EPISODE-461-TAMIL
EPISODE-461அத்தியாயம் -461 WEDNESDAY Jan /7 /2015
இன்றைய அத்தியாயம் நேற்றயத்தின் தொடர்ச்சியே!
ராஜியின் ஏமாற்றம்,இதயத்தில் எதிர்பார்க்காமல் விழுந்த அடியால்
வந்த காயம்,வீட்டுக்குவந்த கையுடன் ராஜி கார்த்தியைக் கேள்வி
மேல்கேள்வி கேட்டு அவனது உள்ளத்தில் இருக்கும் உண்மையை
அறியத் துடிக்கின்றாள்.
ஆனால்,அவன் அசையவில்லை! அவள் அவனை எத்தனை விதமாக
நிந்தித்துப் பேசியும் அவன் அவளை வெறுப்பது போலவே பேசுகின்றான்.
அவள் தன்னுடன் வாழ்ந்த வாழ்க்கை பொய்யானது என்று அவனுடைய வாயாலேயே கேட்டு அவள் மனம் நொருங்குகின்றாள்.
ஆனால் அவனோ தான் எடுத்த முடிவில் மாறாதவனாக ஆனால் அவள்,
தன்னையும் சூசனையும் பற்றி தவறாகச் சொன்ன போது மட்டும் அதைத் தாங்கிக் கொள்ளாதவனாக நீ தேவையில்லாமல் பேசுகின்றாய் என்றுமட்டும் கடுமையாக அவளைக் கண்டிக்கிறான்!
அவள் கடைசியில் கண்ணீருடனும் ,வேதனையுடனும் ,நேரே எனக்குத் தகுந்தவன் நீ
அல்ல என்று கூறிமுடிப்பதுடன்,இனிமேல் இங்கு உன்னுடன்
இருப்பதுவும் பிழை என்று கூறிக்கொண்டு இந்தவீட்டைவீட்டு போகின்றேன் என்று கூறியபோது அவன்" நீ போ என்னோடு இதுந்து சாகடிக்காதே" என்றே கூறி அவளை தன வாழ்க்கையில் இருந்தே துரத்துவனாக நாடகம் நடத்து கின்றான்!அவள் கோபத்துடன் மாடிக்குச் செல்ல ,யோசனை கொண்டவனாக
அவன் அமர்கின்றான்.!
இது எதைக் காட்டுகிறது?
உள்ளம்முழுதும் காதலை வைத்துக் கொண்டு பிரிந்து வாழ்வதற்காக இவர்கள் படும் பாட்டில்,அனுபவிக்கும் வேதனையில் அணு அளவாவது
ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்குமட்டும் செலவழிப் பார்களானால் அவர்களின் கதையே இப்போது வேறுவழியில் சென்றிருக்கு மில்லையா என்று சொல்லத் தோன்றுகின்றது!
அடுத்த கட்டத்தில் விஷ்ணு கார்த்திகைத் தேடிக் கொண்டு அவனது அலுவலக அறைக்குச் சென்ற போது அவனது கையில் கார்த்திக்கின்
கடிதம் கிடைக்கின்றது.அதை கண்டதும் வாசிக்கும் விஷ்ணு அவனது
காதலின் ஆழத்தை அறிந்து வியக்கின்றான்.தன நண்பன் எவ்வளவு தூரம்
ராஜியை இன்னும் காதலிக்கின்றான் என்று அறிந்து அதைப் பற்றி விசாரிக்க
அவனைத் தேடிச் செல்கின்றான்.
சாப்பாட்டறையில் தனியே அமர்ந்திருந்த கார்த்திக்கிடம் கடிதத்தைக் கொடுத்து அதைப் பற்றி விசாரித்து அவனுக்கு புத்திமதி கூறுகின்றான்!
கடிதம் ,ராஜியிடம் கொடுபடாமைக்கு காரணம் சொல்லப்படவில்லை!
