர்த்துக் கதை
 இதில் வேடிக்கை என்ன வென்றால் இப்படிப் பட்ட ஒரு ஊழியரை  இந்த  அலுவலகத்தில்  இவ்வளவும் நடந்த பின்னரும் வைத்திருப்பதுதான்!தனது சொந்த விடயங்களில் மூக்கை நுழைக்கும் இவளை அப்போதே விலையை விட்டுத் தூக்கி இருக்க வேண்டாமா?இந்த விடயத்தில் இயக்குனரின் போக்கு புரியவேயில்லை. .
காட்சி-2
 விஷ்ணு ராதிகா வரும் காட்சி!வேலையில் மிகவும் கவனத்தோடும் ,கெட்டித்தனத்தோடும் நடக்கும் ராதிக்காவை விஷ்ணு மனம் நிறைய மெச்சுகின்றான்.
ராதிகாவுக்கு  அவனது மெச்சுதலும் அவன் தனது மகளில் காட்டும் அக்கறையும் மனதில் மகிழ்ச்சியைத் தருகிறது..
அதை அவனுக்கு அவள் சொல்லவும் செய்கின்றாள்.
காட்சி-3
கமலுக்கு வாக்குக் கொடுத்த  ராஜி, கார்த்திக் அடித்துச் சொன்னது போலவே கமலின் பிறந்த தினத்துக்கு அவனுடன் சேர்ந்து கொண்டாட வரவில்லை.காரணம் சொல்லவில்லை.கமலுக்கு அது பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.சாப்பாட்டுக்  கடையில் கடை மூடும் வரை இருந்து பார்த்து விட்டு செல்கின்றான்.கார்த்திக்குக்கு,ராஜி ஒரு துரோகி  என்று நிரூபித்து அவனைத் தன் பக்கம் இழுக்கும் வேலையில் முழுமூச்சாக   இறங்கியுள்ள மாதவியும் அங்கு ஒளிந்து நின்று கமலை அவதானிக்கின்றாள். ராஜியும்  இன்னும் வராத காரணத்தை அவளால் புரிந்து கொள்ள முடியாமல் தனக்குள்ளேயே சினப்பது முகத்தல் தெரிந்தது.அவளைப் பொறுத்தவரையில்.இது அவளது சவாலுக்கு கொடுத்த செருப்படியாகும்.நமக்கு இதுவும்  வேண்டும் இன்னமும் வேண்டும்  இவளுக்கு என்று சொல்லத் தோன்றும் பாங்காக அந்தக் காட்சி அமைந்தது.

காட்சி-4
சாப்பாட்டுக் கடையில் ராஜியைக் காணாது ஏமாற்றம் அடைந்த கமல் ரஜியைத் தேடி அவளது வீடு வரை செல்கின்றான். அவள் கதவைத் திறந்து உள்ளே  வரச் சொல்கின்றாள்.அவனை அமரும் படியும் பணிக்கின்றாள்.ஆனால் அவள் மீது  கோபமும் ஏமாற்றமம் கொண்டவனாக தான் அங்கு அமர வரவில்லை என்றும் அவளுக்கு என்ன ஆயிற்று என்று அறியவே வந்ததாகவும் சொல்லி அவளிடம் காரணம் கேட்கின்றான் கமல்.
ஆனால் அவள் அதற்கு.அவனிடம் மன்னிப்பு கேட்பதைத் தொடர்ந்து ,மிகவும் கவலையுடன் நீ என்னைப் பற்றிப் பிழையாக விளங்கிக் கொண்டுதானே வரவில்லை என்று அவளது இந்த போக்கை முன்னரே எதிர் பார்த்தவனாக கமல் பேசுகின்றான்.
நீ வரமாட்டாய் என்று எனக்குத் தெரியும் என்றும்   சொல்கின்றான்.அதற்க்கு அவள் அழுது கொண்டே அவனிடம் மன்னிப்புக் கேட்கின்றாள்.அவனது தோரணையில் அவள் தனக்கு தனது நட்புக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டே இருந்தது போலவும்,ஆனால் கடைசியில் காலை வாரி ஏமாற்றியது போலவும் கருத்துத் தொனித்ததைக்காணக் கூடியதாக இருந்தது!
ராஜி தான் வராததற்குக் காரணம் சொல்ல முனைகின்றாள் .ஆனால் அதைக்   கேட்குமளவுக்கு அவன் பொறுமையுடன் அங்கு நிற்காமலேயே அவளைச் சோகத்தில் ஆழ்த்தி விட்டு நீங்குகின்றான்!அவளது சோகமான முகத்துடன் பாகம் முடிகின்றது.
ஒட்டு மொத்தமாக உணர்வுபூர்வமான அத்தியாயம்.
ஆனால் மாதவியின் வில்லத்தனமும் கமலின் எதிர்பார்ப்புக்களும் கொஞ்சம் யதார்த்தத்தை மீறி நின்றன என்று சொல்லலாம்.
கார்த்திக் ,சுருதியின் நடிப்பு எப்போதும் போல அற்புதமாக இருந்தது.
மீண்டும் ஆசிகளுடன்....!







