EPISODE-456 TAMIL
EPISODE-456
அத்தியாயம்-456
TUESDAY DEC/30/2014
இன்றைய
அத்தியாயம் ஏதோ ஒரு வித்தியாசமான
பாதையை நோக்கி நகர்ந்தது
போன்ற பிரமையில்
எம்மை ஆழ்த்தியது என்றே
சொல்லவேண்டும்!
அலுவலகத்தில்
இத்தனை நாட்களிலும் நடந்த பல யதார்த்தத்தை மீறிய
காட்சிகளுக்கு இன்றைய பாகம் சிகரம்
வைத்து நம்மையும் கலக்கியது!
காட்சி
-1,2
விஷ்ணு
மனோகரனின் வீட்டை
விட்டுத் தன வீட்டுக்கு போய்
விட்டான் என்று நினைத்தவர்களுக்கும்,மனோகரனின்
மனைவி ராதிகாவுக்கும்
அவனை அவள் வீட்டுக்கு முன்னரே
கண்டது பெரிய அதிர்ச்சியாகத்தான் இருந்தது!
இவ்வளவு சுலபமாக
,விஷ்ணுவின் பாத்திரத்தை
ஒரு தியாகியின் உயரத்துக்கே
தூக்கி வைப்பது யதார்த்தத்துக்கு ஒப்பானதா
இல்லை அதை விட மேலேயா
என்ற கேள்விகளை எழுப்பத்தான் செய்தது!
ஆனாலும்
மனோகரனின் பாதிக்கப் பட்ட குடும்பத்தின் பாதுகாப்பு
தன்னுடையது என்று நினைத்து அருமையாகத்
தன பாத்திரத்தை நடித்திருக்கின்றார் நடிகர் ,விஷ்ணு!பாராட்டுக்கள்!
ராதிகாவாக
நடித்த பெண்ணும் அருமையாக நடித்திருக்கின்றார்.
காட்சி-2
ராஜியும்
அப்பாவும் வரும் காட்சி! இது
மகளின் வாழ்வில் மிக்க அக்கறை கொண்ட
அப்பாவாக அவர் எடுக்கப் போகும்
அடுத்த முடிவு
பற்றியது!
அப்பா உண்மையாகவே மகளுக்கு புது மாப்பிள்ளை ஒழுங்கு
படுத்துகின்றாரா இல்லை இவர்கள் இருவரையும்
நன்றாகவே புரிந்து வைத்துக் கொண்டு இவர்களுக்கு ,ஒரு
வாழ்க்கைச் சோதனையே வைக்கப் போகின்றாரா
என்பதில் எனக்கு பெரிய சந்தேகம்
ஒன்று உருவாக்கி இருக்கிறது!
அவரது உதாரமும்,கடினமான முடிவும் ,பார்ப்பதற்கு
மகளைக் கேட்டுக் கொண்டு எல்லாம் இருக்காமல்,அவள் ,பிடித்தால் என்ன
,பிடிக்காவிட்டால் என்ன ,அடுத்த கல்யாணத்தை
நடத்திவிடுவார் போலிருக்கிறது!
என்னதான்
நடக்கும் என்று பார்ப்போமே?
காட்சி
-4
மாமாவும்
,கமலும், திடீர் என்று ஒருவரை
ஒருவர் பலகாலமாகத் தெரிந்தவர்கள் போல் சம்பாஷித்துக் கொள்ளும்
காட்சி!
பிறகு கார்த்திக்குடன் தயங்கித்,தயங்கி மாமா,மருமகன்
சம்பாஷணை செய்வதும் ,மிகவும் வாஞ்சையுடன் பேசுவதும்,
கேட்பதற்கும்,அவதானிப்பதற்கும் மிகவும் புதிராக இருந்தது!
அவர்கள்
இருவரும் பேசுவதை கார்த்திக் கண்டு
வியப்பது எல்லாமே
அவசம் அவசரமாகக் காடப்பட்டது போன்ற ஒரு உணர்வும் எழுந்தது!
என்ன வென்று தெரியாத ஒரு
மர்மமான நாவல் வாசிப்பது போல ஒரு உணர்வு.!
கார்த்திக்கோ
தயங்கித் தயங்கி ,மெல்லவும் ,முடியாமல்
விழுங்கவும் முடியாமல் பேசும் பேச்சு எல்லாமே
,எதை நாளை எதிர்பார்ப்போம் என்று
சொல்ல முடியாத நிலைக்கு எல்லோரையும்
தள்ளியது.
எதற்கும் வழமை போல நாளை
நாளை ,வருடத்தின் கடைசி நாளை எதிர் பார்த்துக்
காத்திருப்போம்!
என்னதான்
நடக்குது இங்கே என்ற கேள்வி
எழத்தான் செய்கிறது!
கார்த்திக்கும்,சுருதியும் ,ரமேஷ் குமாரும் தமது
பாகத்தை நன்றாகவே வழமை போல நடித்திருந்தனர்!
ஆனால் கதையிலேதான் , தான் ஏதோ ஒரு
வேகம், உயிர் இல்லாதது
போன்ற உணர்வு ஏற்ப்பட்டது!
மீண்டும்
ஆசிகளுடன்!



