Thursday, January 01, 2015


EPISODE-457 TAMIL

அத்தியாயம் -457- WEDNESDAY-31/DEC/2014

இந்த 2014 ஆம் ஆண்டு வருட முடிவின் கடைசிப்பாகம் , மனத்தைச் சிறிது வருத்தி வருகின்ற வருடத்தில்  என்ன நடக்குமோஎன்று ரசிகர்களை சிந்திக்க
வைத்தபடியே, முடிந்ததாக அமைந்தது!

காட்சி-1
ராஜியின் அப்பாவுடன் கார்த்திக் தொடர்ந்து பேசுகின்றான்.
அவரும் ,மிகவும் மனம் திறந்து,மனதுக்குள் ,ஒன்றையுமே
மறைத்து வைத்திருக்காமல்,கார்த்திக்கிடம் தனது வருங்காலத்
திட்டத்தை,விபரிக்கின்றார்.
ராஜியும்,கார்த்திக்கும்,ஒருபோதும் ,சந்தோஷமாக ஒன்றாக வாழ்வதற்கு
வழியே இல்லை தான்  ,என்பதைத் தான்இப்போது உணர்ந்து கொண்டதால்
இனிக்கொண்டு ,விவாகரத்தின் பின்பு,ராஜிக்கு,ஒரு நல்ல மறு வாழ்க்கையை
அமைத்துக் கொடுக்க வேண்டியது தனது கடமை என்றும் கூறுகின்றார்.
அதை கார்த்திக்கும் ஆமோதிக்கின்றான்.
ஆனாலும் ,கார்த்திக்கில் உள்ள அன்பும் ,மரியாதையும் தனக்கு ஒருபோதும்   குறையப் போவதில்லை என்றும் ,தான் அவனுக்கு முன்னரே சத்தியம் செய்து
கொடுத்தது போல ,தந்தையின் தானத்தில் இருந்து அவனுக்கும் இன்னும் ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பேன் என்றும் சொல்கின்றார்.
ராஜியின் வாழ்க்கைச் சரித்திரத்தை ,நன்றாகவே தெரிந்து வைத்திருக்கும் ,
கமலுடன் பேசி முடிவு செய்ததையும் கூறுகின்றார்.
அவர்கள் ,இருவரும் பேசுவதையும்,கார்த்திக் கண்டிருந்ததனால் அவன் அதை எதிர்பார்த்து ஆச்சரியப் பட்டதாகவே தெரியவில்லை.ஆனாலும் அதைக் கேட்கும் போது,அவனது முகத்தில் ஒரு ஏக்கம் தெரிந்தது.தமது காதல் ஓயாத சண்டையில் முடிந்ததற்கு தானும் ஒருகாரணம் என்பதை அவன் ,ராஜியின்   அப்பாவிடம் ஒத்துக்கொள்கின்றான்! 
ராஜியிடம் இருந்து ,தான் விலகிக் கொள்வதுதான் முறை என்று நினைத்தான்
போலும்.!

இவற்றையெல்லாம் மௌனமாகவே ,கேட்டுக்   கொண்டும்,அங்காங்கே
அவர் சொல்பவற்றை எல்லாம் கேட்டு,உணர்வுபூர்வமான ,ஒரு வேதனையும்,
ஆழ்ந்த ,சிந்தனையும்,கொண்டபவனாக கார்த்திக் வெகு சிக்கனமாகப்   பதிளித்ததும் ,நமக்கு  பெரிய வேதனையைத் தரும் அம்சமாக இருந்தது!
எப்படியெல்லாம் வேதனைப் பட்டு ஒன்று கூடிய இவர்களின் இந்தக் காதலுக்கு இதுதானா இறுதி முடிவு என்றுதான் தோன்றியது!!!
இங்கே கார்த்திக்கும் ,ரமேஷ் குமாரும் அற்புதமாக நடித்திருந்தார்கள்!

