Wednesday, December 31, 2014

EPISODE-457 ENLISH SUMMARY


EPISODE-457 ENGLISH SUMMARY
THURSDAY 31/DEC/2014

Good evening All my friends!

This has been a very interesting episode with a least expected ending !
Rajis appa continued  his conversation with Karthik about his future plan for Raji after the divorce!
It was very interesting to observe  a man with very conservative ideas about married life  was talking very openly of the future of these two.
That is a very welcoming concept .
But on the other hand ,Karthik was not very open about his feelings at all.
He was only, changing his facial expressions ,superbly to display his inner feelings .
It showed to the viewers that he still loves Raji ,but he is not willing to admit that to Rajis appa !
He also  agreed with him about his future plans for his daughter.
His face changed when Rajis appa talked about Kamal as her future husband.But he never said anything.What does it say? very baffling!!!

Raji meets Karthik and .they exchange very meaningful glances .
They know very well ,that they love each other.
Raji gave him a lettter with all the important and talked about aspects in it.
The letter was all about her loving feelings
She did not miss anything about their true feelings and the current situation! He read on and looked at her with a lot of love  and feelings in his eyes,yet ,he din't seemed to be over whelmed by the sudden letter from her .

She layed the condions there again to him in saying that she likes to meet him in a certain hotel and she left.
Karthik wanted to say something to her but Raji stopped him and said what ever he wants to say he can say it when they meet up.
She also told him that she really believes that he will not let her down .
But at the same time ,he also said if he does not turn up she will know that he does not want to live with her anymore.
Karthik listened to her and  Raji left.
Karthik also was leaving the canteen ,While he was walking he , tried to place her letter in his back trouser pocket .He missed it and it fell on the floor . Karthik did not seem to be aware of what happened he left the canteen.
The next thing happened was ,Mathavi walked in and saw the letter. She picked it up and read it .Her reaction was a shocking one.

Raji came to the office the next day with a saree on and looked georgous !

Vishnu made jokes about it and she was telling Vishnu that she was  going to meet some one special
Karthik saw Raji  and his face lit up for a second.
Then he kept looking at her but did not say anything.
Raji was not  telling Vishnu who the person was and Vishnu adviced her to confirm with the person to make sure that the person was coming for sure.

But Raji discarded his advice by saying that  the person will come for sure.
She was smiling at Karthik who was on the phone and seemed to be having a very  important conversation with some one on the otherside.
They were looking at each other.Raji was smiling all the way.
Karthik was very quite and seemed to be pre occupied with some thing else.
The  last scene was very emotional as Karthik never turned up to meet Raji.
she waited till the place was closed.She made a few phone calls to make sure that Karthik was in the office. He was not there and she didn't know where he was.In the end She left the place with tears in her eyes.

she came home and got changed and the bell rang .
Karthik was at the door.
She opened the door and let him in.
She was visibly angry and looked at him and her mind voice was saying to him in silence 'even I asked you ,you could not make it ai"
He walked in looked at her like he was measuring her up deep  and his mind voice saying  about what she told him earliar in the canteen "if you wan't come  I will take it as you don't  want to continue with me "
they looked at each other and it ended with a sad note .
They both acted wondefully well as always.

Overall a very emotional and very baffling episode to end the year with.

We only know that Raji wanted a second chance but Karthik is having second thoughts about their life togther ,for some valid reasons
We will have to wait and see what is in store for us about this  love story which has certainly enchanted us in many ways and dissappointed us  in many ways too!

The year has been a roller coaster ride for this couple and us are like !
Hope fully these two will patch up their differences in a positive way and seek happiness in their lives to gether!!!!!

Good night every one !

WISH  YOU A VERY HAPPY NEW YEAR !!!!!
SEE YOU ALL IN THE NEW YEAR WITH MORE  UPDATES AND SUMMARIES!
ENJOY THE EPISODE YOUR SELVES!






Tuesday, December 30, 2014


EPISODE-456 TAMIL 



EPISODE-456
அத்தியாயம்-456 TUESDAY DEC/30/2014

இன்றைய அத்தியாயம் ஏதோ ஒரு வித்தியாசமான பாதையை நோக்கி  நகர்ந்தது போன்ற  பிரமையில் எம்மை ஆழ்த்தியது  என்றே சொல்லவேண்டும்!
அலுவலகத்தில் இத்தனை நாட்களிலும் நடந்த பல யதார்த்தத்தை  மீறிய காட்சிகளுக்கு இன்றைய பாகம் சிகரம் வைத்து நம்மையும் கலக்கியது!

