Monday, November 24, 2014

episode 431



EPISODE-431
அத்தியாயம் -431

மிகவும் ஆர்ப்பாட்டம் ஒன்றுமில்லாத அத்தியாயம்!
ஆனால்  அர்த்த பூர்வமான நிகழ்வுகள் கொண்டிருந்தது!

காட்சி-1
ராஜி,மது வின் காட்சி!
ராஜீ தனது உள்ளக் கிடைக்கயை  ஒரு நண்பனுக்கு ஒரு அன்புத் தம்பியிடம்
பகிருவது போல ,மதுவிடம் பகிர்ந்து கொள்ளுவது அற்புதமாக இருந்தது!
சுருதியின் நடிப்பும் ,மதுவின் நடிப்பும்  மிகவும் உணர்வுபூர்வமானதாக இருந்ததன!


காட்சி -2,3

கார்த்திக்,விஷ்ணு சாப்பட்டறையில் சந்திக்கும் காட்சி!
அன்பு மாமாவும்தமது உணவைச் சாப்பிட வருவதும்,விஷ்ணு விடயம் தெரியாமல் மாறி,அவர்களது சாப்பாட்டை உண்பதும்,பின்னர் விஷ்ணு உண்மை தெரிய வந்து  அன்புடன் மன்னிப்புக் கேட்பதும்,அத்துடன் கார்த்திக்கிடம் கண்ணாலேயே மன்னிப் புக் கேட்பதும் மிகவும்
நன்றாகவே இருந்தது!
இங்கே விஷ்ணுவின் இயற்கையான நடிப்பு மிக அற்புதமாக  இருந்தது!
தன் நண்பனிலுள்ள பாசத்தை ,பொறுமையாக ,அவன் பசியுடன் சாப்பிட்டுப் போகும் வரை இருந்து பார்த்து செல்லும் கார்த்திக்கின்   நடிப்பும் மிக அருமையாக இருந்தது!
அதிகம் வார்த்தைகளைக் கொட்டவில்லை ,ஆனால் முக பாவத்தினாலேயே
தனது உள்ளத்தில் உள்ளதைச் சொன்ன மாதிரியான நடிப்பு அற்புதம் !

காட்சி 4
ராஜி ,கமல் வரும் காட்சி!
முன்னர் கூடவே  கமலில் ஈர்ந்த  சந்தேகத்தை  ராஜி ஊர்ஜ்தப்  படுத்தியது போன்ற காட்சியாக இருந்தது..
கமல்  அவளுடன் நகைச்சுவையாக கதைத்து தனது காதலை வெளிப்படுத்துவதுடன் அவளையும் அடைய  மிகவும் முனைகிறான் போன்ற
ஒரு எண்ணம் வரக்  கூடியதாகவே  அவனது பேச்சுக்களும். நடவடுக்கைகளும் தெரிகிறது!
ஆனாலும் தன்னை காட்டிக் கொள்ளாத வகையில்,ராஜியை அவன் நம்ப வைக்க மூனைந்தாலும்,கடைசியில் ராஜியிடம் கையும் மெய்யுமாக
அகப்படுவது போல  அத்தியாயத்தை முடித்திருந்தார்கள்  !  
உண்மையில் அவன்தான் இந்ததொலை பேசியில் ராஜியை அழைத்து  இம்சை கொடுக்கின்றவனா  என்பது வருகின்ற அத்தியாயங்களில் தான் தெரியவரும் என எதிர்பார்க்கலாம்.!

ஒட்டு மொத்தத்தில் ஒருமனதுக்கு  இதமான அத்தியாயம்!

மீண்டும் ஆசிகளுடன்...!

No comments:

Post a Comment