Thursday, February 11, 2016

UNNAI ARINTHAAL -CHAPTER-5



உன்னை அறிந்தால் .......பாகம் -5
காப்பிக் கடையில் நந்தகோபால் ஒரு ஆச்சர்யத்தை எதிர்நோக்கிய வேளையில் அவனிடத்தில் இருந்து சுமார் ஐந்து கிலோ- மீட்டருக்கு ( KILO-METER ) க்கு  அப்பால், அவன் உதவி செய்து அனுப்பி வைத்த நிலா  தனது வீட்டுக்கு  முன்னால் அப்போதுதான் வந்து சேர்ந்தாள்.
மிகவும் களைத்தவளாகக்  காணப் பட்ட அவள் தனது காரை விட்டு இறங்கி மிகவும் நேர்த்தியாகத் துப்பரவாக்கப் பட்டிருந்த வீட்டு முற்றத்தையும் ,தனது காரும் பக்கத்தில் ஏற்கனவே  நிறுத்தியிருந்த சிவப்பு நிற "டொயோடா "  (TOYOTA )காரும் பனிவிழுந்த சாயல் இல்லாமலே நிற்பதை எண்ணி பெருமைப் பட்டுக் கொண்டாள்..பக்கத்து வீட்டில் உள்ள பெரியவர் எப்போதும் தன்னுடைய கார் தரிப்பிடம் துப்பரவாக்கும் போது இவளுடையதையும் துப்பரவாக்குவார் என்பது இவளுக்குத் தெரியும்.
அதத் தொடர்ந்து , அப்போதுதான் அவளுக்கு  திடீரென்று  நந்தனின் ஞாபகம்  திரும்பவும் வந்தது போலும்.லேசாக ஒரு முறுவலும் அவளை அறியாமலேயே அவளது முகத்தில் வந்து போனது..ஆனாலும் மெல்ல அதை முகத்தில் இருந்து அகற்றிக் கொண்டு,காரின் கதவுகளை கையில் இருந்த நவீன திறப்பை அமுக்கிப்  பூட்டிக் கொண்டு
வீட்டு   முன் வாசலுக்கு  வந்து சேர்ந்தாள்.
அவளது வீடு மிகவும் சிறிய அழகான ,அமைப்பான வீடாக வெளியில் இருந்து பார்க்கும் போதே தெரிந்தது.பனி முழு நாளும் கொட்டியதால் வீட்டைச் சுற்றி இருக்கும் தோட்டம் முழுதும் பனி நிறைந்த வெள்ளை காடாக காட்சி அளித்தது.. அதுவுமே ஒரு அழகுதான் ,அதையும் ஒருமுறை ரசித்த நிலா ,பூட்டியிருந்த   வீட்டுக்குள் நுழைய வதற்கு முன்னர் வீட்டுத் திறப்பை கையில் எடுத்த கையுடன்" ளோள், ளோள் " என்று என்று அவளது செல்ல நாய்க் குட்டி குரைப்பதைக் கேட்டாள்.அவளது முகம் பிரகாசமாயிற்று.
இது வழமையாக அவளுக்கு நடக்கின்ற விடயம் தான் ".ஓகே ஓகே வெயிட் செகண்ட் ஆம்  கமிங் இன் யு லிட்டில் டைகர் "(OK OK WAIT A SECOND I AM COMING  IN YOU LITTLE  TIGER )என்று  செல்லமாக தன செல்ல நாய்க்  குட்டியைக் கடிந்து கொண்டே கதவைத் திறந்தாள்.இவளைக் கண்டதுமே டைகர் இவள் மேல்  பாய்ந்து அவளது கவனத்தை ஈர்ப்பதற்காக என்னென்னவோ   எல்லாம் செய்தது.அவளும் டைகரை அணைத்து" சரி சரி  என்னை கொஞ்ச நேரம் விடு நான் வந்துடுறேன் "என்று செல்லமாக டைகரை அதட்டி விட்டு தன்னுடைய வெளியுடைகள்.காலணிகள் எல்லாவற்றையும் கழற்றி விட்டு, பிரதான அறைக்குள் போகமுன்னர் உள்ள இடத்தில் வைத்துவிட்டு "அப்பாடா " என்று தன்னைச் சுதாகரித்துக் கொண்டாள்.
