EPISODE-432
அத்தியாயம் -432
அற்புதமான,உணர்வு பூர்வமான ,யதார்த்தத்துடன் ஒட்டிய
அத்தியாயம் !
காட்சி -1
விஷ்ணு,மணிமேகலை சந்திப்பில்,இருவருக்கும்,ஒருவர்மேல் ஒருவருக்கு
இருக்கும் ஒரு ஈர்ப்பு வார்த்தைகளால் வெளிவரும் காட்சி!
மிக அழகான முறையில்,இருவரும் தமது மன விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்ளுவது நன்றாகவே இருந்தது!
இருவரின் நடிப்பும்,பேசிய வார்த்தைகளும் அருமையாக இருந்தன!
காட்சி-2
கார்த்திக் விஷ்ணு அன்பு வரும் காட்சி!
ராஜிக்கு,தற்போது நடக்கும் ,தொலை பேசிப் பிரச்னையை யார்மூலமோ
அறிந்து கொண்டு வந்து அன்புமாமாவிட்ம் அதை ஊர்ஜிதப் படுத்தும் காட்சி
மிகவும் நன்றாகவே அமைந்தது!
விஷ்ணுவை முறைப்பதுவும்,அன்புவிடம் யார் மேல் சந்தேகப் படுவது என்பதையும் அறிந்து கொண்டு அவனுக்கு வரும் கோபம்,அவன் பழைய படி
இருந்த கார்த்திக்காக மாறிக் கொண்டு இருப்பதன் அறிகுறிகள் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது!
கோபத்தில் பழைய கார்த்திக் கென்று சொல்லும் போது,அவனுக்கு ராஜியில் உள்ள அன்பும் அக்கறையும் ,உரிமையும்,அவளுக்காக யாரிடமும் கோபப் பட்டு சண்டை பிடிக்கும் தன்மையையும் தான் நாம் கவனத்தில் எடுக்க வேண்டுமே தவிர இந்தக் கோபக் காரனுக்கு புத்தி மட்டம் என்று கணக்கை
போடுவது சரியானதல்ல.
அன்புவிடம் விடயத்தை அறிந்து கொண்டு கமல் மீது ஆத்திரம் கொண்டு
அன்பு தடுக்கவும் நில்லாது அவன் வீறு கொண்டு எழுந்து செல்லும் காட்சி
அவனது கோபத்தின்,உரிமையின் அளவுகோல்களாகக் கொள்ளலாம்!
காட்சி-3
சாப்பாட்டறையில் கமல் ராஜி இருவரும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.
ராஜிக்கு ஏற்க்கனவே கமல் மீது சந்தேகம் வலுத்து இருக்கிறது .
அந்த சந்தேகத்தை, உறுதிப் படுத்தும் முயற்ச்சியில் அவனோடு ராஜி
அளவளாவும் வேளையில் புயல் மாதிரி வந்து தனது அதிருப்தியையும்
ஆத்திரத்தையும் கொட்டித் தீர்க்கும் கார்த்தியின் காட்சி இது!
போதாக் குறைக்கு,ராஜிக்கு கமல் மீது சந்தேகம் என்பதையும் கமலுக்கு சொல்லி அவன் முகத்தின் மீது ஒரு கோப்பை தண்ணீரையும் விட்டெறிகிறான்!
என்ன கோபம் ?என்ன நடிப்பு?
மூவரும் அற்புதமாக நடித்தார்கள் என்றே சொல்லவேண்டும்!
அது ஒரு நாடகத்தில் உள்ள நிகழ்ச்சியாகவே தெரியவில்லை.
உணர்வுகளின் உண்மையான போராட்டத்தின் விளைவுகளாகவே
தெரிந்தன!
காட்சி -4
கடைசிக் காட்சி ஆனால் மிகவும் உணர்வு பூர்வமான காட்சி!
தனது உற்ற நண்பனை அவமானப் படுத்திய ஆத்திரம் ராஜிக்கு இருக்கிறதால்
அதை அப்படியே கார்த்திக்கு சொல்லி அவனை ராஜி தாறுமாறாக வைகிறாள்!
தனது உள்ளத்தில் பூட்டி வைத்திருந்த வேதனையை எல்லாம் திரட்டி
அப்படியே கார்த்திக்கிடம் ராஜி கொட்டுகிறாள்!
கடந்த காலத்தில் நடந்த அவனது இம்சைகள் ,தொல்லைகள்,அவனது பேச்சுக்கள்,பிடிக்காத நடத்தைகள், அவன் பெண்களுடன் நடந்து கொண்ட விடயங்கள் எல்லாம் அப்படியே கொட்டித் தீர்த்து விட்டு அறையைவிட்டு நீங்குகிறாள்.
நீங்க முதல் தனது வழியில் ,வாழ்க்கையில் குறுக்கிட வேண்டாமென்றும்,
தான் கமலுடன் என்னவிதமாகப் பழகினாலும்,கார்த்திக்கு அதில் எந்தவிதமான சம்பந்தமும் இருக்கத் தேவையில்லை என்பதையும்
வற்புறுத்தி கூறுகிறாள்!
அதே வேளையில்,அவள் அவனைக் குற்றம் சொல்ல ,சொல்ல அவன் மன்னிப்புக் கேட்கிறான் !
முன்னர் போலல்லாது தயங்கி ,தழைந்து தான் எதற்க்காக செய்கிறேன் என்பதை சொல்ல முன்வருகிறான் ,
ஆனால் அவனை ,அவன் சொல்வதைக் கேட்கும் அளவில் அவள் இல்லை.
தனது பக்கத்தை தெட்டத் தெளிவாக அவள் சொல்லும் போது அவன் அதை மௌனமாகக் கேட்க வேண்டிய நிலையில் இருந்தான் என்பதே உண்மை .
இங்கே சுருதி,கார்த்தியின் நடிப்பு சிகரம் எட்டியதேன்ரே சொல்ல வேண்டும்.
உணர்வுகளின் வெளிப்பாடு யதார்த்தத்தையும் மிஞ்சியது என்று சொன்னால் மிகையாகாது .
கடைசியில் ராஜி கமலைத் தேடிச் சென்று அவனை அவனது அலுவலக அறையில் காணாததுடன் தொலை பேசியிலும் தொடர்பு கொள்ள முடியாதவளாகச் சஞ்சலப் படுவதுடன் அத்தியாயம் முடிவடைகிறது!
ஒட்டு மொத்தமாக மிகவும் ரசிகர்களை இழுத்து பார்க்க வைத்த
அத்தியாயம்!
இயக்குனர்,வானகர்த்தாக்கள்,நடிகர்கள் ,மற்றும் எவரெவர் இந்த அத்தியாத்தை ரசிகர்களுக்கு தந்ததில் பங்கு கொண்டார்களோ அவர்களுக்கு
பாராட்டுப் பெற்றுத் தந்த பாகங்களில் இதுவும் ஒன்றாகும்!
மீண்டும் ஆசிகளுடன்!

No comments:
Post a Comment