HAPPY FATHERS DAY !
அப்பாவின் இடம் ஒரு தனியிடம்!
அம்மா சுமக்கின்றாள்!அப்பா அணைக்கின்றார்!
ஆயிரம் தொல்லைகளில் அரவணைப்பு தருகின்றார்!
இன்னல் வருகையில் இறுமாப்பால்எதிர்க்கின்றார்!
ஈனம் நடக்கையிலே ஏன் என்று கேட்கின்றார்!
உள்ள உறுதியிலே உயரம் வகிக்கின்றார்!
ஊனம், நேர்கையிலே உற்சாகம் தருகின்றார்!
எந்தக் கட்டத்திலும் எம்மோடு நிற்கின்றார்!
ஏமாற்றம் வரும்போது அதை ஏற்கப் பழக்குகின்றார்!
ஐந்து வயதிலும் ஐம்பதிலும் அன்பால் நனைக் கின்றார்!
ஒருபோதும் தயங்காது எம்நலம் நாடி உழைக்கின்றார்!
ஓராயிரம் அறிவுமொழிகள் ஒன்றொன்றாய் தருகின்றார்!
ஔடதமாய், அன்பாய், வழிகாட்டியாய் நம் வாழ்வில் நிலைக்கின்றார்!
ஆகவே இக் கவிதை அந்த எல்லோரதும் அப்பாவுக்கு சமர்ப்பணம்!
No comments:
Post a Comment