காட்சி-2
கார்த்திக்கை,ராஜி சந்தித்து ,ஒருகடிதத்தை ,அவளிடம் கொடுத்து அதை படிக்கச் சொல்கின்றாள். தன் மனதில் உள்ளதை எல்லாம் கொட்டி அற்புதமாக
எழுதிய கடிதம் அது.
ரசிகர்களாகிய எங்கள் ,மனதில் ஓடிக்கொண்டிருந்த ,கேள்விகளையும்
அவள்,அதில் கேட்டிருந்தாள். மனதில் காதலை வைத்துக் கொண்டு ,ஒருவேளை வெறுப்பாகவும்,மறுவேளை  அன்பாகவும் நடக்க முயலுவதேன்   என்ற கேள்விதான் அது .அந்த உணர்வுபூர்வமான கடிதத்தை ,வாசித்துக் கொண்டிருக்கும் போதே ,அதில் கொட்டியிருந்த ,அவளது காதல் உணர்வுகளையும்.அவள் சொல்லும் உண்மையையும் அவன் புரிந்து   கொள்வதும்,அதனால் ,அவன்உள்ளம்கலங்குவதையும்,ஆமோதிபபதையும்,
அவளை ஆராதிப்பதையும்,கூட அவனது பார்வைப் பரிமாற்றங்கள் மூலம்,
நன்றாகவே அறியக் கூடியதாக இருந்தது!தனது மனக் கிடக்கையை ,புரியும் படியாக ,விளக்கி இருந்த ,ராஜியின் வேண்டுகோளை, தனக்கு கார்த்திகைத் திரும்பவும்  தனக்கு வேண்டும் என்ற கருத்தையும் ,அவன் பார்த்தாலும் அவனது எண்ணத்தில் ,ஒரு ஆழ்ந்த சிந்தனை ,ஓடிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
ராஜியின் அப்பா தன்னுடன் பேசியதைப் பற்றி ராஜிக்குத் தெரியுமா என்பது அவனுக்கு நினைவுக்கு வந்ததோ என்னவோ,தன்னுடன், சேர்ந்து வாழ விரும்பினால் , தன்னைச் சந்திக்க வருவாய் இல்லா விட்டாலும் நான் புரிந்து   கொள்ளுவேன் என்று சொல்லிவிட்டு ,நீ வருவாய் என்று நம்புகின்றேன் என்று சொல்லிக் கொண்டே எழுந்து செல்கின்றாள் ராஜி!.

அவளைக் கூப்பிட்டு ,ஏதோ சொல்ல வந்தவனையும் மறித்து ,பேசவிடாமல்
அவன் வருவான் என்ற நம்பிக்கையுடன் அவள் சென்றது போல இருந்தது!
அவனும் இடத்தை விட்டு எழுந்து செல்லும் போது அவள் கொடுத்த கடிதத்தை .தனது கால்சட்டையின் பின்பக்க பையுள் வைக்கும் கார்த்தி அது இடம் நழுவி கீழே விழுந்தது தெரியாமல்   செல்கின்றான்.அப்போது அங்கே நுழைந்த ,மாதவி அதைக் குனிந்து எடுக்கின்றாள்.

காட்சி -3
பழம் நழுவிப் பாலுக்குள் விழுந்தது போல மாதவிக்கு அந்தக் கடிதம் கிடைத் திருக்கிறது என்றுதான்  சொல்லவேண்டும்..கிடைக்காத ஒரு பொக்கிஷம் தன்
க்கு வந்தது ,போல ,மற்றவன் கடிதத்தி இப்படி வாசிக்கின்றோமே ,என்ற கூச்சம் இன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.வாசித்து அதிலுள்ளவற்றைக்
கிரகித்துக்  கொண்டவள் போல அவள்  முக  பாவம் இருந்தது.

