உன்னை அறிந்தால்..........பாகம்-6
காப்பிக் கடையில் நந்தன் ஆச்சர்யப்பட்டுப் பார்த்த நபர் வேறுயாருமில்லை ,அவனுடன் வேலை பார்க்கும்
அவனது சக ஊழியனும் அவனுக்கு கண்ணிலே காட்டக் கூடாதவனுமான மூர்த்திதான். அவனும் தமிழ்நாட்டுக் காரன்தான் .ஆனால் சென்னைப் பையன்.பெரிய வீட்டுக் காரப் பிள்ளை .ஒரே மகன் .கனடாவுக்கு வந்து பெற்றார்களுடன் மிகவும் வசதியுடன் இருக்கின்றவன் என்பது எல்லாம் நந்தனுக்கும் அவனைப் பற்றித் தெரிந்தறிந்திருக்கும் விடயங்கள் ஆகும். . வேலையில் அவனுடன் பலமுறை வேலை விடயங்களில் முரண்பட்ட கருத்துக்களுடன் இவன் மோதியிருக்கின்றான்.ஆனாலும் அதைக் கூட நந்தனால் சகித்துக் கொண்டிருந்திருக்க முடியும் .
ஆனால் சிலமாதங்களுக்கு முன்னர் பிரித்தானியாவில் இருந்து ஒரு குழாமாக வங்கி ஊழியர்கள் வந்து இவர்களை சந்திக்க வந்தபோது மூர்த்தி முந்திரிக் கொட்டை மாதிரி அவர்களுக்கு ,அனாவசியமாக வால் பிடித்து , அவர்களிடம் வழிந்தது போல் நடந்து கொண்டது இவனால் மறக்க முடியாத விடயமாக இருந்து கொண்டே இப்போதும் இருப்பதுதான் அவனைக் கண்டாலே இவனுக்கு பிடிக்காமல் இருப்பதற்கு காரணமாக இருந்தது..அதிலும் தனக்கு எல்லாமே தெரிந்தவன் மாதிரி ஒரு கூட்டம் நடக்கும் போது மற்றவர்களை தூக்கி எறிந்து பேசும் தன்மை நந்தனுக்கு எப்போதுமே சகிக்க முடியாதவிடயம்.மற்றவனுக்கு மரியாதையும் ,மற்றவனைப் பேசவிடாமல் மடக்கும் தன்மையும் இடம் கொடுக்க முடியாத தன்மையும் நந்தனால் எப்போதுமே சகிக்க முடியாத விடயம் .இதனால் கூட்டம் முடிந்த பின்னர் மூர்த்தியைத் தனிப்பட சந்தித்து எத்தனையோ முறை அவனை எச்சரித்தும் இருக்கின்றான்.இதனால் மூர்த்திக்கும் நந்தனை மொத்தமாகப் பிடிக்காது என்பது நந்தனின் சிநேகிதன் மோகனுக்கும் சாடைமாடையாகத் தெரிந்திருந்தது..
ஒரே காரியாலயத்தில் வேலை செய்பவர்கள் ஒருவரை ஒருவர் பிடிக்காமல் இருந்தால் எப்படியாவது யார்மூலமாகவே யாவது அவர்களது கசப்பான உணர்வுகள் பரிமாறப் பட்டு பிடிக்காதவர்களின் காதுகளைச் சேர்ந்து அடைவது இந்த உலகத்தில் சர்வசாதாரணமாக நடக்கும் விடயமாகும். இதற்கு நந்தனும் மூர்த்தியும் விதி விலக்குகள் அல்ல.
இவனைக் கண்டதும் மூர்த்தி முகத்தைத் திருப்பிக் கொண்டு மறு பக்கம் நடந்தான் .இவனையே பார்த்துக் கொண்டு இருந்த மோகன் ,மூர்த்தியையும் கவனித்துக் கொண்டு இருந்தவன் போல திடீர் என்று "என்ன மச்சான் இவ்வளவு நேரம் ஆகுது எனக்குப் பசிக்குதுடாப்பா " என்று நந்தனுக்கு குரல் கொடுத்து நந்தனின் கவனத்தைத் தன பக்கம் திருப்பும் வேலையில் இறங்கினான்..நந்தனும் அவனது குரலைக் கேட்டதும் வாங்கிய காப்பியையும் ஏதோ வயிற்றுப் பசியை நீக்க வாங்கிய சிற்றுண்டியையும் ஒருதட்டத்தில் வைத்துக் கொண்டு அவனை நெருங்கி அவனுக்கு எதிராக உட்கார்ந்தான்.
மோகன்,குறும்பாக நந்தனைப் பார்த்து சிரித்தான் .பிறகு முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்ற மூர்த்தியைப் பார்த்து ஏளனமாகத் தலையை ஆட்டி விட்டு நந்தனின் காதுக்குள்ளே "என்ன மச்சான் உன்னோட ஹீரோ வந்து இருக்கிறாரோ ?"
என்று கேலியாக கேட்டு வைத்தான்.நந்தனுக்கு இதைக் கேட்க இன்னும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது போல "மோகன் வேணாம் என் வைத் தெரிச்சலைக் கிளப்பாதே "என்று மெதுவாகச் சொல்லிவிட்டு தனக்கே உரிய பாணியில் உரிமையாகத் தன்னுடைய நண்பனைச் சாப்பிடச் சொன்னான்.
அவர்கள் இருவருமே அந்த சம்பாஷணையை முடித்துக் கொண்டு கதைக்க வந்த விடயத்தை நந்தன் மெதுவாக ஆரம்பித்தபோது .மூர்த்தி இவர்களை நோக்கி வருவது தெரிந்தது .இருவரும் தொடங்கிய கதையை பாதியில் நிறுத்தி விட்டு அவனை ஓரக் கண்ணால் நோட்டம் விட்டார்கள். அவன் கிட்ட வரும் போது எதைப் பற்றியும் பேசவேண்டாமே என்பதுதான் நந்தனின் நோக்கமாக இருந்தது. ஆனால் இருவரும் தாம் பேசத் தொடங்கியதை ஒரேயடியாக நிறுத்த வேண்டியதாக அங்கு ஒரு புது விடயம் நடந்து கொண்டிருந்தது.அது வேறு ஒன்று மில்லை.அவர்களைக் கடந்து சென்ற மூர்த்தி இவர்களைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.ஆனால் தன கையில் இருந்த செல்போனில் (CELL PHONE)" ஹாய் நிலா ஹொவ் ஆர் யு ?" (HI NILA HOW ARE YOU ?) என்று மிகவும் லாவகமாக பலநாள் அறிந்த ஒரு பெண்ணுடன் பேசுவது போன்ற தோரணையுடன் பேசிக் கொண்டு சென்றதே காரணமாகும்.நிலா என்ற பெயரை அதுவும் தனது பரம எதிரி என்று நினைக்கும் மூர்த்தி வாய் மூலம் கேட்டதும் நந்தன் ஒருமுறை அதிர்ச்சியடைந்தவன் போலக் காணப் பட்டான் .மோகனுக்கும் நந்தனின் சங்கடம் தெரிந்தது போலும் .உள்ளூர நந்தனைப் புரிந்து கொண்டவன் போல அவனை கேள்விக் குறி நிரம்பிய தோரணையில் பார்த்தான்.நந்தன் குழப்பமான முகத்துடன் தலையை ஆட்டினான்.
தொடரும்...........!.