காட்சி -1,2
விஷ்ணு மனோகரனின்  வீட்டை விட்டுத் தன வீட்டுக்கு போய் விட்டான் என்று நினைத்தவர்களுக்கும்,மனோகரனின் மனைவி ராதிகாவுக்கும்
அவனை அவள் வீட்டுக்கு முன்னரே கண்டது பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது!
இவ்வளவு   சுலபமாக ,விஷ்ணுவின்  பாத்திரத்தை ஒரு தியாகியின்  உயரத்துக்கே தூக்கி வைப்பது யதார்த்தத்துக்கு ஒப்பானதா இல்லை அதை விட மேலேயா என்ற கேள்விகளை எழுப்பத்தான் செய்தது!
ஆனாலும் மனோகரனின் பாதிக்கப் பட்ட குடும்பத்தின் பாதுகாப்பு தன்னுடையது என்று நினைத்து அருமையாகத் தன பாத்திரத்தை நடித்திருக்கின்றார் நடிகர் ,விஷ்ணு!பாராட்டுக்கள்!
ராதிகாவாக நடித்த பெண்ணும் அருமையாக நடித்திருக்கின்றார்.

காட்சி-2
ராஜியும் அப்பாவும் வரும் காட்சி! இது மகளின் வாழ்வில் மிக்க அக்கறை கொண்ட அப்பாவாக அவர் எடுக்கப் போகும் அடுத்த  முடிவு பற்றியது!
அப்பா உண்மையாகவே மகளுக்கு புது மாப்பிள்ளை ஒழுங்கு படுத்துகின்றாரா இல்லை இவர்கள் இருவரையும் நன்றாகவே புரிந்து வைத்துக் கொண்டு இவர்களுக்கு ,ஒரு வாழ்க்கைச் சோதனையே வைக்கப் போகின்றாரா என்பதில் எனக்கு பெரிய சந்தேகம் ஒன்று உருவாக்கி இருக்கிறது!
அவரது உதாரமும்,கடினமான முடிவும் ,பார்ப்பதற்கு மகளைக் கேட்டுக் கொண்டு எல்லாம் இருக்காமல்,அவள் ,பிடித்தால் என்ன ,பிடிக்காவிட்டால் என்ன ,அடுத்த கல்யாணத்தை நடத்திவிடுவார் போலிருக்கிறது!
என்னதான் நடக்கும் என்று பார்ப்போமே?

காட்சி -4
மாமாவும் ,கமலும், திடீர் என்று ஒருவரை ஒருவர் பலகாலமாகத் தெரிந்தவர்கள் போல் சம்பாஷித்துக் கொள்ளும் காட்சி!
பிறகு கார்த்திக்குடன் தயங்கித்,தயங்கி மாமா,மருமகன் சம்பாஷணை செய்வதும் ,மிகவும் வாஞ்சையுடன் பேசுவதும், கேட்பதற்கும்,அவதானிப்பதற்கும் மிகவும் புதிராக இருந்தது!
அவர்கள் இருவரும் பேசுவதை கார்த்திக் கண்டு வியப்பது எல்லாமே
அவசம் அவசரமாகக் காடப்பட்டது போன்ற ஒரு உணர்வும்  எழுந்தது!
என்ன வென்று தெரியாத ஒரு மர்மமான நாவல் வாசிப்பது  போல ஒரு உணர்வு.!
கார்த்திக்கோ தயங்கித் தயங்கி ,மெல்லவும் ,முடியாமல் விழுங்கவும் முடியாமல் பேசும் பேச்சு எல்லாமே ,எதை நாளை எதிர்பார்ப்போம் என்று சொல்ல முடியாத நிலைக்கு எல்லோரையும் தள்ளியது.
 எதற்கும் வழமை போல நாளை நாளை ,வருடத்தின் கடைசி நாளை எதிர்  பார்த்துக் காத்திருப்போம்!
என்னதான் நடக்குது இங்கே என்ற கேள்வி எழத்தான்  செய்கிறது!

கார்த்திக்கும்,சுருதியும் ,ரமேஷ் குமாரும் தமது பாகத்தை நன்றாகவே வழமை போல நடித்திருந்தனர்!
ஆனால் கதையிலேதான் , தான் ஏதோ ஒரு வேகம், உயிர்  இல்லாதது போன்ற உணர்வு ஏற்ப்பட்டது!

மீண்டும் ஆசிகளுடன்! 

EPISODE-456  ENGLISH 30/DEC/2014


EPISODE-456 SUMMARY! ENGLISH-TUESDAY 30/DEC/2014

Good evening all my friends!

It has been a worrying episode for most of us, as far as the story line is concerned.
Vishnu is really  getting him self in to more trouble in the name of helping
so called Radika ,the wife of the victim Manokaran!
It seems like his guilty trip is taking him to think and take extreme measures in helping the lady and the kid! Far from reaality?
I really dont know what to say about this!
Lets hope the forthcomng events are not  going to ruin Vishnus life in the New year !!

The meeting between Raji and and her appa on the other hand  is another unbelievable ,occurence happening in Rajis life!!!