இப்போது ராஜி மிக  அழகாச் சேலை  உடுத்திக் கொண்டு அடுத்த நாள் வேலைக்கு வருகின்றாள்! விஷ்ணு அவளைக் கண்டு அவள் அழகைப் போற்றுவதுடன்,எதற்காக இந்த உடைமாற்றம் என்றும் கேட்டு வைக்கின்றான்.
இருவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது அவளை கார்த்திக் காண்கின்றான்.
அவள் அழகாக இருப்பதையும் ரசித்து தனக்குள் மகிழ்ந்த அவன் முகம் வேறாகத் தெரிந்தது. இருவரும் பார்வையைப் பரிமாறிக் கொள்ளுகின்றனர்!
விஷ்ணு அவளிடம் அவள் யாரையோ சந்திக்கப் போகின்றாள் என்றவிடயத்தை மட்டும் சொல்லிவைக்கின்றாள்.ஆனால் விளக்கமாக
பலநாள் தன்னுடன் மனம் விட்டுப் பேசாதவருடன் பேசப் போகின்றேன் என்கின்றாள்.
விஷ்ணு எதற்கும் அவள் சந்திக்கப் போகின்றவருடன் பேசி உண்மையாகவே
வருவாரா இல்லையா என்று கேட்டு அறிந்து கொண்டு பின்னர் அவரைச் சந்திக்கப்போவது நல்லது ,இல்லாவிட்டால் அவர் அங்கு வராத பட்சத்தில்
ராஜி கவலைப்படவேண்டி வரும் என்றும் எதேட்சையாக எச்சரிக்கின்றான்.
ஆனால் , அதற்கு அவர் நிச்சயமாக வருவார் என்று கார்த்திக்கிக்கும்
கேட்கக் கூடியதாகச்   சொல்லிவிட்டு,  கார்த்திக்கையும் மிகவும் நம்பிக்கையுடனும் ,வாஞ்சையுடனும் பார்த்து விட்டுக் கிளம்புகின்றாள் ராஜி!
கார்த்திக் யாருடனோ மிகவும் மும்மரமாக,தொலை பேசியில் பேசிக்கொண்டே ,விஷ்ணுவும் ,அவளும் பேசிக்கொள்வதை அடிக்கடி நோட்டம் விட்டுக்  கொண்டும் .அவளது நோக்குகளை   எதிர்கொண்டு ஒருவிதமான உணர்வுகளும் அவளுக்கு தெரியும் படி காட்டிக் கொள்ளாமல்  இருந்தான்!

காட்சி  -4  

ராஜி கார்த்திக்காக அவள் அவனைச் சந்திப்பதாகச் சொன்ன இடத்தில் காத்துக் கொண்டே இருக்கின்றாள்  .
அவன் வந்த பாடாகக் காணவிலை.பலமுறை வேலைக்கும் ,அன்புக்கும்,
விஷ்ணுவுக்கும் கூட அழைப்பு விட்டு அவன் வராத காரணத்தை அறிய
முயன்று கடைசியில்,ஏமாற்றம்,வேதனை,முகத்தில் தெரிய வீட்டுக் குச் செல்கின்றாள்.
வீட்டில் பாத்திரங்களைக் கழுவி துடைத்து முடிக்கும் தறுவாயில்.கார்த்திக்
வாசலில் கதவைத்தட்ட ,முகத்தில் கோபம் வேறாகத் தெரிய ஆத்திரத்துடன் கதவைத் திறந்து அவனை உள்ளே நுழைய விடுகின்றாள்.அவனும் அவளை
பார்க்கின்றான்!அவளும் அவனை ஒன்றுமே பேசாமல் பார்க்கின்றாள்.
இருவர் மனதிலும் மனவோட்டங்கள் ,வேறு,வேறாக ஓடுகின்றன,
அவளோ அவனிடம் அவன் உள்ளத்துக்குள் புகுந்து கேட்பது [போல
" இவ்வளவு சொல்லியும் நீவர இல்லை இல்ல ?என்றும்
அவன் மனதில் அவள் சொன்ன வார்த்தைகள் 'நீ வராவிட்டால் ,உனக்கு என்னுடன் வாழ பிடிக்கல்ல என்று எடுத்துப்பேன்" என்றும் ஓடியது.
இருவரும் ஒருவரை   ஒருவர்  பார்த்துக் கொண்ட விதமோ எம்மையெல்லாம் ஒரு கலக்கு  கலக்கி " ஏன் இரண்டு பேரும் இப்படி ஒருவரின்  உள்ளத்தை இன்னொருவர் ரணகள மாக்கி விளையாடுறீங்க " என்று  கேட்ட்பதுடன்
இயக்குனரையும்" ஏனையா இந்த அநியாயம் செய்யுறீங்க?" என்று கேட்கவேண்டும்   போலத் தோன்றியது!
அதைத்தான் இப்போதும் கேட்டு இந்தபாகத்துக்கான விமரிசனம் முடிகிறது!

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வரவிருப்பதைப் பார்த்து இருப்போம்  !

மீண்டும் ஆசிகளுடன்!

No comments:

Post a Comment