Thursday, January 29, 2015





EPISODE--474 தமிழ்

அத்தியாயம்-474
THURSDAY.-29/JAN/2015
இன்றைய  அத்தியாயம் புதுவிதமான திருப்பத்தை  கொண்டதாக அமைந்தது என்றே சொல்லலாம்.
மாதவியின் பெரிய திட்டம் பல ஏமாற்றங்களைக் கொண்டு முடிவதும்,கமலின் பெரிய ஆசை நிறைவேறாமல் போவதும்,இதனால் மாதவி ஆத்திரமும் கமல் பெரிய வேதனையும்  அடைவதாக அத்தியாயம் காட்டுகிறது.
 காட்சி-1
மாதவி மீண்டும் மீண்டும் கார்த்திக்கின் அறைக்கு வந்து தொடர்ந்து அவனுக்கு  ராஜியைப் பற்றிக் கோள்மூட்டிக் குழப்ப நினைக்கின்றாள்.
ஆனால் கார்த்திக்கோ அவள் தனது அறைக்கு வந்து செய்யும் அட்டூளியங்களை பொறுத்துக் கொள்ளமுடியாதவனாக அவள் மீது எரிந்து விழுகின்றான்.
ராஜியைப் பற்றி தனக்குத் தெரியும் என்றும் அவள் கடைசிவரை கமலின் அழைப்புக்குச் செவிசாய்த்து அவனுடன் சாப்பிடப் போக மாட்டாள் என்றும்
தான் மாதவியை  நம்ப மறுத்து ,ராஜியை தான் முழுதாச்க நம்புவதாகவும் சொல்லி வைக்கின்றான்.அவளை அறையை விட்டுத் துரத்துவதும்  மிகவும் சரியாகவே இருந்தது.ஆனால் அவனால் அவமதிக்கப் பட்ட மாதவியோ புது விதமாக கமலையும் ராசியையும் சேர்த்துக் கதை
 இதில் வேடிக்கை என்ன வென்றால் இப்படிப் பட்ட ஒரு ஊழியரை  இந்த  அலுவலகத்தில்  இவ்வளவும் நடந்த பின்னரும் வைத்திருப்பதுதான்!தனது சொந்த விடயங்களில் மூக்கை நுழைக்கும் இவளை அப்போதே விலையை விட்டுத் தூக்கி இருக்க வேண்டாமா?இந்த விடயத்தில் இயக்குனரின் போக்கு புரியவேயில்லை. .
காட்சி-2
 விஷ்ணு ராதிகா வரும் காட்சி!வேலையில் மிகவும் கவனத்தோடும் ,கெட்டித்தனத்தோடும் நடக்கும் ராதிக்காவை விஷ்ணு மனம் நிறைய மெச்சுகின்றான்.
ராதிகாவுக்கு  அவனது மெச்சுதலும் அவன் தனது மகளில் காட்டும் அக்கறையும் மனதில் மகிழ்ச்சியைத் தருகிறது..
அதை அவனுக்கு அவள் சொல்லவும் செய்கின்றாள்.
காட்சி-3
கமலுக்கு வாக்குக் கொடுத்த  ராஜி, கார்த்திக் அடித்துச் சொன்னது போலவே கமலின் பிறந்த தினத்துக்கு அவனுடன் சேர்ந்து கொண்டாட வரவில்லை.காரணம் சொல்லவில்லை.கமலுக்கு அது பெரிய ஏமாற்றமாக இருக்கிறது.சாப்பாட்டுக்  கடையில் கடை மூடும் வரை இருந்து பார்த்து விட்டு செல்கின்றான்.கார்த்திக்குக்கு,ராஜி ஒரு துரோகி  என்று நிரூபித்து அவனைத் தன் பக்கம் இழுக்கும் வேலையில் முழுமூச்சாக   இறங்கியுள்ள மாதவியும் அங்கு ஒளிந்து நின்று கமலை அவதானிக்கின்றாள். ராஜியும்  இன்னும் வராத காரணத்தை அவளால் புரிந்து கொள்ள முடியாமல் தனக்குள்ளேயே சினப்பது முகத்தல் தெரிந்தது.அவளைப் பொறுத்தவரையில்.இது அவளது சவாலுக்கு கொடுத்த செருப்படியாகும்.நமக்கு இதுவும்  வேண்டும் இன்னமும் வேண்டும்  இவளுக்கு என்று சொல்லத் தோன்றும் பாங்காக அந்தக் காட்சி அமைந்தது.

காட்சி-4
சாப்பாட்டுக் கடையில் ராஜியைக் காணாது ஏமாற்றம் அடைந்த கமல் ரஜியைத் தேடி அவளது வீடு வரை செல்கின்றான். அவள் கதவைத் திறந்து உள்ளே  வரச் சொல்கின்றாள்.அவனை அமரும் படியும் பணிக்கின்றாள்.ஆனால் அவள் மீது  கோபமும் ஏமாற்றமம் கொண்டவனாக தான் அங்கு அமர வரவில்லை என்றும் அவளுக்கு என்ன ஆயிற்று என்று அறியவே வந்ததாகவும் சொல்லி அவளிடம் காரணம் கேட்கின்றான் கமல்.
ஆனால் அவள் அதற்கு.அவனிடம் மன்னிப்பு கேட்பதைத் தொடர்ந்து ,மிகவும் கவலையுடன் நீ என்னைப் பற்றிப் பிழையாக விளங்கிக் கொண்டுதானே வரவில்லை என்று அவளது இந்த போக்கை முன்னரே எதிர் பார்த்தவனாக கமல் பேசுகின்றான்.
நீ வரமாட்டாய் என்று எனக்குத் தெரியும் என்றும்   சொல்கின்றான்.அதற்க்கு அவள் அழுது கொண்டே அவனிடம் மன்னிப்புக் கேட்கின்றாள்.அவனது தோரணையில் அவள் தனக்கு தனது நட்புக்கு ஆதரவு கொடுத்துக் கொண்டே இருந்தது போலவும்,ஆனால் கடைசியில் காலை வாரி ஏமாற்றியது போலவும் கருத்துத் தொனித்ததைக்காணக் கூடியதாக இருந்தது!
ராஜி தான் வராததற்குக் காரணம் சொல்ல முனைகின்றாள் .ஆனால் அதைக்   கேட்குமளவுக்கு அவன் பொறுமையுடன் அங்கு நிற்காமலேயே அவளைச் சோகத்தில் ஆழ்த்தி விட்டு நீங்குகின்றான்!அவளது சோகமான முகத்துடன் பாகம் முடிகின்றது.
ஒட்டு மொத்தமாக உணர்வுபூர்வமான அத்தியாயம்.
ஆனால் மாதவியின் வில்லத்தனமும் கமலின் எதிர்பார்ப்புக்களும் கொஞ்சம் யதார்த்தத்தை மீறி நின்றன என்று சொல்லலாம்.
கார்த்திக் ,சுருதியின் நடிப்பு எப்போதும் போல அற்புதமாக இருந்தது.
மீண்டும் ஆசிகளுடன்....!







No comments:

Post a Comment