Thursday, December 11, 2014



EPISODE-442 அத்தியாயம் -442

இன்றைய அத்தியாயம் முழுக்க முழுக்க மாதவி எவ்விதமாக ,சந்தர்ப்பம் பார்த்திருந்து  கார்த்திக்கும் ,ராஜிக்கும் இடையில் பிரிவைக் கூட்டி அவனைத் தன்பக்கம் இழுப்பதற்கு செய்யும் முயற்சியின் படிகள் என்றே சொல்லலாம்!

காட்சி-1
காலையிலே  வேலைக்கு புறப்படும் ராஜி கார்த்தி தன் அறையிலே அசந்து தூங்குவதைக் காண்கின்றாள்.அவன் முதுகைக் காட்டிக்கொண்டு தூங்குகிறான்.
அவள் சிறிது தயக்கமாகப் பார்த்தாலும் கீழே இறங்கி வந்து  "ஹால்" முழுவதும் இறைந்து கிடப்பதையும் சாப்பாட்டு மேசை,போட்டது போட்டபடியும்  அவனின் அப்பா அம்மாவின் படத்துக்கு சாத்தியிருந்த மாலை எல்லாமே கழன்று தொங்குவதைஎல்லாம் காண்கின்றாள் .பின்னர் கடிகாரத்தைப் பாரத்து விட்டு
நேரம் காணாதது போல உடனேயே புறப் பட்டு  அலுவலகம் வந்து சேர்கிறாள்.
அங்கே விஷ்ணு கார்த்திகைப் பற்றி விசாரிக்கிறான் .
வீட்டில் மின்சாரம் இல்லாததால் அவன் குளிர் நீரில் குளித்து காச்சலைத் தேடிக் கொண்டதாகவும் கூறுகிறாள்;
அதற்கு விஷ்ணு நகைச் சுவையாக பதில் கூறிவிட்டு எதுவானாலும் ,அவள் வீட்டில்  இருந்து கார்த்திக்கை கவனித்திருக்க வேண்டும் என்று புத்தி கூறிச் செல்கிறான்!
அவள் அவனுக்கு உடம்பு சரியில்லை என்றும் தனக்கு ,ஒரு முக்கியமான
கூட்டம் இருப்பதால் புறப்பட்டு வர வேண்டியதாயிற்று என்றும்
பதில் சொல்லுகின்றாள்.
இந்த  சம்பாஷணையை மாதவி உற்றுக் கேட்டு விட்டு,முகத்தில் கவலையுடனும் ,ஆனால் உள்ளத்தில்,கள்ளத்துடனும் பவித்ராவிடம்
சொல்லிக் கொண்டு அவனைப் பராமரிக்கப்  போவதாகக்  கூறி விட்டு
அவள் தடுக்கவும் கேட்காமல் புறப் பட்டுப் போகின்றாள்.

காட்சி -2
கூட்டம் நடக்கிறது.ராஜியின் எண்ணம் எல்லாம் கார்த்திகைப் பற்றியதாக இருக்கிறது. அவனை அந்த நிலைமையில் விட்டு விட்டு வந்ததை எண்ணி மனம் வருத்துவதாக இருந்தது.
அவனுக்கு ஒரு இடைவெளி  எடுத்துக் கொண்டு தொலை பேசியில் பேச முனைகின்றாள்.அவனிடம் இருந்து ஒரு  பதிலும் கிடைக்கவில்லை!
வேதனையோடு கூட்டத்தை தொடர்கின்றாள்!
அதே வேளையில் மாதவி கார்த்திக்,ராஜி வீடு தேடி" ஆட்டோ " வில் சென்று கொண்டு இருக்கிறாள்!

