Showing posts with label Episode -435 office -tamil. Show all posts
Showing posts with label Episode -435 office -tamil. Show all posts

Sunday, November 30, 2014



EPISODE-435
அத்தியாயம்-435

இன்றைய அத்தியாயம் முழுக்க முழுக்க விஷ்ணுவின் நகைச்சுவையை
மையப் படுத்தியும் இறுதியில் ,அவனது அசட்டையான    வீரம்,அவனுக்கே தீங்காக முடியும்
நிலைமையையும் காட்டியது!

காட்சி-1
தனது உற்ற நண்பனைப் பற்றி நன்றாகவே அறிந்து வைத்திருக்கும் விஷ்ணு அவனுக்கு ,கமல்
செய்த வேலையைக் கேட்டு கோபப் பட்டு அன்புமாமாவிடம் ஆதங்கப் படுகிறான்!
கார்த்திக் நன்றாக நொந்து போயிருக்காவிட்டால் கமலிடம் மன்னிப்புக் கேட்டிருக்கவே மாட்டான் என்று
சொல்லுவது மிகவும் நன்றாக இருந்தது!
அன்புமாமாவிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதே அவனது வேலைக் குழுவைச்சேர்ந்த
பிரியாவிடம்  இருந்து தொலைபேசியழைப்பு வருகிறது!
அன்புக்கு குப்பக் காரர்களுக்கும் பிரியா  ,ஜென்னிக்கும் உள்ள பிரச்சனையைச்  சொல்லிவிட்டு விஷ்ணு
அவர்களைக் காப்பாற்ற  செல்கின்றான்!
அன்புமாமாவுக்கு விஷ்ணு தனியாக பிரச்சனையத்   தானே தீர்க்க சென்றது பொருத்தமாக படவில்லை!
காவல் துறையினருக்கு   தொலை பேசியில் உதவிக்கு அழைத்து கேட்டுப் பார்க்கிறார்.
அவர்களது   உதவி கிடைக்கவில்லை!

 
காட்சி -2
கார்த்திக்கிடம் வந்து அன்பு விஷ்ணுவைப் பற்றி சொல்லும் காட்சி!
அன்பு ஆதங்கத்துடன் வந்து கார்த்திக்கை தன்னுடன் வரும்படி அழைக்கிறார்,
கார்த்திக் பல காரணங்கள் சொல்லி வர மறுக்கிறான்!
நண்பனுக்கு ஆபத்தில் உதவாத   நண்பனும் ஒரு நண்பனா என்ற தோரணையில்
கார்த்திக்கை வைது விட்டு விரக்தியுடன் செல்கிறார்.
கார்த்தி ,உண்மை நண்பனாக இருந்தாலும் ,விஷ்ணு விடயத்தில் ,அவன்
மிகவும் தள்ளி இருக்க விரும்புவதும்,வேலை நேரத்தில் .இப்படிப்பட்ட,
அநாவிசியாமான  ,தடுக்கக் கூடிய விடயங்களில் தலையைப் போட்டு
வில்லங்கத்தை   விலைக்கு வாங்குவதும்,அவனுக்கு பிடிக்க வில்லை என்பதை அவருக்கு,
எடுத்துச்  சொல்லுவதுடன்,விஷ்ணு முறைப் படி காவல் அதிகாரிகளிடம்
சொல்லி இதைத் தீர்க்கவேண்டுமே தவிர ,இப்படிப் போய்,தானே இந்த விடயத்தை
தீர்க்க முடிந்தால் வரும் ஆபத்தை,ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தையும்
அதனால் வரும் விளைவுகளால் படிக்க வேண்டிய வற்றை படிக்கவும் தேவை
 இருக்கிறது என்பதையும் அன்புக்குக் கூறுவதுடன் தனது சொந்த வேலை நேரத்தில்
இதைச செய்யவும் தனக்கு விருப்பம் இல்லை என்பதையும் தெட்டத் தெளிவாகக் கூறுவது
அவனது திடமான,பொறுப்புள்ள தன்மைகளையும் காட்டுவதாக அமைந்தது!

