Saturday, January 24, 2015

EPISODE -466 TAMIL

EPISODE-466
அத்தியாயம்-466-WEDNESDAY -JAN/14/2015

இன்றைய அத்தியாயம்.இத்தனை காலமும் எல்லோரும்
காத்திருந்து ,கண்கள் பூத்திருந்து,நெஞ்சங்கள் நெகிழ்ந்திருந்து
எண்ணங்கள் அலைபாய விட்டிருந்து,முடிவு என்னவாகுமோ
என்று அங்கலாய்த்து இருந்து கடைசியில் , ரசிகர்களின் மனக் களைப்பை இன்னும் வலுப் படுத்துவதாக அமைந்த அத்தியாயமாகும்.

 காட்சி-1
வழக்குமன்றத்தில் கார்த்தி ,ராஜி யின் கடைசி நாள் நிறைவேறுகின்றது.
நீதிபதி இன்னும் இரண்டு வாரங்களில் தீர்ப்பு சொல்வதாகக் கூறினாலும்
இன்றையிளிருந்தே அவர்களுக்கிடையில் எல்லாமே முடிந்த மாதிரியும்
கூறி அவர்களது நல்ல எதிர்கால வாழ்வுக்கும் வாழ்த்துக் கூறிச் செல்கின்றார்.

காட்சி-2
இதற்கிடையில் மாதவியும் பவித்ராவும் சாப்பாட்டறையில் சந்திக்கிறார்கள்
மாதவி எப்படியோ கார்த்திக் ராஜி யின் கடைசி நாளைப் பற்றி அறிந்தவளாக
பவித்திராவிடம் கார்த்திக் ராஜியிடம் இருந்து விடுதலை பெற்றவுடன் தன்னைப் புரிந்து நடப்பான் என்றும்,அதற்கு பிறகு தானும் கார்த்திக்கும்
உல்லாசமாக பவனி வருவோம் என்பது  போலவும் பவித்திராவுக்கு கற்பனைக் கதைகளைச் சொல்லி திட்டுவாங்குவதோடு ,அவளிடம் இருந்து எச்சரிக்கையும் பெற்றுக் கொள்ளுகின்றாள்!
அவளைப் பார்க்க உண்மையாகவே ஆத்திரத்தைவிட ,இ[ப்படியும் ஒரு முட்டாள்தனம் உலகத்தில்  யாராவது   செய்வார்களா என்பதுபோல
ஒருபரிதாபமான உணர்வுதான் வந்தது. 
காட்சி-3
நீதிபதி,போனதைத் தொடர்ந்து கார்த்திக், ராஜி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்த படியே
வேதனை ,முகங்களில் அப்படியே தெரிய ,வீட்டுக்கு புறப்பட ஆயத்தமாகின்றார்கள்.ராஜி புறப்படும் வேளையில் ,கார்த்திக் ,தான் அவளை இறக்கி விடுவதாகக் கூறுகின்றான்.
ஆனால் அவளோ நான் வந்தது மாதிரியே போகின்றேன் என்று கூறிவிட்டு
புறப்படும் போது இருவரதும் உணர்வுபூர்வமான   நடிப்பு சிகரத்தைத் தொட்டது .நாடகமாக இருந்தாலும்,அர்த்தமற்ற காரணங்களுக்காக
தாமே தமது தலையில் போட்டுக் கொண்ட தலைவிதியான முடிவாக இருந்தாலும், இந்த இருவரதும் அருமையான ,உள்ளத்தை உருக்கும்
உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை மெச்சியே ஆகவேண்டும்! 
காட்சி-4
கார்த்திக்கிடம் இருந்து விடை பெற்றுக் கொண்டு .அலுவலகத்துக்கு வரும்
ராஜி தனியாக இருந்து யோசித்துக் கொண்டு இருக்கும் போது கமல்
அவளை வந்து சந்தித்து ஆறுதல் சொல்ல முயல்கின்றான்.
தனக்கு நடந்தவற்றையும்,கார்த்திக்கில்  உள்ள ஏமாற்றத்தையும் வெளியே சொல்ல விரும்பாதவளாக ,ராஜி கமலுடன் சாதாரணமாகவே பேசுகின்றாள்.
ஆனால் அவளது முக வாட்டத்தைக் கண்ட கமல் ,உண்மையை அறியவும்
அவளது வாட்டத்துக்கு காரணத்தை அறியவும் அவளை விடுத்து, விடுத்து  கேள்வி மேல் கேள்விகள் கேட்கின்றான் .
ஆனால்,அவள் அவனுக்குப் பிடி கொடுக்காமல் கதைத்து சமாளிக்க முயல்கின்றாள். பின்னர் அவனையும் தன்னைப் பற்றி யோசிக்காமல்
வேலையில் கவனம் செலுத்தும் படி கேட்டுக் கொள்ளுகின்றாள்.
ஆனால் அவன் அந்த இடத்தை விட்டுச் சென்ற மறு விநாடியே துயரம்   தாங்காமல் மனம் விட்டு அழுகின்றாள்.அதை கமல் திரும்பி வந்து
கண்டுவிடுகின்றான்.
அவளைத் தேற்ற முயல்கின்றான்.ஆனால் அவள் கார்த்திக்  தன்னை 
ஏமாற்றி விட்டதாகக் கூறி தொடர்ந்து அழுகின்றாள்.தான் அவனை ஒவ்வொரு முறையும் நம்பி ஏமாந்ததாகவும் கூறுகின்றாள்.
அதற்கு கமல் இப்படி அழுவது இதுவே கடைசியாக இருக்கட்டும் என்று
கூறி அவளைத் தேற்றுகின்றான்.
அவளும் அவனை ஏறெடுத்துப்  பார்த்து தொடர்ந்து வேதனைப் படுவதுடன்
பாகம் முடிந்தது.
ஒட்டுமொத்தமாக மிகவும் வேதனையான உணர்வுபூர்வமான,அத்தியாயமாக
இருந்தாலும்,ராஜி கார்த்திக்கின் பிரிவுக்குப் பின்னால் ஒரு முக்கியமான  
படிப்பனை இருப்பதாகவே எனக்குத் தோன்றுகின்றது!

காதல் என்பது இரு உள்ளங்களின் இணைவில் மட்டுமல்லாது அதன் ,சரியான புரிவில்,இரண்டு அன்புள்ளங்களின் ஒரே எண்ணிக்கையான
அதிர்வில்,ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து , கண்டிப்புக்களில்லாது  ,எதிர்பார்ப்புக்களின் அடிப்படையில் மற்றவரைக் கணக்குப் போடாது ,கண்டித்து ,மனம் வருத்தாது,மற்றவரின் இதய வலியை, தன் வலியாக.ஏற்றுக்  கொண்டு , வாழ்க்கையில்  என்ன ஏற்றம் தாழ்வு வந்தாலும்
நாம் ஒன்றாகிவிட்டோம் ,சேர்ந்து வாழ்வதற்காக எதையுமே தியாகம் செய்யும் நிலையிலேயே , ஒரு சந்தோஷமான வாழ்க்கை அமைய முடியும்.
இல்லாவிட்டால் நரக வாழ்க்கை தான் மிஞ்சும்
நரக வாழ்கை வாழ்வதை விட பிரிவு எவ்வளவோ மேலானதாகும்.
மேற்கூறிய கருத்துடன் இன்றைய விமர்சனத்தை முடித்துக்  கொள்ளுகின்றேன்.

மீண்டும் ஆசிகளுடன்!


No comments:

Post a Comment