How on earth the letter managed to get to Kovilpatti?
Appa Meesai is deciding Rajis new life with someone else......My God!

How did Kamal ,came in to the scene suddenly and  was  talking to Meesai about Raji?
The  coordination of events were also very confusing!

What is happening ?

Now in the end Rajis appa and Karthik were conversing with passion like so close and yet falling a part at the same time!

MaMa mapilaai!.Maamaa maapilai! Maamaa ,Maapilaai!

It seems that shockingly enough the story is taking a new weired turn to its own demise !
I am very dissappointed with the unbelievable story line.!

The quality and the reality are sadly missing !

This is the worst update and summary I had to DO in the history of our beloved serial OFFICE .

Yet i hope the director will pull him self up with the story line, change it  and bring back the old glory!
Good luck to him!

Good night to all of you !

Monday, December 29, 2014

 EPISODE-455 TAMIL


EPISODE-455 -TAMIL
அத்தியாயம்- 455 MONDAY -29/DEC /2014 

இன்றைய , அத்தியாயம் மிக சாதாரணமான பாகமாக  இருந்தாலும்,மிக முக்கியமான அம்சங்களை மிகவும் குறுகிய நேரத்தில் காட்டியதாகவும் இருந்தது!,

காட்சி-1

நேற்று விஷ்ணு ,ராஜிக்கு,மருத்துவமனையில் நடந்த விடயங்களை எல்லாம்
அப்படியே ஒன்றும் விடாமல் ஒப்படைத்துச் சொல்வதைக் கேட்டு .ராஜி ஆச்சரியம் அடைவதுடன் மீண்டும் ,இன்றைய பாகம் ஆரம்பமாகின்றது!
அவன் சொல்வதைக்கேட்டு அவள் உண்மையை அறிந்து கொள்கின்றாள்
கார்த்திக் குடித்து விட்டு வந்ததற்கும் தானே காரணம் என்றும் தன்னிடம் மருத்துவரிடம் போகவேண்டி இருந்ததைப் பற்றி ஒருவார்த்தையும் கூடச்  சொல்லவில்லை என்றும் சொல்கின்றான்! 
அனால் அதே வேலையில் கார்த்திக்  தன்னுடன் இல்லாமல் இருந்திருந்தால்
தான் வகையாக மாட்டிக் கொண்டு இருந்திருப்பேன் என்றும் சொல்கின்றான்!
அவனுக்கு கார்த்திக்கும் ,ராஜிக்கும் மருத்துவரிடம் போகவேண்டிய தவணை இருந்தது என்று தெரிந்து இருந்தால் ,தான் நிச்சயமாக அவனை அனுப்பி வைத்திருப்பேன் என்றும் சொல்கின்றான்!
அதைத் தொடர்ந்து வெளியில் பேசிக் கொண்டு இருந்தவர்களின் கவனத்தை
உள்ளுக்கு இருந்து வந்த கார்த்திக்கின்  குரல் திசைதிருப்புகின்றது!
விஷ்ணு அவன் குரலைக் கேட்டதும் "மருத்துவரிடம் உனக்கு  போகவேண்டி இருந்தது  என்று என்னிடம் ஏன் சொல்லவில்லை 'என்று கேட்டு வைக்கின்றான்.
ராஜியும் கார்த்திக்கிடம் மிகவும் தயவாக அதையே கேட்கின்றாள்!
அதற்க்கு அவன் பதில்  சொல்லாமல் ,அவளை நிராகரித்த படியே,ஆனால் அவளைப் பார்த்துக்  கொண்டு " எனக்குத் தோணவில்லை" என்கின்றான்.
கார்த்திக் உள்ளே இருந்து கொண்டே ,விஷ்ணுவை "இவளுக்கு  ஏன் எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டு இருக்கிறாய் "என்று கேட்கின்றான் .
அவன் வார்த்தைகளில் ,ஒரு குத்தல் தனம்  தெரிந்தது!
ராஜி முதல் நாள் அவன் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததற்கு,அவள்  இவனுக்கு கொடுத்த இம்சைக்குப்  பதிலடி கொடுப்பது போலிருந்தது .
அது மட்டுமலாமல் தொடர்ந்து தனக்குப் போகத்தோன்றவில்லை என்பதுடன்
அவரவருக்கு  அவரவர் பிரச்சனை முக்கியமாக இருப்பதுடன் நீ என்னைத்தானே பார்க்க வந்தாய் ஏன் அவளோடு பேசிக் கொண்டு  இருக்கின்றாய் என்றும் குத்தலாக கேட்டு ராஜிக்கு வெறுப்பு ஏற்றுகின்றான்!
ராஜி இதைக் கேட்டு வெதும்புவதுடன் அவனை ஆழமாகப் பார்த்துக்கொண்டு.அவன் உள்ளே அழைத்த விஷ்ணுவையும் உற்று நோக்குகின்றாள்!

