EPISODE-460 TAMIL
EPISODE-460 தமிழ்
அத்தியாயம்-460 TUESDSY-JAN/6/2015
இன்றைய அத்தியாயம் நேற்று நடந்த முடிவுகளின் ,தொடர்ச்சியாதலால்,
கார்த்திக் ,ராஜி யின் இன்றைய ,முடிவுகளும் வேதனையாக நடந்த விடயங்களும் ,ஆச்சரியப்பட்டு,மீண்டும் இந்தக் கதை இப்படிப் போகிறதே
என்று நாமெல்லோரும் அவதிப்பட்டு,விமரிசனம் எழுதி,இயக்குனரையும்,
வசனகர்த்தாவையும் ,திரும்பவும் மனம் நிறையத்திட்டி மனவருத்தப்பட வேண்டிய அவசியமேயில்லை என்பது எனது கருத்து.!
நடந்தது,நடந்துவிட்டது! இப்போது ,ராஜி நினைத்த மாதிரி இல்லாமல் இன்றைய ,அத்தியாயத்தில் ,கார்த்திக் அவளது சந்தோஷத்துக்காக ,தனது ,சந்தோஷத்தையும்,தனது மண வாழ்க்கையையே விட்டுக் கொடுக்கும் கார்த்திக்கின் மன நிலையை அவன் தத்ரூபமாக,ராஜிக்கு முதலில் சொல்லாமல் சொல்வதும்,அதற்கு மிக அற்புதமாக ராஜி பதில் சொல்வதும் ,பின்னர் இருவருமே,வைத்தியரின் முன் ,நடந்து கொள்வதும் நாம் கண்டு
வேதனைப் படுவதாக இருந்தாலும்,இந்த நம்ப முடியாத செயல்களும்,யதார்த்தத்தை மிஞ்சிய கதையோட்டமும் எமக்கு புரிந்தாலும் ,
இந்த இருவரது நடிப்பும் எமது இதயங்களைப் பிழிந்து,எல்லோரையும் அழவைத்தது என்பதுதான் இங்கே உண்மையான ,யதார்த்தமான விடயம்!
அதைப் பற்றி பேசுவதுதான் இன்றைய அத்தியாயத்தின் விமர்சனத்தின்
அடிப்படைக் காரணமாக நான் கருதுகிறேன்!
கார்த்திக்கின்,பாத்திரம் ஒரு தியாகியின் வடிவத்தை எடுத்தது , தேவையா என்று நம்மைக் கேட்க வைப்பதாக இருந்தாலும் ,நான் அந்தப் பாத்திரத்தை
நடிகர் கார்த்திக் எப்படி அற்புதமாக நடித்திருக்கின்றார் என்பதையே கருத்தில் கொண்டு மேலும் பார்க்கிறேன்!
அந்த வைத்தியரின் முன்னால்,கார்த்திக் தனது காரணங்களைக் கொட்டித்தீர்க்கும் போது,ராஜி என்ன மாதிரி அந்தச் சொற்களால் பாதிக்கப் பட்டு உணர்வுகள் சிதறி,உள்ளம்சிதைந்து,இதயம்,பிழிய,அவனை,மாறிமாறி, அவள் பார்த்து வேதனைப்படுவதை,தம்முடைய காதல் உண்மையானது என்று தெரிந்திரிந்தும் தெரியவில்லை என்று கருத்துப்பட அவன் வாயால் கேட்கும் போது,அவள் படும் அவத்தையின் பிரதி பலிப்பை அப்படியே எமக்குத்தரும் நடிகை சுருதியின் நடிப்பத்தான் நான் பார்கிறேன்!
இருவரும் தமது தமது பாத்திரங்களுக்குள் ஐக்கியமாகி நடிக்கும் நடிப்பு
அப்படியே எம்மை வியக்க வைக்கிறது!
இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!
இவர்களை இப்படி உணர்வுபூர்வமாக நடிக்க வைத்த இயக்குனருக்கும்,அந்த வசனங்களை நமக்குத் தந்த வசன கர்த்தாவுக்கும் பாராட்டுக்கள்!
விஷ்ணு ,ராதிகா,அம்முக் குட்டி,வைத்தியர் அம்மாவும் சிறப்பாக நடித்திருந்தார்கள்!
ஒட்டு மொத்தமாக அருமையான அத்தியாயம்!
நடிப்பின் சிறப்பைக் காட்டும் பாகம்!
இந்த பாகத்தைத் தொடர்ந்து விவாகரத்துக்கான முயற்ச்சிகள் ,நடக்கும்.
ராஜியும் ,கார்த்திக்கின் முடிவான கருத்துக்களை ஏற்றுக் கொண்டதால் அவனை விட்டு, விட்டு வீட்டை விட்டு பின் வெளிநடப்பு செய்வதும்
நாம் முதலே அறிந்துள்ள செய்திதானே?
எனவே விபரீத முடிவுகள்,விபரீதமான பாதையில் இவர்களை இட்டு செல்லும் என்பது எதிர்பார்க்க வேண்டிய ஒன்று என்பதால் .
அதையும் எதிர்பார்ப்போம்!
ஆனாலும்,உள்ளம் நிறைய பூத்து இருக்கும் இவர்கள் காதலின் வலிமை
என்ன நடந்தாலும்,சந்தர்ப்பம் சூழ் நிலைகள் வந்து குலைத்து ,சதி செய்தாலும்,உண்மைக்காதலை எப்படியும் வெல்லச் செய்யும் என்ற உண்மையை தான் இந்த தொடர்கதை எடுத்துச் சொல்ல இருக்கின்றது என்பது ,அன்றிலிருந்து இன்றுவரை எனது அசைக்க முடியாத நம்பிக்கை.
ஆதலால் தீயவை முடிந்து நல்லவை நடக்கும் என்ற நம்பிக்கையுடன்
முடிக்கிறேன்!
மீண்டும் ஆசிகளுடன் ......!

No comments:
Post a Comment