EPISODE-434
அத்தியாயம்-434
இன்றைய அத்தியாயம் ஒரு உணர்வு பூர்வமான,திருப்பங்களைக்
கொண்ட ஒரு நல்ல அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும்!
காட்சி-1
ராஜியின் வேலைக் குழுவைச் சேர்ந்த குமார் ,மது,ஜக்குலின் ஆகிய மூவருக்கும் இடையில் நடக்கும் பேச்சு வார்த்தைகளைப் பற்றியது!
வயதில் மூத்தவனாய் இருக்கும் குமார் தனது சக வேலையாளிகளுடன்
எவ்விதம் நடந்து கொள்ளுகிறான் என்பதும்,தனது அதிகாரத்தை அவர்களில் செலுத்தி அவர்களை மடக்க முயற்சிபதுவும் அதிலே தோல்வி அடைவதையும் காட்டுகிறது!
முடிவில் மதுவும் ஜகுலினும் முன்னர் போலல்லாது இப்போது ஒருவர் புரிந்து நடப்பதையும் தெளிவாகச் சொல்கிறது!
காட்சி-2
ராஜி கமலின் காட்சி! கமல் ராஜியைத் தேடி வந்து தான் வேலையை விட்டு போவதாகவும் அதற்கு முதல் அவளிடம் சொல்லிவிட்டு போக வந்ததாகவும்
கூறுகிறான்!
அவனிடம் ராஜி நடந்தவற்றுக்கெல்லாம் மன்னிப் புக் கேட்டுக் கொள்ளுகின்றாள்.
ராஜியோ,தன்னை விட்டு விட்டு வேலையையும் தன் நிமித்தமாக விடவேண்டாம் என்று அவன் மீது உள்ள உண்மையான அக்கறையுடன் கூறுகின்றாள்.!
கடைசியில் அவனை ஒருமாதிரியாக மனம் மாற்றுகிறாள்!
அவனும் சந்தோஷமாக அவளது மன்னிப்பை ஏற்றுக் கொண்டு தான் வேலையை விடுவதில்லை எனத் தீர்மானிக் கின்றான்!
காட்சி-3
விஷ்ணு மணிமேகலைக்கு இடையில் புதிதாக உருவாகி வரும் பாசம் இன்னும் கூடிக் கொண்டு வருவது போன்ற ஒரு உணர்வுபூர்வமான காட்சி இது!
விஷ்ணுவில் மணி மேகலைக்கு இருக்கும் காதல் இப்போது யார் அவனுக்கு தொலைபேசியில் பேசினாலும் அவனைச் சந்தேகப்படுவதும் அவனிடம் இருந்து அக்கறை எதிர் பார்ப்பதாகவும் காட்டப் படுகிறது!
விஷ்ணு வழமை போல விளையாட்டாக அவளைச் சீண்டினாலும்,
அவனுக்கும் அவளது போக்குகளில் உள்ள புதான மாற்றம் எதையோ உணர்த்துவது போன்ற உணர்வை ரசிகர்களுக்கு வர வைக்கிறது!
காட்சி-4
இதுவே இந்த அத்தியாயத்தின் உணர்வு பூர்வமான,உச்சக் கட்டமான காட்சி என்று சொல்லலாம்!
ராஜியும்,கமலும் சாப்பாட்டறையில் இருக்க கார்த்திக் அவர்களிடம் வந்து
கமலை காணும்போது என்ன நடக் கிறது என்ற சுவாரசியமான காட்சி!
ராஜிக்கு அனாமதேயமாக தொலைபேசியில் உண்மையாகவே இம்சை கொடுத்தவன் யார் என்பதை கண்டு பிடித்ததை தொடர்ந்து இருவரும்
சாப்பட்டறையில் அமர்ந்து அளவளாவிக் கொண்டு இருக்கும் போது,ராஜி தன்னை அறியாமலேயே கார்த்திக் வந்து கமலிடம் நடந்த தப்புக்கு மன்னிப்புக் கேட்டானா என்று அறிய முனையும் போது கமல் அதைப் பற்றி அசட்டையாக எடுத்து விட்டு இருக்கிறான்.
உனக்கு கர்த்திக்கில் கோபாம் வரவில்லையா என்றும் கேட்கிறாள்!