காட்சி-2
மணிமேகலை ,விஷ்ணுவைத் தேடி அவனது அலுவலக அறைக்கு  வருகின்றாள்.தன்னை ஏன் அவன்
 முன்னர்மாதிரிக் கவனிக்காமல்,ஏறெடுத்துப் பார்க்காமல் இருக்கிறான் என்று கேட்கின்றாள்!
அவனோ அதற்கு தனது தற்போதைய நிலைமையை சொல்வதுடன் அவளையும் மிகவும்
மனதளவில் காயப் படுத்தி ஆத்திரமாகப்  பேசுகின்றான்!
மணிமேகலையைப் பார்க்கப் பாவமாக இருக்கிறது!அவள் விஷ்ணுவிடம் கெஞ்சிப் பார்த்து விட்டு
மிகவும் நொந்த மனதுடன் கண்கலங்க வெளியேறுகின்றாள்!

காட்சி-3
விஷ்ணு மனோகரின்   வீட்டுக்கு வருகின்றான்! அங்கே அவனை மனோகரனின்  சுட்டி மகள் வரவேற்று இருக்கச் சொல்லுகின்றாள்!
அந்தச் சிறிய பெண் தன தாயையும் கூப்பிட்டு இவன் வருகையை அறிவிக்கின்றாள்!
படத்தில் மாட்டி உள்ள மனோகரின் படத்தைப் பார்த்து விஷ்ணு கண்கலங்கவே அந்த சுட்டிப் பெண்
அவனைக்  கேள்விக்கு மேல் கேள்வியாகக் கேட்டு மடக்குகின்றாள்.
பின்னர் தாய்க்கும் அவன் கலங்குவதைப் பற்றிக் கூறுகின்றாள். அவளின் நடிப்பு பிரமாதமாக இருந்தது!

காட்சி-4

இந்தக் கடைசிக் காட்சியில் விஷ்ணு தான் மனோகரின் பழைய நண்பன் என்றும் அவனுக்கு தான் பணம் கொடுக்க வேண்டி இருப்பதுடன் இவளையும் பார்த்து விட்டு அதையும் கொடுக்க வந்ததாகக் கூறுகின்றான்! மனைவி முதலில் அதை நம்பாதவளாக  தயங்கிய படியே ஏற்க்க  மறுக்கின்றாள்.  .
விஷ்ணுவையும் முன்னர் மருத்துவ மனையில் பார்த்திருப்ப தாகவும் கூறி வைக்கின்றாள்.
ஆனால் விஷ்ணு ஒருமாதிரியாக அவளைச் சமாளித்து விட்டு தான் கொண்டுவந்த பணத்தையும் அவளிடம் கொடுத்து விட்டு மிகுதிப் பணத்தை மாதா மாதம் அடைத்து விடுவதாகவும் கூறி தனது வேலை அட்டையையும் அவளிடம் கொடுத்து விட்டு புறப் படுகின்றான்!
குழந்தை அம்முவும் அவனுடன் ஏதோ ஒரு ஈடுபாடு கொண்டவளாக வந்து விடைசொல்லுவதுடன்
பாகம் முடிகின்றது!

ஒட்டு மொத்தமாக ,மிகவும்  ஒரு நல்ல அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்!
நடித்த அனைவரும் தமது தமது பங்கை மிகவும் அழகாகச் செய்திருந்தார்கள்!
குட்டி அம்முவின் பங்கு மிகவும் பாராட்டத் தக்கதென்றே   சொல்லவேண்டும்!

மீண்டும் ஆசிகளுடன்!




EPISODE-455 ENGLISH 

EPISODE-455 ENGLISH SUMMARY MONDAY 29/DEC/2014
Good evening all!
It has been an ordinary episode ,mainly  demonstrating  Vishnus feelings and also an  important scene with Karthik and Raji.

Raji was shocked to hear about what happened to Vishnu and also about Karthik and his reasons for not attending the councelling session!
Vishnu was saying sorry to Raji for holding up Karthik and he also told her that Karthik never mentioned about the councelling session with the
doctor.
He also stated that Karthik never left him as he tried his best to safe guard from him exposing the truth to the wife about the accident
Most importantly ,he also told her that he was the one who forced him to come for a drink despite Karthik refused to drink at all.

Raji was even more shocked to hear the good things about karthik .

While they were talking out side Karthik called  Vishnu from inside to come in and also asked  Vishnu why he was telling Raji  everything.

Raji was annoyed and started to talk ro Karthik and asked him why he did not say anything about what happened.
Karthik looked at her in a way that demonstrated his thoughts about how she treated him in the previous night when he tried to communicate with her.
He was rightly,and totally ignoring her by telling "it would not have made any difference anyway even if he came to the session " .
That was a big blow of a phrase  to Raji and she looked stunned by his mere boldness!
It seems like itis his turn to get back at her for what she did to him in the previous night .
The scene was brilliant  to see as these two clash with emotions!
Acting was super as always!