காட்சி-3

விஷ்ணு ,பிரியா,ஜென்னி மூவரும் திரும்பவும் அலுவலகத்துக்கு பத்திரமாக
வருவதும்,குப்பத்தில் நடந்த வற்றை மணிமேகலைக்கும்,அன்புக்கும்
அறிவிக்கும் காட்சி!
மிகவும் நகைச் சுவையாக,  விஷ்ணுவின் தீரச் செயல்களை சொல்லும் காட்சி!
இயற்கையாக,மிகவும் சாந்தமான ,விஷ்ணு தனது வீரத்தைக் காட்டுவதற்காக
பிரச்சனையைத்,தன் தலைக்கு மலே போட்டுக் கொண்டு ஒருமாதிரியாக
பெண்களிடம் மரியாதைக் குறைவாக நடந்து ,இன்னல் விளைவித்த
குப்பத்து ஆட்களுக்கு பதிலடி கொடுத்தி விட்டு,அவர்கள்ளிடம் இருந்து
பறிபோன வண்டிச் சாவியையும் திருப்பிப் பெற்றுக் கொண்டு  வந்து
சேர்கிறான்!
எல்லோரும் சந்தித்து,அன்புடன் சேர்ந்து தமது அனுபவங்களையும்
பகிர்ந்து கொள்ளுவதுடன்,விஷ்ணுவைப் புகழ்ந்து பேசுகின்றனர்.
ஆனால் அன்புமாமாவும்,மணிமேகலையும் விஷ்ணுவைப் பற்றியும்,
அவனது,அசட்டையான தையிரியத்தைப்  பற்றியும் கவலை கொள்ளுவதுடன்
அந்தக் குப்பத்து   ஆட்களால் என்ன விபரீதம் எதிர்கொள்ள வேண்டி   வருமோ
என்று காவல் அடைந்தபடியே ,விஷ்ணுவையும் கவனமாக இருக்கும் படி
எச்சரிக்கின்றனர்!

காட்சி-4
மணிமேகலையும் ,அன்புமாமாவும்  கவலைப் பட்ட மாதிரியே,பிரச்ச்சனை ,அலுவலகத்தைத்
தேடி வரும் காட்சி இது!
விஷ்ணுவின் செய்கைகளால் தாக்குப் பட்ட குப்பத்து ஆட்கள் தமது தலையாளுடன்
அலுவலகம் தேடி வருகின்றனர்!
அன்பு அவர்களை மிகவும் எச்சரிக்கையுடன் எதிர்  கொள்ளுகிறார்.
பின்னர் விஷ்ணு வும் வரவேற்பு  அறைக்கு வந்து சேர்கிறான்!
தலையாளி விஷ்ணுவைத் தம்முடன் வரச் சொல்லி மிரட்டுகிறார்கள்!
விஷ்ணு அவர்களுடன் செல்வதற்கு ஒப்புக் கொண்டு புறப்படுகிறான்!
ஆனால் அன்புமாமவுக்கு அது சரியாகவே  படாததால்  விஷ்ணுவை
திரும்பவும் அலுவலகத்துக்குள் போகச் சொல்லித் தள்ளி விடுகிறார்.
ஆனால் விபரீதமாக அவர்கள் இருவரையும் பின்னால் நின்று கட்டிப் பிடிக்கிறார்கள்!
பின்னர் அன்புமாமாவை விட்டு விட்டு விஷ்ணு வை கத்தியால் குத்த
ஆயத்தப் படுத்துகிறார்கள்  !
இறுதியாக முடியும் விறுவிறுப்பான காட்சியாக,ஒருவன் விஷ்ணுவைக் கட்டிப் பிடீக்க
அன்புமாமா அந்த  இடத்தை விட்டு ஓடிப்போக ,குப்பத்து காடையர்களின் தலையாளி
விஷ்ணு வின் வயிற்ரை நோக்கி தனது கூரான கத்தியைக் கொண்டு வந்து அணுகி நெருங்குவதும் .
அதைக் கண்டு விஷ்ணு பயந்து அலறுவதாகவும் முடிந்தது!
அந்தக் காட்சியில் விஷ்ணு கத்துக் குத்து வாங்கியதாகக் காட்டப் படவில்லை!
வாங்கியவன் போல அவன் அலறியதுடன் முடிந்தது!

இனி உண்மையில் நடந்தது என்ன என்ற மர்மமான கேள்வியுடம் முடிந்த பாகத்திற்கு
விடை பார்த்து ரசிகர்கள் நாங்கள்   காத்திருப்போம்!

மீண்டும் ஆசிகளுடன்!