EPISODE -452
EPISODE-452 TAMIL
அத்தியாயம்-452- WEDNESDAY 24/DEC/2014
இன்றைய அத்தியாயம் முழுக்க முழுக்க விஷ்ணுவின் விபத்தைப் பற்றியதுதான்!
காட்சி -1
அன்புமாமாவுக்கும் கார்த்திக்கும் என்ன நடந்தது என்பதை விளக்கும் விஷ்ணு தான் அடிபட்டவனை விட்டு விட்டு சென்றதற்கு மணிமேகலை காரில் இருந்ததும் ஒரு காரணம் என்று கூறுகின்றான் அங்கே சுத்திவர ஆட்கள் வந்ததால் அவர்கள் எப்படியாவது அவனைக் காப்பாற்றி விடுவார்கள் என்று நினைத்ததாகவும் சொல்கின்றான் !இதைக் கேட்டு அவனது பொறுப்பிலாத தனத்த்தை குறித்து விஷ்ணு வை ,கார்த்திக் முதலில் திட்டித் தீர்த்தாலும்,விஷ்ணுவின் நிலைமையை உணர்ந்து கொண்டு அவனுக்கு ஆறுதலும் சொல்லுகினான்!
ஆனால் அடிபட்டவனைப் போய் பார்ப்பது தான் சரிஎன்ற முடிவுடன் மூவரும் அவனிச் சேர்த்திருக்கின்ற மருத்துவமனைக்குப் போகின்றனர்.
காட்சி-2
அங்கு போய்ச் சேர்ந்ததும் அன்பு மாமா அங்கு வேலை செய்கின்ற வனிடம் கேட்டு அவனை அனுமதித்து உள்ள அறைக்கு வெளியில் வந்து சேருகின்றனர்.
அடிபட்டவனின் நிலைமை மோசமாக இருப்பதாக வேலை செய்பவன் சொல்லி வைக்கின்றான்.
விஷ்ணு அதைக் கேட்டு அங்கலாய்க் கின்றான் .அவனைச் சமாதானப் படுத்த கார்த்திக்கும் அன்புமாமாவும் பெரிதும் பாடு படுகின்றனர்.
மருத்துவமையில் அனுமதிக்கப் படும் அவனோடு அவனது இளைய மனைவியையும் அவன் குழந்தையையும் மூவரும் காண்கின்றனர்!
மனைவி அழுது கொண்டு இருப்பதையும் ,குழந்தை வேதனையுடன் இருப்பதையும் கண்டு விஷ்ணுவுக்கு இப்போது குற்ற உணர்ச்சி இன்னும் மிகையாகிறது!
தானும் அடிபட்டவனைப் போய் பார்த்து மனைவிக்கு ஆறுதலும் சொல்ல விஷ்ணு அவதிப் படுகின்றான்.ஆனால் அன்பு மாமாவும்,கார்த்திக்கும்,அவர்களிடம் நெருங்காமல் பார்த்துக் கொள்ளுகின்றனர்.
காட்சி -3
அடிபட்ட மனோகரனை பரிசோதித்த வைத்தியர்,அவனுக்கு அறுவைச் சிகிச்சை செய்யவேண்டும் என்று அவனது மனைவியிடம் சொல்லி
பணத்தை உடனடியாகக் கட்டவேண்டு மென்றும் அவளிடம் சொல்வதை கேட்டு இவர்கள் மூவரும் திகைக்கின்றார்கள்.
அவள் அதற்கு அவனிடம் உள்ள காப்புறுதிப் பணம் உதவாதா, என்று கேட்க அவர் அவன் குடித்து விட்டு வந்து விபத்து அடைந்ததால் காப்புறுதிப் பணம் கிடைக்காது என்றும் பணம் கட்ட முடியாது என்ற பட்சத்தில் மனோகரனை அரசார் மருத்துவ மனைக்கு இடம் மாற்ற வேண்டும் என்றும் சொல்லி மனைவியைச் சங்கடத்துக்கு ஆளாக்குகின்றார்.மனைவி வழி தெரியாமல் திணறுகின்றாள்.
அன்புமாமா அவளிடம் இரக்கப் பட்டு, அவளோடு பேச முயன்று, அவளை ஆறுதப் படுத்த முனையவே அவள் அவரிடம் நம்பிக்கை கொண்டு தன்னிடம் உள்ள நகையை யாரிடமாவது வித்துத் தருமாறு கேட்கின்றாள்.ஆனால் அதை வாங்க மறுத்த அன்பு தான் தனக்குத் தெரிந்த வைத்தியரிடம் பேசிப்பார்ப் பதாகக் கூறி விஷ்ணுவிடம் வந்து விடயத்தை சொல்கின்றான்!
பின்னர் அதே வேளயில் அவளது மைத்துனன் அவளுக்கு குறைந்த பணத்தை கொண்டுவந்து கொடுத்து அவளையும் திட்டி விட்டு அதற்குமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிட்டுப் போகின்றான்.
இவற்றையெல்லாம் தூர நின்று பார்த்துக் கொண்டு நின்ற விஷ்ணு அன்பு மாமாவின் உதவிடன் மனைவிக்கு யார் காசு கட்டியது என்பது தெரியாத விதமாக பணத்தைக் கட்டி விடுகின்றான்!
காட்சி -4
சிகிச்சை ஒருமாதிரியாக நடந்து முடிகின்றது.மனைவி ஆறுதல் அடைகின்றாள்.ஆனால் யார் பணத்தைக் கட்டியது என்ற குழப்பத்துடன் அன்பு மாமாவைக் கேட்கின்றாள்.அன்புமாமா தனக்கும் யாரென்று தெரியாது என்று சொல்லிச் சமாளிக்கின்றார்.
ஆனால் விஷ்ணுவைக் காபாற்றுமுகமாக அவனை வீட்டுக்கு போகும் படி பணிக்கிறார்.தான் அங்கு இருந்து பார்த்துக் கொள்ளுவதாகவும் கூறி அவனை அனுப்புகின்றார்.விஷ்ணு மறைவாக நின்று மனைவி அன்புமாமாவுடன் பேசுவதுடன் பாகம் நிறைவு பெறுகின்றது!
ஒட்டுமொத்தமாக விஷ்ணுவின் குற்ற உணர்ச்சியையும் அதனால் அவன் தாக்கப் படுவதையும் மிக விரிவாகக் காட்டிய பாகமாகவே இது இருந்தது!
இதில் விஷ்ணு,அன்புமாமா ,கார்த்திக்கின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்!
மீண்டும் ஆசிகளுடன்!