Maninmaekalai came to see and tried to console Vishnu !
That was a mere disaster for Manimaekalai as Vuishnu was so cold and told her of being calous in her feelings towards the affected family.
Manimaekalai was shocked to see a wounded Vishnu with  guilty feelings and blaming himself and her by nearly dragging her in to his guilty trip too.
She left him in the end with a very sad face.

Vishnu went to see Manokarans family at their home.
The little girl Ammu welcomed him with a cute smile .
Vishnu introduced him self as Manokarans old friend.
The wife also came to greet him but was somewhat baffled by his visit and kept asking questions about his generosity toward the family.
She also said to him that she remember seeing him in the hospital too.
Vishnu was shoocked by it but he kept saying that she couldnot have seen him in the hospital  as he was out of town at the time of her husbands death.
Vishnu gave her money too and lied that he owed Manokaran that money.
The wife looked with surprise but accepted the money from Vishnu.
The episode ended with Ammu saying good bye to Vishnu as he was leaving their house!

Very nice acting from all  the cast !

Ammu the little girl stole the show with her cuteness for sure too!

Overall a moderate kind of Episode with very interesting concepts!

Enjoy the episode yourselves and have a great night friends!


Sunday, December 28, 2014



EPISODE-454 TAMIL 

அத்தியாயம்-454  FRIDAY 26 /DEC/2014

இன்றைய அத்தியாயம் ,ராஜி விவாக ரத்து விடயமாக மருத்துவரைக் காணப் போய் திரும்பி வருவதில் தொடங்கி கார்த்திக் அங்கு செல்லமுடியாமல் போவதை , காரணத்தை,விஷ்ணுவிடம் அறிந்து அதிர்ச்சியடைவதில் முடிகிறது!

காட்சி-1
ராஜி  மருத்தவரிடம்    சென்று     கார்த்திக்காக  காத்து  இருந்து  பின்னர்  பலமுறை  அவனைத் தொடர்பு கொள்ள  முயன்றும் முடியாமல் ஏமாற்றம் அடைகின்றாள்!
கார்த்திக் அவளது அழைப்பை நிராகரிப்பதற்கு காரணமும் அவளுக்கும் ,நமக்கும்,  பிறகே தெரிய வருகிறது.ஆனால் அதைப் பற்றிய ஒன்றையுமே அறியாதவளாக ராஜி துன்பப் படுகின்றாள்!அவன் வராமல் விட்டதற்கு தன்னுடன் வாழப் பிடிக்காததுதான்  காரணம் என்று தப்புக் கணக்குபோட்டதையும்  ஒருவரும் பிழை சொல்ல முடியாத வகையில் தான் நிகழ்சிகள் அரங்கேறின!
மருத்துவரும் ,இன்னுமொருமுறை கார்த்திக்  வரமுடியாவிட்டால்,அவனுக்கு இந்த திருமணம் நிலைப்பதில் விருப்பமில்லை என்று கொள்வதைத்தவிர வேறு வழியில்லை என்று சொல்வதுடன்,அவனது வருகாமைக்கு ,உண்மையான ,காரணத்தையும் அறியச்  சொல்லி ராஜிக்குப் புத்திமதி சொல்லி அனுப்புகின்றார்.தனக்கு இதுசரிவரமாட்டாது என்ற நம்பிக்கை அவன் வராததால் ஊர்ஜிதமாகி யதாகவும் மருத்துவருக்குச் சொல்லிவிட்டு புறப்படுகின்றாள்   ராஜி..!

காட்சி-2

விஷ்ணுவும் கார்த்தியும் கார்த்தி  வீட்டுக்கு வந்து சேரும் காட்சி!
அதைத்தொடர்ந்து விஷ்ணு இவனை வீட்டில் விட்டுச் செல்ல குடிபோதையில் ,கார்த்தி ஆடி,ஆடி வீட்டு வாசலில் வந்து தனது வாய் மணத்தையும்,தலைமயிர் குழம்பி இருப்பதையும் சரி   செய்து கொண்டு  ராஜிக்கு மறைப்பதற்காக ஒன்றுமே பேசாமல் கதவைத் தட்டி வீட்டுக்குள் நுழைகின்றான்.
கதவைத் திறந்து விட்ட ராஜிக்கு இவனைப் பார்க்க அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது நமக்குத் தெரிகிறது!அருமையான நடிப்பு!
அவள் அவனை நிறுத்தி மருத்துவரிடம் வராதது தொடங்கி ,தனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அழைப்பு அழைப்பாததுடன் ,இப்போதும் எங்கிருந்தோ இருந்துவிட்டு வந்து தனது கேள்விகளுக்கு பதிலளிக்காத காரணங்களை உடனே   கூறுமாறு  கேட்டு   வறுத்து எடுக்கின்றாள்!
அவளது கோபமும் அங்கலாய்ப்பும் நியாயமானதே ஆனால் அவனோ
எதற்கும் கலங்காதவனாகவும்  அவளையே ,அவள் சொல்வதையே உற்று
அவதானித்தபடி தான் குடித்துவிட்டு வந்ததை காட்டிக் கொடுக்காத விதமாக
காலையில் பேசிக் கொள்ளலாம் என்று சமாளிக்கப் பார்க்கின்றான்!
ஆனால் ராஜியிடம் வகையாக மாட்டிக் கொண்டு அதற்கும் சேர்த்துத் திட்டல்
வாங்கிக் கொண்டு ,ஆத்திரத்தின் உச்சியில் அவனுக்கும் தனக்கும் இனி உறவு ஒன்றும்  இல்லை  என்று  முடிவாகப் பேசுவதைக் கேட்டு விட்டு ஒன்றுமே பேசாமல் மாடிக்கு தன படுக்கை அறைக்குப் போக படி ஏறுகின்றான்!
ராஜி விரக்தியுடன் தனக்குள் புலம்புகின்றாள்!