ஆனால் ராஜி திரும்பவும் அவனிடம்,கார்த்திகைப் பற்றி யும் அவனின் ஆணவத்தைப் பற்றியும் புகார் கூறுகிறாள்!
அவன் ஒருபோதும் இறங்கிவந்து கமலிடம் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என்று அங்கலாய்க்கவும் செய்கிறாள்!
அவனைத் திட்டுவதுடன் யாராவது அவனது முகத்தில் தண்ணீரை விட்டெரிந்தால்தான் அவனுக்கும் அவமானம் என்றால் என்ன என்று தெரியும் என்றும் சொல்லி வைக்கின்றாள்!
அதே வேளையில் கார்த்திக் சாப்பாட்டறைக்குள் நுழைகிறான்!
இருவரையும் ஒன்றாகப் பார்த்ஹ்டு விட்டு முறைத்த படி தனக்கு
காப்பி எடுக்க போகிறான் ,
கமல் அவனது முறைப்பைக் கவனித்து விட்டு தன் முனனால் இருக்கும் கண்ணாடிக் கலசத்தில் தண்ணீரை நிறைக்கின்றான்!
ராஜி இதைக் கண்டு பதட்டம் அடைந்து என்ன செய்யப் போகின்றாய் என்று கேட்கிறாள் .
அதற்க்கு கமல் ,கார்த்திக் என்னுடன் சீண்டுவானாய் இருந்தால் நானும்
தண்ணீரை அவன் முகத்தில் விட்டெறிவேன் என்று சூளுரைக்கின்றான்!
இதைக் கேட்டு ராஜி அவனை அப்படிசெய்ய வேண்டாம் என்றும் தான்
அதைகே கிண்டலாகத்தான் சொன்னதாகவும் கூறி அவனைத் தடுக்க முயல்கிறாள்.
அத்துடன் அப்படிக் கமல் செய்தால் அது மிகவும் கீழ்த்தரமான செயல் என்றும்,அதன் பின்பு கார்த்திக்கும் அவனுக்கும் ஒருவிதமான வித்தியாசம் இருக்காது என்றும் கூறிப் பார்க்கிறாள்!
அதேவேளை காப்பியைக் கையில் எடுத்துக் கொண்டு கார்த்திக் நேராக
அவர்களது மேசைக்கு வந்து அவர்களுடன் அமர்கிறான்.
அதை இருவருமே எதிர்பார்க்கவேயில்லை!
ஆனால் இருவரையும் மாறி,மாறி ஏறெடுத்துப் பார்க்கிறான்!
ஆனால் மறு நொடியில் .கமல் தண்ணீரை அவன் முகத்தில் விட்டெறிகிறான்!
ராஜி இதை கண்டு ஸ்தம்பித்து நிற்கிறாள்.
கார்த்திக்கும் முதலில் இதை எதிர்பார்க்காவிட்டாலும் தன்னை சுதாகரித்துக் கொண்டு இருவரிடமும் மாறி மாறி நடந்த எல்லாவற்றுக்கும் மன்னிப்புக் கேட்கிறான்!
அவனது அமைதியான ,தயவான பாணி ,இருவடையும் ஆச்சரியத்தில்
ஆழ்த்துகிறது!
தான் எடுத்த காப்பியையும் அவன் மேசையில் விட்டு விட்டு எழுந்து செல்கின்றான்!
ராஜி ,கமலை கோபத்துடனும் கண் கலக்கத்துடனும் பார்த்து விட்டு" இந்த ஆண்களுக்கு ஆணவம் தான் எதையும் விடப் பெரிது " என்று விரக்தியுடன் கூறி விட்டு செல்கின்றாள்!
கமலில் உள்ள ஏமாற்றமும்,கார்த்திக்கின் குரலில் இருந்த உண்மையும் ,நேர்மையும் அவளது மனச்சாட்சியை உறுத்தியது போலும்!
கண்கலங்க அவள் போவதைப் பார்த்துக் கொண்டு சிந்தனையில் கமல் ஆழ்வதுடன் அத்தியாயம் முடிகிறது!
அருமையான கடைசிக் காட்சி!
சுருதி கார்த்திக்கின் நடிப்பு அற்புதம்!
சித்தார்த்தும் மிகவும் உணர்வுபூர்வமாக நடித்திருந்தார்.
மீண்டும் ஆசிகளுடன்

No comments:
Post a Comment