EPISODE-473
அத்தியாயம்
-473 WEDNESDAY-JAN/28/2015
இன்றைய அத்தியாயம்
ஒருவிதத்தில் தனக்கென ஒரு விசித்திரமான
முறையில் இடத்தைப் பிடித்துக் கொண்ட பாகம் என்றேதான்
சொல்லவேண்டும்.
காட்சி-1
கார்த்திக்கை
தன் பக்கம் வளைத்து,அவனது
மனதைத் தன்பக்கம் .திருப்பி,அவனுக்குத் துணையாக இருந்து அவனது
இன்ப துன்பங்களில் பங்கு கொள்ளத் தன்னால்
நிச்சயமாக முடியும் என்பதில்,அசாத்தியமான
நம்பிக்கை
கொண்டு செயற்ப்படும் ஒரு தன்மையுடன் ஒருவிதமான
.பயமோ,அசூசையோ இல்லாமல் மாதவி
நடப்பது ஒரு விசித்திரமான
கதையோட்டமாக
இருக்கிறது.
மாதவி போன்ற அறிவிலிகளுக்கு நோக்கம்
ஒன்றுதான் என்பதை இந்தப் பாத்திரம்
தத்ரூபமாக எடுத்துக் காட்டுகின்றது.
எத்தனை
அவமானப் பட்டாலும் மர மண்டையுடன்,தனது
நோக்கத்திலேயே கண்ணாக இருக்கும் ,மனித
சுபாவம் எப்படி செயற்ப்படும்
என்பதற்கு ,மாதவி ஒரு அருமையான
சாட்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
மாதவியாக
நடித்த நடிகை அனு சுலாஷுக்கு மிகவும்
பாராட்டுக்கள்!
இந்தக்
காட்சியில் கார்த்திக்கின் நடிப்பு அற்புதமாக இருந்தது.
ஆனால்
.இந்தக் காட்சியின் மூலம் இயக்குனர் எந்த
வாழ்க்கையின் அம்சத்தை இங்கே கொண்டுவந்து நிரூபிக்க
முயல் கின்றார் என்பது தான்
புதிராக
இருக்கின்றது!
ராஜியைப்
பிரிந்து தன வாழ்க்கையின் பிரிவுத்
துயரத்தில் இருக்கும் கார்த்திக்கு இதுவா மாற்று மருந்து?
ஒரு ஆணை அடைய ஒரு
பெண் தன்மானத்தை இப்படியா இழப்பது?
இது இளம் பெண்களின் தன்மையை
எச்சரிப்பதா? இல்லை குத்திக் காட்டுவதா?
இல்லை இது ஆண்களுக்கு ஒரு பாடமா?
காட்சி-2
விஷ்ணு
மணிமேகலை காட்சி
இதில் விஷ்ணுவினதும் மணிமேகலையினதும் திரும்பவும்
அரும்பும் காதலுக்கு பங்கம் ராதிகாவின் ரூபத்தில்
வருகிறது.
ராதிகாவின்
குழந்தைக்காக அவளை அழைத்துச் செல்லும்
விஷ்ணு
மணிமேகலைக்கு பொய் சொல்ல வேண்டி
வருகிறது.
இதனால்
மணிமேகலைக்கு அவனில் இருக்கும் மதிப்புக்
குறைவதுடன் நம்பிக்கையிலும் ஒரு கீறு விழுகிறது.
மணிமேகலை
துயரத்துடன் விஷ்ணுவிடனும் அளவளாவிச்
செல்கின்றாள்.
ராதிகா அவனை
உயர்ந்த இடத்தில் வைத்து அவனது உயர்ந்த
குணத்தையும் உதவியையும் பாராட்டுகின்றாள்.
காட்சி-3
கமல் ராஜி சந்திக்கும் காட்சி!
கமல் முன்னரைவிட இன்னும் நெருங்கி ராஜியிடம்
பழக முனைவதைக் காட்டும் காட்சி.
