EPISODE-442 அத்தியாயம்
-442
இன்றைய
அத்தியாயம் முழுக்க முழுக்க மாதவி
எவ்விதமாக ,சந்தர்ப்பம் பார்த்திருந்து கார்த்திக்கும்
,ராஜிக்கும் இடையில் பிரிவைக் கூட்டி
அவனைத் தன்பக்கம் இழுப்பதற்கு செய்யும் முயற்சியின் படிகள் என்றே சொல்லலாம்!
காட்சி-1
காலையிலே வேலைக்கு
புறப்படும் ராஜி கார்த்தி தன்
அறையிலே அசந்து தூங்குவதைக் காண்கின்றாள்.அவன் முதுகைக் காட்டிக்கொண்டு
தூங்குகிறான்.
அவள் சிறிது தயக்கமாகப் பார்த்தாலும்
கீழே இறங்கி வந்து
"ஹால்" முழுவதும் இறைந்து கிடப்பதையும் சாப்பாட்டு
மேசை,போட்டது போட்டபடியும்
அவனின் அப்பா அம்மாவின் படத்துக்கு
சாத்தியிருந்த மாலை எல்லாமே கழன்று
தொங்குவதைஎல்லாம் காண்கின்றாள் .பின்னர் கடிகாரத்தைப் பாரத்து
விட்டு
நேரம் காணாதது போல உடனேயே
புறப் பட்டு அலுவலகம்
வந்து சேர்கிறாள்.
அங்கே விஷ்ணு கார்த்திகைப் பற்றி
விசாரிக்கிறான் .
வீட்டில்
மின்சாரம் இல்லாததால் அவன் குளிர் நீரில்
குளித்து காச்சலைத் தேடிக் கொண்டதாகவும் கூறுகிறாள்;
அதற்கு
விஷ்ணு நகைச் சுவையாக பதில்
கூறிவிட்டு எதுவானாலும் ,அவள் வீட்டில் இருந்து கார்த்திக்கை கவனித்திருக்க
வேண்டும் என்று புத்தி கூறிச்
செல்கிறான்!
அவள் அவனுக்கு உடம்பு சரியில்லை என்றும்
தனக்கு ,ஒரு முக்கியமான
கூட்டம்
இருப்பதால் புறப்பட்டு வர வேண்டியதாயிற்று என்றும்
பதில் சொல்லுகின்றாள்.
இந்த சம்பாஷணையை
மாதவி உற்றுக் கேட்டு விட்டு,முகத்தில் கவலையுடனும் ,ஆனால் உள்ளத்தில்,கள்ளத்துடனும்
பவித்ராவிடம்
சொல்லிக்
கொண்டு அவனைப் பராமரிக்கப்
போவதாகக் கூறி
விட்டு
அவள் தடுக்கவும் கேட்காமல் புறப் பட்டுப் போகின்றாள்.
காட்சி
-2
கூட்டம்
நடக்கிறது.ராஜியின் எண்ணம் எல்லாம் கார்த்திகைப்
பற்றியதாக இருக்கிறது. அவனை அந்த நிலைமையில்
விட்டு விட்டு வந்ததை எண்ணி
மனம் வருத்துவதாக இருந்தது.
அவனுக்கு
ஒரு இடைவெளி எடுத்துக்
கொண்டு தொலை பேசியில் பேச
முனைகின்றாள்.அவனிடம் இருந்து ஒரு பதிலும்
கிடைக்கவில்லை!
வேதனையோடு
கூட்டத்தை தொடர்கின்றாள்!
அதே வேளையில் மாதவி கார்த்திக்,ராஜி
வீடு தேடி" ஆட்டோ " வில் சென்று கொண்டு
இருக்கிறாள்!
காட்சி-3
விஷ்ணு
,ராஜி அலுவலக சாப்பாட்டு அறையில்
சந்திக்கின்றனர்.
ராஜி கவலையுடன் இருப்பதைக் கேட்டு விஷ்ணு மீண்டும்
கார்த்திகைப்
பற்றி அக்கறையுடன் விசாரிக்கின்றான்.
ராஜி ,மிகவும் கவலையுடன் பதிலளிக்கின்றாள்.
விஷ்ணு
,அவளைக் குறை கூறுவதுடன் ,கார்த்திக்கு
ஏதாவது விபரீதமாகவும் நடக்கக் கூடும் என்றும்
உயிருக்கே ஆபத்தும் வரலாம் என்று பயமுறுத்தி
அவளை வீட்டுக்கு போகும் படி வேண்டிக்
கொள்கின்றான்.