காட்சி-3
காலையில் விஷ்ணு ,கார்த்திக்கை தேடி வந்து ராஜியிடம் உண்மையாகவே என்ன நடந்தது என்பதைக் கூறுவதைக் கேட்டு உண்மையை ராஜி அறிகின்றாள்!அதிர்ச்சியடைகின்றாள்!விஷ்ணு தனக்கு நடந்த விபத்தையும்
தானும் மணிமேகலையும் சென்றபோது தனது அலட்சியமான ஓட்டத்தால்
வந்த விபரீதத்தையும் கார்த்திக்கின் புத்திமதியால் தான் மருத்துவமனைக்குச் சென்றதாகவும் அவனைப் பற்றி பெருமையாகவும் சொல்லுகின்றான்!
அங்கு சென்று மனோகரின் மனைவிக்குப் பணம் உதவி  பற்றியும் சொல்லுகின்றான்!

காட்சி-4-

பின்னர் அவனை அலுவலகத்துக்கு கார்த்திக் திருப்பிக் கூட்டிக் கொண்டுவந்ததைத் தொடர்ந்து  அன்புமாமாவும் அறுவைச் சிகிச்சைக்கு தேவையான பணத்தை  கட்டும் ஒழுங்கைச் செய்து விட்டு வந்து விஷ்ணுவைச் சந்தித்ததையும் மனோகரனின் நிலைமை சரியாகிவிடும் என்று நம்பிக்கையில் இருக்கும் போது மனோகரன் இறந்து விட்ட செய்தி விஷ்ணுவுக்கும்,அன்பு மாமாவுக்கும் கிடைக்கின்றது!
கார்த்திக்கும் அவர்களுடன் சேர்ந்து மனம் பதறிய படி மருத்துவ மனைக்கு
ஓடிச் செல்கின்றார்கள்!அங்கு இருக்கும் போதுதான் ராஜியின் அழைப்புக்கு
கார்த்திக் செவிசாய்க்கவில்லை என்று தெரிய வந்துள்ளது!
அத்துடன் அத்தியாயம்  முடிகின்றது!
இனி கார்த்திகைப் பற்றிய உண்மையை அறிந்து கொண்ட ராஜியின் முடிவு இப்போது மாறுமா மாறாதா?
கார்த்திக் இந்த சிநேகிதனின் வேதனையால் எவ்வளவு  தூரம் அவனும் மன ரீதியாகப் பாதிக்கப் பட்டிருக்கின்றான்?
இந்த வேதனைக்கும் அவனது ,முந்தய  வேதனைக்கும் தொடர்பு உண்டா?

ராஜீக்கு தன்னை புரிந்து கொள்ளுமளவுக்கு தன்னில் காதல் இருப்பதாக அவன் கணக்குப் போட்டு காத்திருப்பானா இல்லையா?
இவனது மௌனத்தை சகித்துக் கொண்டு வாழும் அளவுக்கு ராஜிக்கு பொறுமையும் அன்பும் அவனில் உண்டா?
இருவருமே ஒருவரை வேதனைப் படுத்திக் கொண்டு வாழ்வதில் ஏதாவது அர்த்தம் உண்டா?
மேலே உள்ள கேள்விகளுக்கெல்லாம் விடைகள் எதிபார்த்து வழமை போல் காத்திருப்போம்!

மீண்டும் ஆசிகளுடன்




 EPISODE-453 TAMIL DEC/25/2014


GOOD MORNING ALL !
I JUST MANAGED TO DO THE TAMIL VERSION OF THE XMAS DAY EPISODE!
FRIEDAY EPISODE WILL FOLLOW .THANK YOU !