ராஜி அவனது அறைக்கு சென்று அவனோடு
சாதாரணமாக அளவளாவும் போது,தான் காலம்
காலமாக சேர்த்து வைத்த பலதரப் பட்ட
ஞாபகமான பொருட்களை அவளுக்கு எடுத்துக் காட்டுகின்றான் கமல்.
சிறிய வயதில் ராஜியுடன் ஒன்றாகப்
படிக்கும் காலங்களில்
ராஜி அவனுக்கு சிநேகிதி என்ற முறையில் கொடுத்த
பல பொருட்களை அவன் பத்திரமாக சேர்த்து
வைத்திருந்திருக்கின்றான்.
அவற்றைப்
பார்த்து ராஜி ஆச்சரியப் படுகின்றாள்.
அதற்காக
தேவையில்லாத பொருட்களைக் கூடச் சேர்த்து வைத்திருக்கிறாயே
என்று வியந்தும் கூறுகின்றாள்.
காட்சி-4
இந்தக்
காட்சியில் ராஜியும்.கமலும் தொடர்ந்து நாளைக்கு
வரவிருக்கும் அவனது பிறந்த தினத்தைப் பற்றியும் கமல்
அவளுக்கு ஞாபகப் படுத்துவதோடு தனது
பிறந்த நாள் நினைவாக அவளை
தன்னுடன் விருந்து சாப்பிடவும் வரச் சொல்லுகின்றன் .அவளும்
தான் நிச்சயமாக ,அவனது
பிறந்த
தினத்தைக் கொண்டாட சாப்பிட வருவதாக
உறுதி அளிக்கின்றாள்.
இவர்களது
சம்பாஷனை முழுவதையும் மாதவி வெளியில் இருந்து
ஒட்டுக் கேட்டுக் கொண்டு இருக்கின்றாள்.
அத்துடன்
காட்சி முடிகின்றது.
ஒட்டு மொத்தமாக,வித்தியாசமான முறையில் கார்த்திக்கும் ராஜிக்கும் இன்னொரு சோடியைக் கொண்டுவந்து
அவர்கள் பிரிந்து இருக்கும் காலத்தை
யதார்த்தத்துக்கு அப்பாற்பட்ட நிலையில் வைத்திருக்கும்
அலுவலக
இயக்குனர்களை என்னவென்று
சொல்லுவது?
வழமை போல இந்தத் தொடரின்
ஆயுள் எமது அபிமானத்துக்குரிய கார்த்திக்
ராஜி பத்திரங்களின் சேர்தலிலும் அவர்களினதும் புரிதலில் மட்டுமே
தங்கி இருக்கிறது என்பது எனது
அபிப்பிராயம்.
போகின்ற போக்கில்
பொருத்தமற்ற கதை வசனத்தை புகுத்தி,ரசிகர்களை சலிக்க செய்யும் இந்த
நிலைமை மாற வேண்டும்.
மிக விரைவில் இந்த காதல் சோடிகளின்
காதலுக்கு ஒரு அர்த்தம் கற்பிக்கவேண்டும்.
இல்லாவிட்டால்
இந்த த தொடருக்கு இருக்கும்
மரியாதை மங்கிக் கொண்டே போய்,அற்புதமாக நடிக்கும் இந்த முக்கிய நடிகர்களை
அவர்களது திறமைகளை மண்னடிப்பதாகவே முடியும்..
அதிலும்
முக்கியமாக முதலாவது அத்தியாயத்தில் இருந்து இன்றுவரை ,
மிக ஆவலுடனும்,உற்சாகத்துடனும் மிகவும் உள்ளார்ந்து இந்த தொடரை
ரசித்து வரும் ரசிகர்களுக்கு துரோகம்
செய்வதாகவே முடியும்
என்பது எனது ஆணித்தரமான கருத்து..
மீண்டும்
ஆசிகளுடன்!
.

No comments:
Post a Comment