Episode-476 Tamil
அத்தியாயம் -476 -Monday- Feb /2/2015
இன்றைய அத்தியாயம்
ஒரு வித்தியாசமான ஆனால் அலுவலகத்
தொடரில்
ஏதோ ஒரு
புதுப் பொலிவு வந்தது போன்ற
எண்ணத்தை கொடுத்தது.
காட்சி
-1
ராஜி விஷ்ணு சந்திப்பு. விஷ்ணு
ராஜியிடம் கார்த்திக்கின் மன நிலை பற்றிச்
சொல்லி அவள் அழும் நிலைக்கு
கொண்டுவந்த கட்டம்.
அவனது உண்மையான காதலை நிரூபிக்க தான்
பதிவு செய்ததையும் அவளுக்குக் காட்டியது விஷ்ணு உண்மையான
இருவரின் நண்பன் என்பதோடு மட்டுமல்லாது அவர்களது உளப் பாங்கை முழுமையாக அறிந்து
இருவரும்
இப்படித் தங்கள் பொன்னாகப் போற்றப்
படவேண்டிய வாழ்க்கையை புரிதலும் பொறுமையும் .ஒருத்தருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும்
பண்பும் இல்லாமையால் வீணடிப்பதை சகித்துக் கொள்ளாததால்
இருவருக்கும்
அறிவுரை கூறும் சிறந்த அம்சம்
மிகச் சிறப்பாக அமைந்தது.
விஷ்ணுவின் சிறந்த
நடிப்பும்,இயக்குனரின் இயக்குதலும் இதில் பாராட்டப் பட
வேண்டியவையே.
காட்சி
-2கார்த்திக் விசுவநாதன் ராஜி சந்திப்பும் மிகச்
சிறந்த காட்சியாகும்.
அலுவலக
ஆறாம் பற்றியும்.கார்த்திக் ராஜியின் அன்பும் புரிதலும் அவர்களது
தொழிலுக்கு எவ்வளவு முக்கியமாக இருந்தது என்பது பற்றி அவர்
குறிப்பிடுவது இனி எதிர்காலத்தில்
இந்த தொழில் ஸ்தாபனத்தின் வளர்ச்சிக்கு
அவர்களது பிரிவும் வெறுப்பும் குறுக்கீடாக இருக்கக் கூடாது என்பதையும் நாசூக்காக
எதையோ அவர்களுக்கு
உணர்த்துவது போல இருந்தது.
இருவரும்
பக்கத்துக் பக்கத்தே அமர்ந்து அவரை உன்னிப்பாகக் கவனித்தும்
தமக்குள்ளே
எந்த வெறுப்பும் இல்லை என்று ஒன்றாக
ஒத்துக் கொண்டதும்அவர்களது வாழ்வில் ஏதோ ஒரு மலர்வு
காத்து இருக்கிறது என்பதற்கு சிறிய அறிகுறியாக எனக்குத்
தெரிந்தது.
காட்சி-3
கமல் ராஜி சந்திப்பு.
கமல் ராஜியின் வீட்டுக்குச் சென்று அவளுக்கு பலசரக்குஷ்
சாமான்களும்
இறைச்சியும்
வாங்கிய கட்டம், அவர்களது வஞ்சகமில்லாதா
ஒரு சிறந்த நட்பாக தெரிந்தது.
ராஜியும் அவனது நட்பில் மகிழ்வது
தெரிந்தது.
ஆனாலும்
கமல் ராஜியை
விட அவளிடம் ஒருபடி நட்பை
விட ஒருபடி மேலாக எதிர்பார்க்கிறானோ
என்றே தோன்றியது.
ராஜியும்
வஞ்சக மில்லாமல் தான் அவனது பிறந்ததனத்திலன்று
அவனை ஏமாற்றியதாக மன்னிப் கேட்கின்றாள் .
அதற்கு பிராயச்
சித்தமாக தான் அவனுக்கு பரிசுப்
பொருள் தருவதாகவும்
மீண்டும்
வெளியே போகச் சம்மதமும் கொடுக்கிறாள்.
கமழும்
மிகுந்த மகிழ்சியுடன் அதை ஏற்றுகி கொள்ளுகின்றான்.
காட்சி
-4
ராதிகா
,மணிமேகலை விஷ்ணுவின் வேலைக்குழுவைச்
சேர்ந்த இரு
பெண்கள் சந்திப்பு.
விஷ்ணுவைப்
பற்றிய உண்மையை ராதிகா அரிது
மகிழ்ந்தாலும் சமீபத்தில்
விஷ்ணு
சந்தோஷமில்லாமல் இருப்பதற்கு தனது கணவரின் சாவே
காரணம் என்று அறிந்து கவலைப்
படுகின்றாள்.ஆனால் முழு உண்மையும்
அவளுக்கு தெரியாது.
ஆனால் மணிமேகலை விஷ்ணு வுக்கும் ராதிகாவுக்கும்
எந்த விதத்தால்
நட்பு வந்தது என்பதை உணரும்
காட்சி இது.
ஒட்டு மொத்தமாக சிறந்த அத்தியாயம்.
மீண்டும்
ஆசிகளுடன்!

No comments:
Post a Comment