ஆனால்,விஷ்ணு இதைப் பற்றி ராஜியிடம் சொன்னால் தனக்கும் அவனுக்கும் உள்ள உறவு அத்துடன் முடிந்ததெனவும் கூறி விஷ்ணுவின் வாயையும் அடைக்கின்றான் கார்த்திக்!
விஷ்ணு ஒன்றுமே செய்ய முடியாத நிலையில்
கார்த்திக்கின் செயல்களை எண்ணி வியந்து திகைப்படைகின்றான்!
விஷ்ணுவிடம் தனது கடிதத்தைக் கொடுக்காமல் கையுடன் கொண்டு சென்ற
கார்த்திக் அக்கடிதத்தை பத்திரமாக ஒரு பத்திர உறைக்குள் வைத்துவிட்டு
ஒருகூட்டத்தில் சமூக மளிக்க அறையை விட்டுச் செல்கின்றான்!
கடைசிக் காட்சியில் ,மாதவி வழமை போல் கார்த்திகைத் தேடி அவனது
அலுவலக அறைக்கு வருகின்றாள். அங்கு அவனைக் காணாமலும் அதே வேளையில்,அறை சுத்தமில்லாமல் இருப்பதையும் கண்டுவிட்டு சுத்திப் பார்த்து நோட்டம் விடுகையில் பவித்திராவும் அங்கு வந்து சேர்ந்து அவளை
கார்த்திக் இல்லாத வேளையில் அவளுக்கு அங்கு என்ன வேலை என்று திட்டுகின்றாள்.
மாதவியோ கார்த்திக்கின் கவனத்தைத் தன்பக்கம் திருப்புவதற்காக என்னென்ன விதமாக நாடகம் ஆடவேண்டுமோ அது எல்லாம் தெரிந்தவளாக அறையைச் சுத்தம் செய்வதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் போது ராஜி ,தனக்குத் தேவையான ஒரு பத்திரத்தை எடுப்பதற்காக அங்கு வந்து கார்த்தி
எங்கே என்று கேட்கின்றாள்.
அதற்கு மாதவி அவன் ஒரு முக்கிய கூட்டத்தில் இருப்பதாக பதில் கூறிவிட்டு அவன் வந்ததும் அந்தப் பத்திரத்தை அவனிடம் கேட்டு விட்டுத் தானே கொண்டுவந்து தருவதாகச் சொன்னதும் ராஜி அவளுக்கு பதிலடி கொடுத்து விட்டு மர்சையில் கிடந்த அந்தப் பத்திரம் இருந்த உறையுடன்அதை எடுத்துக் கொண்டு செல்கின்றாள். அந்த உறைக்குள் தான் கார்த்திக் கடிதத்தை கடைசியாக வைத்திருந்தான் ,அவள் அதை அறியாதவளாக எடுத்துச் செல்கின்றாள்.
அத்துடன் அத்தியாயம் நிறைவெய்துகின்றது.
ஒட்டு மொத்தமாக உணர்வுபூர்வமாக இருவரது உள்ளப் போராட்டங்களை
அற்புதமாக வெளிப்படுத்தும் ஒரு அத்தியாயம்!
தியாகத்துக்கு ஒரு அளவில்லையா? அதற்கு விலை ஒரு காதல் வாழ்க்கையின் மொத்த அழிவா?
புரிந்த பின்னரும் புரியாதவர்களாக ஒருவரை ஒருவர் இந்த அளவுக்கு
இம்சை செய்வதும்,அவதூறாகப் பேசுவதும் யதார்த்தத்தை மீறி,இயக்குனர் தன் கர்ப்பனைகுதிரையை ஒலியின் வேகத்தைவிட மேலாக ஓட விட்டதால் வந்த விபரீதம் இதுவா என்று கேட்டு கேலி பண்ண நினைத்தாலும்,
நமது நடிகர்களின் நடிப்பின் சிறப்பை மனதில் கொண்டு, மௌனமாக
அவர்களைப் பாராட்டுவதுடன் இந்த விமர்சனத்தை நிறைவு செய்கின்றேன்!
மீண்டும் ஆசிகளுடன்!

No comments:
Post a Comment