EPISODE=453
அத்தியாயம்-453  25/DEC/2014 -X MAS DAY

இந்த அத்தியாயம் நேற்றயத்தின்  தொடர்ச்சியாகவும்கார்த்திக்கும்  ராஜிக்கும் இடையில் நடக்கும் ஒரு சந்திப்பில் , உணர்வுபூர்வமான வார்த்தைப்
பரிமாற்றங்களை பற்றியதாகவும் அமைந்தது!

காட்சி-1
மருத்துவமனையில் அடிபட்டு அனுமதிக்கப் பட்டு ,உயிருக்குப்   போராடிக்  கொண்டு இருக்கும் அவனது, மனைவிக்கும் அன்பு மாமாவுக்கும்
இடையில் நடக்கும் சம்பாஷணை பற்றியது.
அன்பு மாமா விடம் ,மனைவி அறுவைச் சிகிச்சைக்கு பணம் கொடுத்து உதவியவரைப் பற்றி மிகும் ஆவலுடன் அறிந்து கொள்ள முற்படுகின்றாள் .
ஆனால் அன்புமாமா ஒருமாதிரிச் சமாளித்து விடுகின்றார்.
விஷ்ணு வும் அவர்கள் பேசுவதைக்  கேட்டு அவனும் ஒன்றும் சொல்ல முடியாமல் தவிக்கின்றான். 

காட்சி -2
கார்த்திக் குற்ற உணர்ச்சியால் தவிக்கும் விஷ்ணுவை ஒருமாதிரி சம்மாளித்து ,ஆறுதல் சொல்லி அவனைக் காரில் படுத்து தூங்கச் சொல்லிவிட்டுக் காவல் இருக்கின்றான்!
பின்னர் தானே அவனை தேற்றி அலுவலகத்துக்கே அழைத்துச் செல்கின்றான்.
காட்சி-3
மணிமேகலை விஷ்ணுவிடம் வந்து பேசும் காட்சி!
அவள்பல முறை முயன்றும் அவனைத் தொடர்பு கொள்ள முடிய வில்லை என அவனிடம் கூறுகின்றாள்!
ஆனால் அவன் அவளிடம் தனது தற்போதைய நிலையையும் தான் படும் குற்ற உணர்வின் உச்ச நிலையையம் ,அடிபட்டவனின் நிலையையும் எடுத்துச் சொல்லும் போது,அவனது எண்ணம் ,சிந்தனை, கவலை எல்லாம் இப்போது  மணிமேகலையை விட இப்போதைய அவனது  நிலைமை பற்றியதே  என்பது அவளுக்குப் புரியக் கூடியதாக இருந்தது! ஆனாலும் அவள் தனது வேதனையையும் சொல்லித் தீர்த்துவிட்டுச் செல்கின்றாள்!