Wednesday, January 28, 2015






EPISODE-473

அத்தியாயம் -473  WEDNESDAY-JAN/28/2015

இன்றைய  அத்தியாயம் ஒருவிதத்தில் தனக்கென ஒரு விசித்திரமான முறையில் இடத்தைப் பிடித்துக் கொண்ட பாகம் என்றேதான் சொல்லவேண்டும்.
காட்சி-1

கார்த்திக்கை தன் பக்கம் வளைத்து,அவனது மனதைத் தன்பக்கம் .திருப்பி,அவனுக்குத் துணையாக இருந்து அவனது இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளத் தன்னால் நிச்சயமாக முடியும் என்பதில்,அசாத்தியமான
நம்பிக்கை கொண்டு செயற்ப்படும் ஒரு தன்மையுடன் ஒருவிதமான .பயமோ,அசூசையோ இல்லாமல் மாதவி நடப்பது ஒரு விசித்திரமான
கதையோட்டமாக இருக்கிறது.
மாதவி போன்ற அறிவிலிகளுக்கு நோக்கம் ஒன்றுதான் என்பதை இந்தப் பாத்திரம் தத்ரூபமாக எடுத்துக் காட்டுகின்றது.
எத்தனை அவமானப் பட்டாலும் மர மண்டையுடன்,தனது நோக்கத்திலேயே கண்ணாக இருக்கும் ,மனித சுபாவம் எப்படி செயற்ப்படும்  என்பதற்கு ,மாதவி ஒரு அருமையான சாட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
மாதவியாக நடித்த நடிகை அனு சுலாஷுக்கு  மிகவும் பாராட்டுக்கள்!
இந்தக் காட்சியில் கார்த்திக்கின் நடிப்பு அற்புதமாக இருந்தது.
ஆனால் .இந்தக் காட்சியின் மூலம் இயக்குனர் எந்த வாழ்க்கையின் அம்சத்தை இங்கே கொண்டுவந்து நிரூபிக்க முயல் கின்றார் என்பது தான்
புதிராக இருக்கின்றது!
ராஜியைப் பிரிந்து தன வாழ்க்கையின் பிரிவுத் துயரத்தில் இருக்கும் கார்த்திக்கு இதுவா மாற்று மருந்து?
ஒரு ஆணை அடைய ஒரு பெண் தன்மானத்தை இப்படியா இழப்பது?
இது இளம் பெண்களின் தன்மையை எச்சரிப்பதா? இல்லை குத்திக் காட்டுவதா? இல்லை இது ஆண்களுக்கு  ஒரு பாடமா?

காட்சி-2
விஷ்ணு மணிமேகலை காட்சி
இதில் விஷ்ணுவினதும் மணிமேகலையினதும்  திரும்பவும் அரும்பும் காதலுக்கு பங்கம் ராதிகாவின் ரூபத்தில் வருகிறது.
ராதிகாவின் குழந்தைக்காக அவளை அழைத்துச்  செல்லும்
விஷ்ணு மணிமேகலைக்கு பொய் சொல்ல வேண்டி வருகிறது.
இதனால் மணிமேகலைக்கு அவனில் இருக்கும் மதிப்புக் குறைவதுடன் நம்பிக்கையிலும் ஒரு கீறு விழுகிறது.
மணிமேகலை துயரத்துடன் விஷ்ணுவிடனும்  அளவளாவிச் செல்கின்றாள்.
ராதிகா  அவனை உயர்ந்த இடத்தில் வைத்து அவனது உயர்ந்த குணத்தையும் உதவியையும் பாராட்டுகின்றாள்.
காட்சி-3