பின்னர் தன காலையே சுற்றிக் கொண்டு நிற்கும் டைகரை அப்படியே கட்டி அணைத்து தன்னோடு தூக்கினாள். டைகர் நல்ல சாதியைச்  சேர்ந்த குட்டி நாய் .குழந்தை மாதிரி அணைந்து கொள்ளும்.நிலாவுக்கு அது ஒன்றுதான் வீட்டுக்கு வந்தால் துணையாக இருக்கும் . தோழியும் சகோதரியும் அதுதான். அந்த வீட்டில் அவளை விட அவளது தூரத்து சொந்தக் கார ஒரு சித்தியும் குடியிருந்தாள்.சித்தி முறை பெண்ணாக இருந்தாலும் நிலாவுவை விட ஒரு ஐந்து வயது மூத்தவள்.நிலாவைப் போலவே அவளும் இந்தவீட்டில் இருந்து கொண்டு தூரத்தில் வேலை செய்கின்றவள்.
நிலா காலையில் எட்டுமணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பிப் போனால் வீடு வந்து சேர கிட்டத்தட்ட ஆறு மணியாகும்.இவள் புறப்படமுன்னரே வீட்டை விட்டுக் கிளம்பும் இவளது சித்தி மலர் ,வீடு வந்து சேர ஏழுமணியாகிவிடும்.
இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலும் சந்தித்துக் கொள்ளும் நேரம் குறைவு. சந்திக்கும் போதும் அதிகம் பேசுவது என்பதும் இல்லை.நிலா மிகவும் முன்னோக்கான பெண். ஆனால் மலர் அதற்க்கு எதிர் மாறு. மிகவும் கூச்ச சுபாவம். அதுமட்டுமலாமல் ,
நிலாவுடைய  பாட்டி யாழ்ப்பாணத்தில் இருந்து  நிலாவுக்கு கேட்டுக் கொண்டதன் படி நிலா மலருக்கு தன்னோடு தங்குவதற்கு இடம் கொடுத்து இருந்தாள்.
பாட்டிக்கு யாழ்ப்பாணத்தில் தெரியாதவர்கள் யாருமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.நிலாவுக்கு அப்பாவும் அம்மாவும் இல்லை. இவள் இரண்டு வயதுக் குழந்தையாக இருக்கும் போதே இனக் கலவரப் படுகொலைகளுக்குள் அகப்பட்டு இறந்து விட்ட நிலையில் பாட்டி தான் அவளை கரையாமுள்ளி வாய்க்காலில் இருந்து தப்பி யோடி வந்து கொழும்புக்கு வந்து அங்கே தனக்கு தெரிந்த ஒரு சொந்தக்காரரோடு இருந்து கொண்டு இவளை வளர்த்தெடுத்தாள்.பாட்டியுடைய  சுயநலமற்ற பண்பும்  கரைகடந்த அன்பும் தான் நிலாவை ஒரு நிலைக்கு கொண்டு வந்ததென்று சொல்லலாம்.
அவளுடைய முயற்ச்சியால்  யாரோ தெரிந்தவர்களோடு நிலாவை யும் சேர்த்து கனடாவுக்கு அனுப்பிய பெருமையும் பாட்டியைத்தான் சேரும்.கனடாவுக்கு, நிலா குடியேறி ,  தொடர்ந்து படித்து பட்டதாரியாகி ஒரு வங்கியில் வேலை பார்த்து ,சொந்தத்தில் ,வீடும் வாங்கி இருக்கின்றாள் என்றால் அது எல்லாம் பாட்டி   கொடுத்த தன்னம்பிக்கையும் விடாமுயற்ச்சியும் தான் காரணம். இதனாலே தான் பாட்டி   கேட்டுக் கொண்டதன் படி தன்னைப் போலவே புது வாழ்வு தேடி, புலம் பெயர்ந்த அப்பாவிப் பெண் மலருக்கு தன்னுடையவீட்டிலேயே தங்க இடம் நிலா கொடுக்க சம்மதிக்கும் நிலை வந்தது. 
டைகரை இறுக்கி அணைத்து தன்னுடன் சேர்த்த நிலாவுக்கு  பசியெடுத்தது.அதேநேரம் அவளது டெலிபோனும் ஒலி  எழுப்பியது.யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே டெலிபோனைத் திறந்து பார்த்தாள் நிலா.எப்போதும் இல்லாத புது எண் காட்டியது டெலிபோன்.
தொடரும்...................!  
 



No comments:

Post a Comment