காட்சி-3
விஷ்ணு ,ராஜி அலுவலக சாப்பாட்டு அறையில் சந்திக்கின்றனர்.
ராஜி கவலையுடன் இருப்பதைக் கேட்டு விஷ்ணு மீண்டும் கார்த்திகைப்
பற்றி அக்கறையுடன் விசாரிக்கின்றான்.
ராஜி ,மிகவும் கவலையுடன் பதிலளிக்கின்றாள்.
விஷ்ணு ,அவளைக் குறை கூறுவதுடன் ,கார்த்திக்கு ஏதாவது விபரீதமாகவும் நடக்கக் கூடும் என்றும் உயிருக்கே ஆபத்தும் வரலாம் என்று பயமுறுத்தி அவளை வீட்டுக்கு போகும் படி வேண்டிக் கொள்கின்றான்.
.தான் பிறகு அவனை வந்து பார்ப்பதாகவும் கூறுகிறான்!
ராஜி ,அவனது சொல்லுக் கிணங்க உடனேயே புறப்பட்டு வீடு நோக்கி வருகின்றாள்!
அதேவேளையில் மாதவி வீடைத்  தேடிக் கண்டு பிடித்து,வீட்டுக்குள் நுழைவதுடன்,கார்த்திக்கையும் மாடியில் கடும் ஜுரத்துடன் படுத்திருப்பதையும் காண்கின்றாள்!
கவலையுடன் அவனை நித்திரை யில் எழுப்பி மருத்துவமனைக்கும்  போக வரச் சொல்லுகின்றாள்.அவன் அதை மறுத்து அவளையும் அங்கு வந்ததைப் பற்றி திட்டுகிறான்!பிறகு மீண்டும் அசந்து தூங்குகின்றான்.
மாதவியோ அவனைத் தூங்க விட்டு விட்டு அவனுக்கு "ஹோர்லிக்ஸ்" கரைக்க சமையலறைக்கு  செல்வதும், பின்னர் அவன் தூங்கிவிட்டது கண்டு அதை அப்படியே வைத்து விட்டு ,வீட்டைப் பெருக்கி",ஹால்" முழுவதையும் சுத்தம் செய்து ,சீர் செய்து அவனது இறைந்து கிடந்த உடுப்புக்களைஎல்லாம்
தோய்த்துக் காயப் போட்டு அப்படியே ஒரு ஆர்ப்பாட்டமான கவனமே தன் வீடு போலச்  செய்கின்றாள்.என்ன ஒரு கவனம் என்று நமக்குத் தோன்றக்  கூடியதாக அவளது செய்கை அமைந்திருந்தது!

காட்சி -4
ராஜி தன் வீடு தேடி முகத்தில் , கவலயுடன் வந்து கொண்டு இருக்கின்றாள்
மாதவி மீண்டும் கார்த்திக்கின் அறைக்கு வந்து அவனை தூக்கத்தை விட்டு நீக்க அவனை "சார் சார் " என்று அழைத்து  விட்டு ஒரு பதிலையும் காணாததால் அவனது தலையைத் தொட்டுப் பார்த்து அவனுக்கு ஜுரம்  அதிகமாக இருப்பதையும் கண்டு அவனது தலைக்கு வென்னீர் ஒத்தணம் கொடுக்க ஆயத்தப்  படுத்துகின்றாள் .
இப்போது ராஜி வீட்டுக்குள் நுழைகின்றாள்.
கொடியில் காய்ந்து கொண்டிருக்கும் கார்த்திக்கின் துணி,மணிகளையும் கண்டு ஆச்சரியப் படுகின்றாள் .
பின்னர் வாசலில் கழற்றப் பட்டிருக்கும் புதிய காலணிகளையும் காண்கின்றாள்."
வீட்டுக்குள் நுழைந்தால்,அங்கேயும் நேர்த்தியாக இருக்கும்" ஹால்"
அவளை இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. 
மேல் மாடிக்கு விரைந்து செல்கின்றாள்
அங்கே அவள் கண்ட காட்சி அவளை அப்படியே வாரித்  தூக்கிப் போடுகிறது.
மாதவி மிகவும் அன்னியோன்னியமாக கார்த்திக்கு அருகில் இருந்து கொண்டு அவனுக்கு
தலைக்கு ஒத்தணம் கொடுத்துக்  கொண்டு இருப்பதைக் காண்கின்றாள்!
ஆச்சரியமான ராஜியின்  முகத்துடன் அந்தக்காட்சியுடன் அத்தியாயம் முடிகிறது!

ஒட்டு மொத்தமாக அருமையான அத்தியாயம்!
ராஜியின் உணர்வுபூர்வமான நடிப்பும்,கார்த்திக்கின் அமைதியான ஆனால் சிறப்பான நடிப்பும்,விஷ்ணுவின் ,இயல்பான சிறந்த நடிப்பும்,மாதவியின் வில்லத்தனமான ஆனால் அருமையான நடிப்பும்  ,பவித்திராவின் சிறந்த நடிப்பும் இந்த அத்தியாயத்திற்கு மெருகூட்டியது என்றே சொல்ல வேண்டும்!

மீண்டும் ஆசிகளுடன்!



Wednesday, December 10, 2014

EPISODE-442 SUMMARY
Good evening all !

This has been  an episode of  Mathavi's  master plan to woo Karthik fully!
She  volunterily took the liberty  to look after Karthik at home when Raji was not there.