கமல் ராஜி சந்திக்கும் காட்சி!
கமல் முன்னரைவிட இன்னும் நெருங்கி ராஜியிடம் பழக முனைவதைக் காட்டும் காட்சி.
ராஜி அவனது அறைக்கு சென்று  அவனோடு சாதாரணமாக அளவளாவும் போது,தான் காலம் காலமாக சேர்த்து வைத்த பலதரப் பட்ட ஞாபகமான பொருட்களை அவளுக்கு எடுத்துக் காட்டுகின்றான் கமல்.
சிறிய வயதில் ராஜியுடன் ஒன்றாகப் படிக்கும்  காலங்களில் ராஜி அவனுக்கு சிநேகிதி என்ற முறையில் கொடுத்த பல பொருட்களை அவன் பத்திரமாக சேர்த்து வைத்திருந்திருக்கின்றான்.
அவற்றைப் பார்த்து ராஜி ஆச்சரியப் படுகின்றாள்.
அதற்காக தேவையில்லாத பொருட்களைக் கூடச் சேர்த்து வைத்திருக்கிறாயே என்று வியந்தும் கூறுகின்றாள்.

காட்சி-4
இந்தக் காட்சியில் ராஜியும்.கமலும் தொடர்ந்து நாளைக்கு வரவிருக்கும் அவனது பிறந்த தினத்தைப்  பற்றியும்  கமல் அவளுக்கு ஞாபகப் படுத்துவதோடு தனது பிறந்த நாள் நினைவாக அவளை தன்னுடன் விருந்து சாப்பிடவும் வரச் சொல்லுகின்றன் .அவளும் தான் நிச்சயமாக ,அவனது
பிறந்த தினத்தைக் கொண்டாட சாப்பிட வருவதாக உறுதி அளிக்கின்றாள்.
இவர்களது சம்பாஷனை முழுவதையும் மாதவி வெளியில் இருந்து ஒட்டுக் கேட்டுக் கொண்டு இருக்கின்றாள்.
அத்துடன் காட்சி முடிகின்றது.

ஒட்டு மொத்தமாக,வித்தியாசமான முறையில் கார்த்திக்கும் ராஜிக்கும் இன்னொரு சோடியைக் கொண்டுவந்து அவர்கள் பிரிந்து இருக்கும்  காலத்தை யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட நிலையில்  வைத்திருக்கும்
அலுவலக இயக்குனர்களை  என்னவென்று சொல்லுவது?
வழமை போல இந்தத் தொடரின் ஆயுள் எமது அபிமானத்துக்குரிய கார்த்திக் ராஜி பத்திரங்களின் சேர்தலிலும் அவர்களினதும் புரிதலில்   மட்டுமே தங்கி இருக்கிறது என்பது  எனது அபிப்பிராயம்.
போகின்ற  போக்கில் பொருத்தமற்ற கதை வசனத்தை புகுத்தி,ரசிகர்களை சலிக்க செய்யும் இந்த நிலைமை மாற வேண்டும்.
மிக விரைவில் இந்த காதல் சோடிகளின் காதலுக்கு ஒரு அர்த்தம் கற்பிக்கவேண்டும்.
இல்லாவிட்டால் இந்த தொடருக்கு இருக்கும் மரியாதை மங்கிக் கொண்டே போய்,அற்புதமாக நடிக்கும் இந்த முக்கிய நடிகர்களை அவர்களது திறமைகளை மண்னடிப்பதாகவே முடியும்..
அதிலும் முக்கியமாக முதலாவது அத்தியாயத்தில் இருந்து இன்றுவரை ,
மிக ஆவலுடனும்,உற்சாகத்துடனும் மிகவும் உள்ளார்ந்து இந்த  தொடரை ரசித்து வரும் ரசிகர்களுக்கு துரோகம் செய்வதாகவே  முடியும் என்பது எனது ஆணித்தரமான கருத்து..

மீண்டும் ஆசிகளுடன்


.