காட்சி-4
இதுவே இந்த அத்தியாயத்தின் முக்கியமான ஒரு கட்டம் எனவும் சொல்லலாம்.
கார்த்திக் விஷ்ணுவின் நிலைமை குறித்து ,உண்மையாகவே அவனுக்காக உணர்வுபூர்வமாக ,மன வருத்தப் படுகின்றான்!அந்த யோசனையில் கூட்ட அறைக்குள் இருக்கும்போது ,ராஜி அவனைத் தேடிக் கொண்டு வருகின்றாள்.
அதை எதிர்பார்க்காதவனாக ,அவன் அறையைப் பாவிக்க வேண்டு மென்றால்
பாவிக்கலாம் என்று எதேட்சையாக சொல்கின்றான்.
ஆனால் ராஜியோ,அவன் ஒரு முக்கியமான கூட்டத்துக்கு வரவில்லை என்பதாலும் ,அவனது முகத்தில் ஏதோ ஆதங்கம் இருப்பதை  அறிந்தது போலும்,அவனை விசாரிக்கின்றாள் .அவளது குரலில்  வழமையான  கவலையும் கரிசனையும் தெரிகிறது.
ஆனால் அவனோ முதலில் அவளது கேள்விக்கு பதில் அளிக்க விரும்பாதவன் போல் நடந்து கொண்டாலும்,அவள் ஒரே வீட்டில் இருந்து  கொண்டு ஏதாவது பிரச்சனை  என்றால் தெரியாமல் இடுப்பது சரியில்லை என்ற தோரணையில் அவனை விசாரிக்கின்றாள் .அதை அவனிடமும் கூறுகின்றாள்.அவனோ  அதன் பின்பு தான் வாயைத் திறந்து விஷ்ணுவுக்குத்தான் பிரச்சனை என்பதைக் கூறவே அவள் என்ன பிரச்சனை என்று கேட்கவே அவன் இன்னும் சொல்லத் தயங்குகின்றான் அது அவளிக்கு மனதுக்கு கஷ்ட்டமாக இருப்பது தெரிய,” சொல்லத் தேவையில்லை என்றால் நான்  கட்டாயப் படுத்த மாட்டேன்”   என்று கூறுகின்றாள்!
இங்கே நாம் ஒரு  முக்கியமான உணர்ச்சிப் போராட்டத்தை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்!
முன்னர் போல அவன் அவளிடம் எந்த தகசியத்தையுமே  சொல்லுவதற்கு தயங்குவது அவர்களிடையே வந்திருக்கும் உணர்வுப் பிளவுகளக் காட்டுகின்றதும் அது அவளது இதயத்தைக் குத்திக் கிழிப்பதும் தெரிகிறது.
ஆனாலும் அதை வெளிக் காட்டிக் கொள்ளாது அவள்  தொடர்கின்றாள்.
அவள் அந்தக் கேள்வியை அவனிடம் தன கண்கள் மூலம் கேட்கின்றாள்.
அந்த வீச்சின்,பலத்தில் , அவன் உணர்ந்து கொண்டும் ஆனால் மீண்டும் தயங்கியபடி அதை வெளியே சொன்னால் விஷ்ணுவுக்கு ஆபத்துஎன்பதைச் சொல்லுகின்றான்.
முந்திய கால கட்டங்களில் எந்த ரகசியமும் இருவருக்கும் இடையில் இருந்ததில்லை ,அதைப் பகிர்ந்து கொள்ளத் தயங்கியதுமில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது!அன்னியோன்னியம் மங்கியதுவே இதக்குக் காரணம் வேறொன்றுமில்லை!!
அதைத் தொடர்ந்து ராஜி அவனிடம் தன மனதைத் திறந்து பேசத் தொடங்குகின்றாள்
தன்னிடம் மட்டும் ஏன் அவனால் மனம் திறந்து பேசமுடியாமல் இருப்பதென்பதையும்,தன்னை மட்டும் ஏன் மன்னிக்க முடியாமல் இருப்பதென்பதையும் அவள் திடீரென்று கேட்டதுமே ,கார்த்திக் திகைப்புடன் அவளை பார்க்கின்றான்! அவனதுமனதுக்குள் என்ன ஓடியதோ தெரியவில்லை!
தன்னை அவள் இன்னும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லைஎன்பதுவும்,தனது  இதயம் இன்னும் இருவருக்குள்ளும் நடந்த வேதனையான விடயங்களால்
நொந்து இன்னும் ரணமாகி  இருப்பதென்பதுவும் இப்போது நடந்திருக்கும் விடயம் மீண்டும் எதையோ புதுப்பிக்கிறது என்பதும் காட்டும் உணர்வுகளோடு அவளை அவன் மிக மிக ஆழமான கண்களோடு நோக்குவதில் தெரிந்தது. 
இருவரும் ஒருவரை ஒருவர் ஆழமாக அளப்பது போல் பார்த்துக் கொண்டார்கள்.
அன்று விவாக ரத்து விடயமாக ஆலோசகரிடம் செல்ல வேண்டியதையும் அவள் கார்த்திக்குக்கு ஞாபகப் படுத்துகின்றாள்.
எப்படியும் வரும்படியும் வராவிட்டாலும்  தான் தனியே போய் ஓரு முடிவு எடுப்பேன் என்பது போலவும் சொல்கின்றாள்.
அவன் எப்படியும் தான் வந்து விடுகின்றேன் என்று சொல்கின்றான்!
இதில் நான் அவதானித்த அளவில் ஒரு சில நிமிடங்கள் தான் இவர்களது காட்சிகள் இருந்தாலும்.ஒருவரை ஒருவர் உயிர் போலக்  காதலித்து விட்டு
 வாழ்க்கையை மேலே தொடர்ந்து வாழ்வதற்கு நிபந்தனைகள் போட்டுக் கொண்டு ,அவசப் பட்டுக் கொண்டு ,ஆழ்ந்து ஒருவரை  ஒருவர் உணர்வதற்கு முயலாமல் குற்றம் கண்டு பிடிக்கும் ராஜியின் கதாபத்திரத்தையும் ,மனம் நொந்து தன்னை இவள் புரிந்து   கொள்ளுகின்றாள் இல்லையே என்று உள்ளுக்குள் புழுங்கும் கார்த்தியையும் தான்  நான் காண முடிந்தது!
இருவருக்கும் காரணங்கள் பல .
ஆனால் காதலின் விலை என்ன? அங்கேதான் இவர்களது எதிர்கால
வாழ்க்கையின் சிறப்பு தங்கி இருக்கிறது என்பதை தான் நாம் பார்க்க முடிந்தது!

ஆனாலும் தமது உணர்வுபூர்வமான,அற்புதமான நடிப்பால் சிந்திக்க வைக்கும்
கார்த்திக்கும்,சுருதிக்கும் பாராட்டுக்கள்!
வழமை போல் காத்திருப்போம்!
மீண்டும் ஆசிகளுடன்!