Saturday, January 24, 2015

EPISOE-465 TAMIL


அத்தியாயம்  -465 TUESDAYJAN/13/2015

இன்றைய அத்தியாயம் வரப் போகும் விவாகரத்து நாளை
எதிர்பார்த்தும்,எதிர்பார்க்க மனமில்லாமல் இருக்கும் ராஜியின்
நிலைமையும்,தியாகம் என்ற பெயரில்,கார்த்திக் அவளை யாருக்காகவோ விட்டுக் கொடுக்கும் நிலையைப் பற்றியதுமானதாக அமைந்தது!

இத்தனை நாட்களும் இவர்கள் இருவருக்கும் நடக்கும் பிரச்சனைகளுக்கு
சிகரம் வைத்தாற்போல வழக்கு மன்றத்தில் இருவரும் சந்திக்கும் காட்சியும்
இவர்களது  மன வோட்டங்களும் அதில் இருவரதும் நடிப்பும் அற்புதமாக அமைந்தது!

காட்சி-1
விஷ்ணு ,கமல் சந்திப்பில் விஷ்ணு  ராதிகாவுக்காக கமலுடன் பணிந்து போய் வேலை கேட்கின்றான்!
முதலில் கமல் தயங்கினாலும்,பின்னர் அவளுக்கு வேலை கிடைப்பதற்கு தன்னாலான முயற்ச்சியைச் செய்வதாக வாக்குக் கொடுக்கின்றான்!
 காட்சி-2

ராஜி அன்புமாமா  சந்திக்கும் காட்சி!  உணர்வு பூர்வமாக ராஜி வழக்குமன்றத்தில் நடக்க இருக்கும் விவாகரத்தின் கடைசிக் கட்டத்தை
எண்ணிக் கலங்கிக் கொண்டிருக்கும்காட்சி!
அன்புமாமா அவளுக்கு ஆறுதல்  சொல்வதும்,பின்னர் கார்த்திக்கு   இன்னும் அவளில் காதல் இருப்பது பற்றிச்  சொல்வதும் உன்னதமாக இருந்தாலும்
அவர் கார்த்திக் எழுதிய கடிதத்தைப் பற்றித் தெரிந்திருந்தும்,அவளுக்கு அதைப் பற்றிக்  குறிப்பிடாதது  மர்மமாகவே    இருந்தது!
அவள் படும் வேதனையை அவர் கண்டும் கார்த்திக் அவரிடம் ஒன்றையுமே சொல்லவேண்டாம் என்ற வேண்டுகோளுக்கு இணங்க பேசாமல் இருந்ததே
காரணாமாக இருந்திருக்கலாம்.என்று முடிவு கட்ட வேண்டி இருந்தது.
காட்சி-3
இருவரும் கதைத்ததைத் தொடர்ந்து கார்த்திக் அறைக்குள் நுழைகின்றான்.
முதலில் வேலை சம்பத்தப் பட்ட ஒரு பத்திரத்தைப் பற்றியும் அதை ,ராஜி இன்னும் தனக்கு சமர்ப்பிக்காத காரணத்தையும் கேட்கின்றான்
அமைதியாக கேட்கத் தொடங்கிய உரையாடல் ,பின்னர் மிகவும் கடினமான வார்த்தைகளுக்கு முற்றுகின்றது,
ராஜி அவனது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அழத்  தொடங்குகின்றாள்.
கார்த்திக் அதன் பின்பு அவளை   இன்னும் மோசமாகத் திட்டுவதுடன்,அவளுக்கு பரிந்து பேச வரும் அன்புமாமாவையும் வைது
கோபப் படுகின்றான்!
அவனது இந்தச் செய்கை ,ராஜியையும் அன்பு மாமாவையும் திகைக்க வைக்கின்றது.
ராஜி தனது வேதனையை  அடக்க முடியாமல்  அவன் கேட்ட பத்திரத்தை
விரைவில் செய்து தருவதாகக் கூறியதுடன் தனது தாமதத்துக்கு காரணம் தனது  மனநிலை சரியில்லை என்பதையும் ஒப்புக் கொண்டபோது அதற்கும்
கார்த்திக் மிக்க ஆத்திரத்துடன் அவளது  வேலையில் உள்ள கவனக் குறைவை குறிப்பிட்டு மீண்டுக் திட்டித்   தீர்க்கின்றான்!
இனிமேலும் அவனது இம்சையைத் தாங்கிக் கொள்ளாதவளாக  அழுது கொண்டே ராஜி அறையை விட்டுச் செல்கின்றாள்!
அவள் சென்ற பின்னரே கார்த்திக்கின் இந்த ஆத்திரமான போக்கும் ,ராஜியைத் திட்டியதற்கும் காரணம் நாளை வரவிருக்கும் விவாகரத்தின் முடிவால் ராஜி பாதிக்கப் பட்டாலும் தன்னை விட்டு விலகுவதே மேல் என
அவள் ஆறுதல் அடைவதற்காக போட்ட நாடகம் என்பதை அன்புமாமா
கண்டு பிடித்து ,உணர்ந்து அவனுக்குச் சொல்கின்றதாக அந்தக் காட்சி முடிகின்றது!
காட்சி-4
வழக்கு மன்றத்தில் விவாகரத்துக்கு ஆயத்தமாக இருவரும் காத்திருக்கும் காட்சி!
ஒருவரை யொருவர்   மாறி மாறிப் பார்த்துக் கொண்டு மனவோட்டத்தில் ,ஒருவரை ஒருவர் பேசிக்கொண்டு,ஆனால் ஒருவருக்கு  ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு,ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து வாழ வழி இருந்தும் அதைச் செய்யாமல் ,மனம் விட்டுப் பேசாமல்,உண்மைக் காதலின் உண்மையான அர்த்தம் ,புரியாமல் இருக்கும் இரண்டு  உள்ளங்களின் உணர்வுப் போராட்டங்களைக் காட்டும்   காட்சியாக அது அமைந்தது என்று சொன்னால் மிகையாகாது!