.தான் பிறகு அவனை வந்து
பார்ப்பதாகவும் கூறுகிறான்!
ராஜி ,அவனது சொல்லுக் கிணங்க
உடனேயே புறப்பட்டு வீடு நோக்கி வருகின்றாள்!
அதேவேளையில்
மாதவி வீடைத் தேடிக்
கண்டு பிடித்து,வீட்டுக்குள் நுழைவதுடன்,கார்த்திக்கையும் மாடியில் கடும் ஜுரத்துடன் படுத்திருப்பதையும்
காண்கின்றாள்!
கவலையுடன்
அவனை நித்திரை யில் எழுப்பி மருத்துவமனைக்கும் போக
வரச் சொல்லுகின்றாள்.அவன் அதை மறுத்து
அவளையும் அங்கு வந்ததைப் பற்றி
திட்டுகிறான்!பிறகு மீண்டும் அசந்து
தூங்குகின்றான்.
மாதவியோ
அவனைத் தூங்க விட்டு விட்டு
அவனுக்கு "ஹோர்லிக்ஸ்" கரைக்க சமையலறைக்கு
செல்வதும், பின்னர் அவன் தூங்கிவிட்டது
கண்டு அதை அப்படியே வைத்து
விட்டு ,வீட்டைப் பெருக்கி",ஹால்" முழுவதையும் சுத்தம் செய்து ,சீர்
செய்து அவனது இறைந்து கிடந்த
உடுப்புக்களைஎல்லாம்
தோய்த்துக்
காயப் போட்டு அப்படியே ஒரு
ஆர்ப்பாட்டமான கவனமே தன் வீடு
போலச் செய்கின்றாள்.என்ன ஒரு கவனம்
என்று நமக்குத் தோன்றக் கூடியதாக
அவளது செய்கை அமைந்திருந்தது!
காட்சி
-4
ராஜி தன் வீடு தேடி
முகத்தில் , கவலயுடன் வந்து கொண்டு இருக்கின்றாள்
மாதவி மீண்டும் கார்த்திக்கின் அறைக்கு வந்து அவனை
தூக்கத்தை விட்டு நீக்க அவனை
"சார் சார் " என்று அழைத்து விட்டு ஒரு பதிலையும்
காணாததால் அவனது தலையைத் தொட்டுப்
பார்த்து அவனுக்கு ஜுரம் அதிகமாக
இருப்பதையும் கண்டு அவனது தலைக்கு
வென்னீர் ஒத்தணம் கொடுக்க ஆயத்தப் படுத்துகின்றாள்
.
இப்போது
ராஜி வீட்டுக்குள் நுழைகின்றாள்.
கொடியில்
காய்ந்து கொண்டிருக்கும் கார்த்திக்கின் துணி,மணிகளையும் கண்டு
ஆச்சரியப் படுகின்றாள் .
பின்னர்
வாசலில் கழற்றப் பட்டிருக்கும் புதிய
காலணிகளையும் காண்கின்றாள்."
வீட்டுக்குள்
நுழைந்தால்,அங்கேயும் நேர்த்தியாக இருக்கும்" ஹால்"
அவளை இன்னும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது.
மேல் மாடிக்கு விரைந்து செல்கின்றாள்
அங்கே அவள் கண்ட காட்சி
அவளை அப்படியே வாரித் தூக்கிப்
போடுகிறது.
மாதவி மிகவும் அன்னியோன்னியமாக கார்த்திக்கு
அருகில் இருந்து கொண்டு அவனுக்கு
தலைக்கு
ஒத்தணம் கொடுத்துக் கொண்டு
இருப்பதைக் காண்கின்றாள்!
ஆச்சரியமான
ராஜியின் முகத்துடன்
அந்தக்காட்சியுடன் அத்தியாயம் முடிகிறது!
ஒட்டு மொத்தமாக அருமையான அத்தியாயம்!
ராஜியின்
உணர்வுபூர்வமான நடிப்பும்,கார்த்திக்கின் அமைதியான ஆனால் சிறப்பான நடிப்பும்,விஷ்ணுவின் ,இயல்பான சிறந்த நடிப்பும்,மாதவியின் வில்லத்தனமான ஆனால் அருமையான நடிப்பும் ,பவித்திராவின்
சிறந்த நடிப்பும் இந்த அத்தியாயத்திற்கு மெருகூட்டியது
என்றே சொல்ல வேண்டும்!
மீண்டும்
ஆசிகளுடன்!

