Saturday, January 10, 2015



 EPISODE-463 TAMIL


EPISODE-463 TAMIL
அத்தியாயம் -463 FRIDAY-9/JAN/2015

இன்றைய  அத்தியாயம்,சில முக்கியமான விடயங்களுக்கு
முடிவுகள் தேடுவதாகவும்,சில விடயங்களுக்கு  முடிவுகள்
புதிரானதாக  இருந்ததாகவும் முடிந்தன!

காட்சி-1
கார்த்திக் ,மாதவி கட்டம்,ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு
உகந்ததாகவாகவும்,எங்கே கார்த்திக் தன் எரிச்சலைக் கொட்டித்தீர்க்காமல்
விட்டு விடுவானோ என்ற அங்கலாய்ப்பை ஒருமாதிரியாக திருப்திப் படுத்துவதாகவும் அமைந்தது என்றே சொல்லலாம்!
கார்த்திக் மாதவிக்கு,கொடுத்த் பதிலடியும் ,புத்திமதியும்,அவளுக்கு
அவளது,பிடிவாதமான ஆசைகளுக்கு ஒரு முடிவு கட்டும் என்றுதான்
தோன்றினாலும்,இவளைப் போன்ற பல இளம் பெண்கள் இப்படி
ஒரு முறையற்ற உறவுகளை வளர்த்துக் கொள்ள நினைக்கும் போது,
தம்மை மறந்த நிலையில் தலை கால் தெரியாமல் தம்மைக் குறைத்துக்
கொண்டு தமது வாழ்க்கையையும் பழுதாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பங்களைத்
தாமே தேடிக்கொள்ளுகின்றார்கள் என்பதைக்   காட்டவே   மாதவியின் பாத்திரம் படைக்கப்பட்டது போலும்!
நடிகர்கள்,கார்த்திக்,அனு சுலஷின் நடிப்பு மிகவும் அற்புதமாக அமைந்தது ! 
காட்சி-2
விஷ்ணு,மணிமேகலை கட்டமும் மிகவும் நன்றாகவே அமைந்தது! மணிமேகலையின் அப்பா
அவளுக்குத் தெரியாமலேயே வந்து விஷ்ணுவிடம் உறவுகொண்டாடி கல்யாணத்தைப்  பற்றியும் பேசிவிட்டுப் போகின்றார்.
இதனால் ஒருவிதமான திகைப் புக்குள்ளான விஷ்ணு ,மணிமேகலையை அழைத்துத் திட்டுவது
அநியாயமாகஏ இருக்கிறது!அதற்கு ஏற்ப,மணிமேகலை தனது மனதைத் திறந்து தனது
காதலை நியாயத்துடன்  எடுத்துச்    சொல்லுவதுடன்  விஷ்ணுவின் நடத்தைக்கும்
முறையான ,காரணம் கேட்பது மிகவும் அழகாகவும்,மிகவும் சரியானதாகவும் இருக்கிறது!
இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் எவ்விதம் ஆண்கள் தமது சுயநலமான ஆதங்கங்கள் மட்டுக்குத்தான்   ,முக்கியத்துவம்
கொடுத்து மற்றவற்றை மறந்து விடும்  தன்மையைக் காட்டுவது குறிப்பிடத்தக்கது!
மணிமேகலையும் விஷ்ணுவும் மிக உணர்வுபூர்வமாக நடித்திருந்தார்கள்!
மணிமேகலையின் தந்தையாக நடித்தவரும் நன்றாகவே நடித்திருந்தார்.

காட்சி-3
அன்புமாமா,ராஜி ,கமல் மூன்றுபேரும் வரும் இந்தக் காட்சி மிகவும் வித்தியாசமான ஒரு அம்சத்தை
கொண்டுவந்து ராஜி கமலுடன் தனியாக தனக்குப் பிடித்த சங்கீத வித்துவானின் பாட்டுக் கச்சேரிக்கு
போவதாகக் காட்டுவதாக இருக்கிறது!
இத்தனை வாழ்க்கைக் குழப்பத்துக்கும் காரணாமாக இருக்கின்ற கமலுடன் ராஜி
இன்னமும் நம்பிக்கை வைத்து அவனுடைய ,மிகச் சிறந்த சிநேகிதி என்ற பார்வையுடன்
பழகுவது நமக்கு சந்தோஷமான விடயமா? இல்லை அன்புமாமா மாதிரி நமக்கும் இது அசூசையாகத் தெரிகிறதா
என்பது சர்ச்சைக் குரிய விடயமாகத் தான் எனக்குத்  தோன்றுகிறது!
இதனாலேயே ஏன்தான் ராஜிக்கு கமலிடம் அனுமதிச்சீட்டுக்கள் இருக்கிறது
என்று சொன்னோமோ என்று அவர் மனதில் அங்கலாய்த்துக் கொண்டு கார்த்திக்கிடம்
அதைப் பற்றிச் சொன்னதாக கட்டையிடம் இதைப் பற்றிக் கூறுவதாகவே
இந்தக் காட்சி அமைகிறது!
அதற்குக் கட்டை கார்த்திக் இதைக் கேட்டு பொங்கி எழுந்திருப்பானே என்று   அன்புடன் சொல்லுவதாக இந்தக் கட்டம் தொடர்கிறது.

காட்சி-4

கட்டை எதனை கார்த்திக்கிடம் எதிர்பார்த்தானோ அதனை கார்த்திக் செய்வதாக் காட்டும்  காட்சிதான்
கடைச்க் காட்சியாக இருக்கின்றது!
கார்த்திக், கமல் ராஜி கச்சேரிக்குப் போகும் வழியில் அவர்களை எதிர் கொள்ளுவது போலவும்
அவர்களை முறைத்துப் பார்த்து ஆத்திரப் பட்டு ராஜியின் கையில் இருந்த சீட்டுக்களைப பறித்துக்
துண்டு துண்டாய்க் கிழித்து  கமலின் மேலில் விட்டு எறிவது போலவும்
கடைசியில்,ஆத்திரம் தீர ,கமலை முகத்தில் பளார் என்று அறைவது போலவும்
ராஜி அதைப் பார்த்து அவனை திகைப்புடன் முறைப்பது போலவும் காட்சி
நிறைவு பெறுகிறது.
மேலே நடந்தவை எல்லாம் உண்மையாக நடந்தவையா இல்லை கட்டையின் வெறும்
கற்பனையா என்பது வருகின்ற வாரமே வெளிச்சமாகும் !

ஒட்டுமொத்தமாக ஒரு சுவாரசியமான பாகமாகவே முடிந்தது என்று சொல்லலாம்!
மீண்டும் ஆசிகளுடன்!








No comments:

Post a Comment