இந்த தொடரின்  இயக்கம் ரசிகர்களுக்கு  எத்தனையோ நல்ல யதார்த்தமான விடயங்களையும் தந்து அதே வேளையில் பலநம்ப முடியாத ,யதார்த்தமற்ற  விடயங்களையும்  சொல்கின்றார்களே என்று நினைக்கத் தோன்றினாலும் ஆழ்ந்து யோசித்துப் பார்க்கையில்
பின்வரும் காரணங்களுக்காக இன்றைய பாகத்தை எமக்கு  அறிவுறுத்துகின்றார்களோ  என்ற கேள்விகளும் எனக்குத் தோன்றச்  செய்தது!
அதாவது
.கார்த்திக் தியாகம் என்ற பெயரில் இந்த சமூகத்துக்கு எதைச் சொல்ல வருகின்றான்?
திருந்தி வரும் ஒரு கணவனை அன்புடன் அணைத்து,வாழ்க்கையைக் கொண்டுபோவது ஒரு தாய்மையின் சிறப்புக் கொண்ட பெண்ணின் கெட்டித்தனம் என்பதுவும் அது ராஜியைப் பொறுத்த   வரையில்  இன்னும் சரியான முறையில் அவளால் காட்ட முடியவில்லை என்பதை சொல்ல வருகின்றானா? 
எனது சந்தேகங்களுக்கு இனிவரும் பாகங்களே பதில் சொல்ல வேண்டும்!
நாளை ,வழக்கு மன்றத்தில் ராஜியும் கார்த்தியும் தமது முடிவுகளைச் சொல்வார்களா?
காத்திருந்து பார்ப்போம் !இயக்குனர் நமக்கு என்ன ஆச்சரியமான முடிவு  தருவார் என்று பார்த்துக்
காத்திருப்போம்!
மீண்டும் ஆசிகளுடன்!


No comments:

Post a Comment