After the scene with Karthik at the office about the file ,she was visibly  upset .
At home she was upset to see him not well but she still left him as he was sleeping  and sick
Vishnu Raji scene was good and there Vishnu was asking for Karthik and Raji told him what happened at home  about Karthik is being  sick and sleeping.
Vishnu asked her to go home and be with him but Raji told him that she has to attend a meeting.
Mathavi and Pavithra over hears their conversation.
Maathavi wanted to go to  see Karthik .
Pavithra told her off aouut her decision to go and see Karthik when Raji  is not there
But Mathavi was determined to go and she went.
At work Raji was feeling for him and seemed disturbed while she was attending the meeting !
 She tried to phone Karthik to see whether he was alright  but no answer from him.

She met Vishnu at the canteen and Vishnu made her feel bad about not being with Karthik.
He insisted that the flu can even kill people if not tacled on time .
Raji got frightened by his words and she  was going home .
She feared for Karthiks life.at this point

While Raji was getting home Mathavi was already at home caring for Karthik.
Karthik was unaware of what was happening and he was sleeping most of the time.

Mathavi came to know that Karhtik  was having a high fever and she was offering him medicine when  he woke up for few miniiutes.

Karthik told her off for her being   there and he refused to take the medicine.
He stated that he already had medicine and he wanted to sleep .
She offered him to make  Horliks and she wenrt to the kitchen to make it.

When she came back with the drink he atready went to sleep

Then she did all the chores at home ,cleaned ,did the laundry and so on .
She was really doing all the chores like she owned the place .

Mean time ,Raji arrives home and seeing shoes in front of the door first and  saw Mathavi attending to Karthik at his bed side....!
She was shocked to see Mathavi there and Karhtik is in bed with a cloth on his forehead .
The scene  ended with showing the shock emotion on Rajis face .

Overall a brilliant episode with continuous sequences ,to give a full account of Mathavis game and Rajis emotions!

Vishnu and Karthik did their part very well too

good nigt all and enjoy the episode your selves








Episode 441 tamil


EPISODE-441
அத்தியாயம் -441

இன்றைய அத்தியாயம் கார்த்திக், ராஜியின் வாழ்க்கையில் மீண்டும்
புயலாக  வந்திருக்கிறேன் என்று சொல்லும் மாதவியின்
சூழ்ச்சியை பற்றியதும் அதனால் இவர்கள் இருவரும்
அடித்துக் கொண்டு விவாதிப்பதும் பற்றியதாகும்

காட்சி-1

மாதவியும் அஷ்வினும்  தமது வேலையிடத்தில்  இருந்து கொண்டு ராஜியின்
சந்தோஷத்தைப் பற்றி பேசும் போது,மாதவி ,அவளது புதிய மகிழ்வுக்கு
காரணம் அறிந்து கொண்டு ராஜிக்கு  வேண்டுமென்றே வெறுப்பு ஏற்றுகிறாள்.
ராஜியும் அவளது செய்கைகளைக் கண்டு ஆத்திரமடைந்து, அவளுடன் சாக்லேட் உறையைக் காட்டி நன்றாகவே திட்டி  விடுகிறாள்!

காட்சி -2
ராஜி திட்டியதைத் தொடர்ந்து , ஆத்திரம் கொள்ளும் மாதவி கார்த்திக்கிடம்
போய் ராஜியைப் பற்றி இல்லாத பொய்களெல்லாம்  சொல்லி  அவனை ஆத்திரம் மூட்டுவதுடன்,ஒருவாரமாக ,கார்த்திக் கொடுத்த முக்கியமான
பத்திரத்தில் கையெழுத்து போடவில்லை என்றும் பொய் சொல்லுகிறாள்!
பின்னர் ராஜி கூடிய நேரம்  தொலைபேசியில் நேரம் செலுத்துவதாகவும்,
கமலுடன் கதைப்பதாகவும்,அவனுடன் சந்தோஷமாக இருப்பதாகவும்
அதனாலேயே தனக்கு பத்திரத்தில் கையெழுத்துப் போடவில்லை என்றும்
குற்றம் சாட்டுகிறாள்!.
அவளை நம்புகின்ற கார்த்திக் பத்திரத்தை மேசையில் வைத்துவிட்டு
ராஜி எங்கே இருக்கிறாள் என்று கண்டு பிடிக்கும் படி சொல்லிவிட்டு காத்திருக்கின்றான் .
போனவள் ,திரும்பி வந்து  ராஜி இருக்கும் இடத்தைச் சொல்வதுடன்  அவள் தொலை பேசியில் கதைத்துக் கொண்டு இருப்பதாகவும் சொல்லி அவனுக்கு
இன்னும் வெறுப்பு ஏற்றுகிறாள்!

காட்சி-3
கார்த்திக்,இவளது  சொல்லை  நம்பிக்கொண்டு அவளைத் தேடிக் கொண்டு
சென்று பார்க்கும் போது அவள் தொலைபேசியில் கதைத்துக்  கொண்டு இருப்பதைக் காண்கிறான்!
அவனில் ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த ராஜி, அவனைப் பத்திரத்துடன்
கண்டதும் அவனை ஏற இறங்கப் பார்க்கின்றாள்!
அவனும் கோபத்துடனேயே அறைக்குள் வந்து பத்திரத்தில் உடனேயே கையெழுத்துப் போடச் சொல்கிறான் .
ராஜி அதைக் கேட்டு ,உடனேயே கையெழுத்துப் போட  மறுக்கிறாள்.
அதற்கு அவன்  விசுவநாதனுக்கு  தொலைபேசியிகுள் கதைத்து
அவர் மூலம் அவளைக்  கையெழுத்து போட வைக்கின்றான்!

காட்சி-4

அதைத் தொடர்ந்து இருவரதும் வாக்கு வாதம் ஆரம்பிக்கிறது!,
கார்த்திக் அவளை பத்திரத்தில் கையெழுத்து வைக்காததற்கு காரணம் கேட்பதுடன் ,ராஜி யின் நடவடிக்கைகள் சரியில்லை எனவும் அநியாயமாக
குற்றம் சாட்டுகிறான்!
அதற்கு ராஜியும் பதிலடி கொடுக்கிறாள்!
இருவருமே ஒருவருக்கு ,ஒருவர் ,தம்மைச் சுற்றி நடப்பவற்றைப் பற்றி மனம் விட்டுப் பேசி உண்மையை அறியாமலேயே ஒருவரில்  ஒருவர் மனம் நோகும்படி பேசித் தீர்க்கின்றனர்.அவர்களது வாக்கு வாதத்தின் முடிவில்
ஆத்திரம் உச்சத்துக்கு ஏறி ஒருவரை ஒருவர் அடக்கும் விதமாக
மாகவும் வைதுவிடடு அறையை விட்டு இரண்டு பக்கக் கதவுகளால் வெளியேறி பின்னர் ஒருவருக்கு ஒருவர் எதிராக நின்று பார்ப்பதாகக்   கட்டம் முடிகிறது!

ஒட்டு மொத்தமாக, ,இன்றைய அத்தியாயம் மாதவி யின் சூழ்ச்சிகளால்
கார்த்திக்கும் ,ராஜியும் பிரிவது போல இருந்தாலும்,அவர்களுக்கு ஒருவர் மேல் ஒருவருக்கு உள்ள  காதலால் மட்டுமே இந்தவிதமாக நடந்து கொள்ள முடியும் என்பதே தெட்டத் தெளிவாகத் தெரிகிறது!
கார்த்திக்கில் மாதவிக்கு உள்ள அக்கறையும்,அவள் அவனைத தனதாக்கிக் கொள்ள செய்யும் அட்டகாசமும் ராஜிக்கு பிடிக்கவில்லை!
அதே போல கமலுடன் ராஜி கதைப்பதும்.சந்தோஷமாக இருப்பதுவும்
கார்த்த்க்கு பிடிக்கவில்லை!
இதற்கு என்ன அர்த்தம் என்று ஆராய்ந்து பார்த்தால் நடப்பது எல்லாமே இவர்களது உணர்வுகளைத் தூண்டி ஒருவரை  ஒருவர் இழக்காமல் அவர்கள்
தம்மைத் தாமே  ஒருவருக்கு ஒருவர்  சொந்தம் என்பதை நிலை நாட்டிக்  கொள்ள வேண்டுமென்ற ஆதங்கத்தில் எதைச் செய்யவேண்டும் என்று
தெரியாமல் செய்வதாகவே தெரிகிறது!
இதனால் உண்மை அன்பும் ,துடிப்பும்  இருக்கும் வரை அவர்கள் ,பல போராட்டங்களின் பின்பு சேர்ந்தது போலவே மீண்டும் சேர்வார்கள் என்பதை ரசிகர்களாகிய நாம் நம்பத்தான் வேண்டும்!
அது மட்டும் காத்திருப்போம்!
நம் எண்ணம் வீண் போகாது!
மீண்டும் ஆசிகளுடன்....!